தொடர்கள்
தொடர்கள்
கருத்து கதிர்வேலன்

20220414090212864.jpeg

தமிழ்நாட்டில் மின்வெட்டு என்பது உண்மைக்குப் புறம்பானது அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

ஆமாம் பொதுமக்கள்தான் சிக்கனம் கருதி மெயின் ஆப் செய்து வைத்துள்ளார்கள்

காங்கிரஸ் மாநிலத் தலைவர் பதவி பெண்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளோம் கே.எஸ்.அழகிரி

அப்ப இனிமே ரெண்டு கோஷ்டி தான் இருக்கும் ஆம்பள கோஷ்டி பொம்பள கோஷ்டி அதனே ஐடியா

ஜிப்மரில் இந்தியை கட்டாயப்படுத்த வலியுறுத்தவில்லை இயக்குனர் விளக்கம்

அச்சா அச்சா சுக்ரியா

பிறரை திருப்திப்படுத்துவதற்காக ஆன்மீகம் ஆன்மீகம் என்று அரசு தம்பட்டம் அடிக்க வேண்டுமா கி.வீரமணி

உங்க ஒருவரை திருப்திப்படுத்த பெரியார் பெரியார் என்று சொல்ல சொல்றீங்களே என்று கேட்கிறார் சேகர்பாபு

சட்டப்பேரவை நிகழ்ச்சி முழுவதையும் நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் பழனிச்சாமி கோரிக்கை

இந்த யோசனை எல்லாம் நீங்கள் எதிர்க்கட்சியான பிறகு தான் உங்களுக்கு தோணுது

துணைவேந்தர் நியமனம் அரசுக்கு அதிகாரம் சட்டப்பேரவையில் மசோதா அறிமுகம்

ஆளுநரை ரப்பர் ஸ்டாம்ப் ஆக்குவது என்று தீர்மானமே பண்ணிட்டீங்க போல இருக்கு.

நாட்டில் அனைத்திலும் தனியார்துறை வரலாம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

ஏற்கனவே வந்தாச்சு மேடம்

ஆன்மிகப் பெரியவர்களின் ஆவேசத்திற்க்கு தமிழக அரசு எதிர்வினை ஆற்றாது அமைச்சர் சேகர்பாபு

ஆமாம் அதெல்லாம் வீரமணி இலாகா

ராஜ்யசபா எம்பி ஒதுக்க திமுகவிடம் கேட்போம் கே.எஸ்.அழகிரி

நீங்கள் கேட்பீங்க அவங்க தருவாங்களா

இரண்டு இந்தியாவை உருவாக்குகிறார் மோடி ராகுல் காந்தி

நல்லதா போச்சு ஒரு இந்தியாவுக்கு நீங்கள் பிரதமராக வர பாருங்க