தொடர்கள்
அனுபவம்
கருத்து கதிர்வேலன்

2022060207534124.jpeg

எல்ஈடி விளக்குகள், கிரைண்டர்கள் ஜிஎஸ்டி உயர்வு

இப்படிக் கூட்டம் போட்டு வரி உயர்த்துவதற்கு பதில் கூட்டம் போடாமலேயே வரி உயர்த்தலாம் போக்குவரத்து செலவாவது மிச்சமாகும்.

50 பேருக்கு மேல் பங்கேற்கும் .நிகழ்ச்சிகளுக்கு தடை முதல்வர் தலைமைச் செயலாளருக்கு பெங்களூர் புகழேந்தி கடிதம்.

அதாவது அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி தரக்கூடாது அப்படித்தானே புகழேந்தி

மேயருக்கான ஆடையில் உதயநிதி காலில் விழுந்தார் தஞ்சை மேயர்.

இது ஒரு மாதிரியான திராவிட விசுவாசம் இனிமே அப்படித்தான் இருக்கும்

மக்கள் பிரச்சனையில் திமுகவையும் எதிர்த்து நிற்போம் கே.பாலகிருஷ்ணன்

ஆமா சும்மா நிற்போம் அவ்வளவுதான்

சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் அசாம் மாநிலத்துக்கு 51 லட்சம் நிதி உதவி.

ஓட்டல் பில் எல்லாம் அவங்க தானே செட்டில் பண்ணாங்க அதுக்கு பதில் மரியாதை

வருகிற மக்களவைத் தேர்தலில் தமிழக பாரதிய ஜனதா கட்சிக்கு 25 எம்பிக்கள் கிடைப்பார்கள் அண்ணாமலை

ஆமாம் கிடைப்பார்கள் ஜெயிப்பார்களா ?

அதிமுகவின் தாயாக இருந்த ஜெயலலிதாவை மறந்துவிட்டார்கள் கி.வீரமணி

அந்த சமூகநீதி காத்த வீராங்கனை நீங்க மறக்க மாட்டீங்க எனக்கு தெரியும்

சதிவலை யாரால் பின்னப்பட்டது என்று எனக்குத் தெரியும் ஓபிஎஸ்.

தெரிஞ்சா சொல்ல வேண்டியது தானே தைரியமா என்கிறார் இபிஎஸ்.

ரூபாய் மதிப்பு சரிவு நிதியமைச்சர் விளக்கம்.

அதாவது மாதாமாதம் இப்படி சரியும் தான் பயந்து விடக்கூடாது என்கிறார்

வியாபாரிகளை ஜிஎஸ்டி வரி எளிமை ஆக்கியது தமிழக ஆளுநர் ரவி

வியாபாரிகளை ஏழையாக்கி விட்டது என்கிறார் முதல்வர்

சசிகலாவின் பினாமி சொத்துகள் முடக்கம்.

பினாமிக்கே ஒரு பினாமியா பேஷ் பேஷ்

ஒரே போஸ்டரில் ஓபிஎஸ் டிடிவி தினகரன் படம்

இதெல்லாம் ஒரு முன்னோட்டம் தான்

ஒருங்கிணைப்பாளர் என்ற உணர்வில் நீங்கள் எழுதிய கடிதம் செல்லாது எடப்பாடி

அவ்வளவு ஏன் நீங்களே செல்லாது தான்

புகாருக்கு கவுன்சிலர்கள் ஆளாக கூடாது அமைச்சர் நேரு அறிவுரை

அதாவது புகார் வராதபடி சூதானமா நடந்துக்கணும் என்கிறார் விவரமான அமைச்சர்.