தொடர்கள்
கற்பனை
மிஸ்டர் ரீல் - நடிகர் விஜயுடன்.....

20230021075509965.jpeg

மிஸ்டர் ரீல் நடிகர் விஜய்யை சந்திக்கப் போனபோது யாரிடமோ செல்பேசியில் "அப்படியா .அப்படியா என்று கேட்டு ஷாக் ஆகிபோனார். செல்பேசி தொடர்பை துண்டித்ததும் மிஸ்டர் ரீல் "என்ன அப்படியா அப்படியா" என்று கேட்டார். "துணிவு படத்துக்கு தான் வாரிசு படத்தை விட வசூல் ஜாஸ்தி " என்று விஜய் சொன்னதும் "உங்க படத்தை விட அவர் படத்துக்கு எத்தனை கோடி வசூல் அதிகம் "என்று கேட்க அதற்கு நடிகர் விஜய் 115 ரூபாய் என் படத்தை விட அஜித் அண்ணா படத்துக்கு வசூல் ஜாஸ்தி . ஆனால்,சமூக வலைத் தளங்களில் YOUTUBE-களில் ஒரு கணக்கை அடிச்சு விடுறாங்க நேற்று வருமானத்துறை அதிகாரி ஒருவர் இன்றைய வசூல் நிலவரப்படி நீங்கள் 18 கோடியே , 5லட்சத்து, 18 ஆயிரம் ரூபாய் 65 காசு வரி கட்ட வேண்டும் என்கிறார்.

நான் ஏன் சார் வரி கட்ட வேண்டும் என்று நான் கேட்டபோது இந்தப் படத்தோட சைலன்ட் பார்ட்னர் நீங்க தான் என்று எங்களுக்கு தெரியும் என்கிறார். அந்த அதிகாரி உங்களுக்கு யார் இந்த தகவலை சொன்னது என்று கேட்டால் எங்கள் கமிஷனரின் மனைவி வாட்சப் குரூப்பில் இந்த விஷயம் வந்திருக்கிறது அவர் கணவருக்கு ஃபார்வேர்ட் பண்ணார் உடனே மீட்டிங் போட்டுவசூல் கணக்க என்ன ஃபாலோ பண்ண சொல்லி இருக்காங்க என்றார். அந்த அதிகாரி உடனே நான் வாட்ஸ் அப் தகவலுக்கெல்லாம் மீட்டிங்கா உங்களுக்கே இது கொஞ்சம் ஓவரா தெரியவில்லையா என்று கேட்டேன் மிஸ்டர் ரீல் என்று விஜய்கொஞ்சம் மூச்சு வாங்கிக் கொண்டு தொடர்ந்தார். அந்த அதிகாரி நாங்கள் எல்லா தகவலையும் உண்மை என்ற கோணத்தில் தான் விசாரிப்போம் அப்போது தான் எங்களுக்கு உண்மை தெரியும் என்கிறார் அந்த அதிகாரி என்று அலுத்துக் கொண்டார் நடிகர் விஜய்.

அப்போது மிஸ்டர் ரீல் " எனக்கு என்னவோ உங்களோட உங்களுக்கு சமமா ஓட்டப்பந்தயத்தில் ஓட்ற ஜோசப் விஜய் தான் பிரச்சனை மாதிரி தெரியுது "என்று சொல்ல உடனே" அன்றைக்கு மேடையில் கைவசம் குட்டிக்கதைகள் எதுவும் இல்லை அதனால சும்மா அடிச்சு விட்டேன் அதுல என்ன பிரச்சனை" என்று நடிகர் விஜய் கேட்கநீங்க இப்படி சொல்றீங்க ஆனா நீங்க ஜோசப் விஜய் அப்படின்னு சொன்னதும் உதயநிதி நானும் கிறிஸ்துவன்தான் என் மனைவி கிறிஸ்டின் நான் படிச்ச பள்ளி காலேஜ் எல்லாமே கிறிஸ்துவ நிறுவனம்தான் என்று சொல்லிவிட்டார். அவர் பாவம் நீங்கதான் அவருக்கு போட்டியாளர் என்று பயப்படுகிறார் என்று மிஸ்டர் ரீல் சொல்ல "அப்படியா "என்று விஜய் ஆச்சரியமாக கேட்டார்.

அப்போது மிஸ்டர் ரீல் அது சரி பாராளுமன்றத் தேர்தலில் பத்து இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடப் போகிற தாமே "என்று கேட்க உடனே விஜய் "உங்களுக்கு இந்த தகவல் சொன்னது யார் எங்க அப்பாவா "என்று ஆவேசமாக கேட்க அதற்கு மிஸ்டர் ரீல் "உங்க அப்பா பாவம் அப்பாவி அவர் பாட்டுக்கு ஓரமா உட்கார்ந்திருக்கிறார்" என்று சொல்ல "அப்ப இந்த தகவல் உங்களுக்கு சொன்னது யார் "என்று விஜய் ஆர்வமாக கேட்க இதுவும் சமூக வலை தகவல் தான் "என்றார் மிஸ்டர் ரீல்.

உடனே நடிகர் விஜய் யாருக்கோ போன் போட "டைரக்டர் நான் தான் பேசுறேன் இந்தப் படத்துல சமூக வலைதள அட்ராசிட்டி பற்றி நிறைய காட்சிகள் வரணும் நான் மட்டும் 10 பஞ்ச் டயலாக் பேசணும் ஒரு டயலாக் சொல்றேன் கேட்டுக்கோங்க சமூக வலைதளம் எனக்கு சகலை கிடையாது இந்த நிச்சயம் வரணும்" என்று சொல்லி தொடர்பை துண்டித்தார் நடிகர் விஜய்.

"அப்போ இந்த சினிமாவில் நீங்க பேசுற பன்ச் எல்லாம் உங்கள் சொந்த சரக்கு தானா "என்று மிஸ்டர் ரீல் கேட்க அதற்கு ஒரு மாதிரி சிரித்து மழுப்பினார் நடிகர் விஜய் அப்போதும் மிஸ்டர் ரீல் விடாமல் "அந்தப் பத்து பாராளுமன்ற தொகுதி விஷயம் "என்று இழுக்க சரி "மிஸ்டர் ரீல் நீங்க இத நம்புறீங்களா "என்று நடிகர் விஜய் கேட்க உடனே மிஸ்டர் ரீல் "விஜய் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகளை மாவட்டம் மாவட்டமாக அழைத்து பிரியாணி போட்டு செல்பி எல்லாம் எடுத்துக் கொள்கிறீர்கள் கூட்டி கழித்து பார்த்தால் கணக்கு சரியாகத் தான் வரும் போலிருக்கிறது" என்று மிஸ்டர் ரீல் சொல்ல மீண்டும் செல்பேசியை எடுத்துயாருக்கோ போன் செய்து அடுத்த வாரம் வரும்விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு பழைய சோறு எலுமிச்சை ஊறுக்காய் ஏற்பாடு பண்ணிடுங்க" என்று சொல்லிவிட்டு செல்பேசியை வைத்தார் இப்போதும் பந்தா காட்டாத விஜய் பழைய சோறு எலுமிச்சை ஊறுகாய் என்று சமூக வலைத்தளம் பத்திக்கொள்ளும் கூடவே விஜய் திடீர் முடிவு 15 பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட ஆலோசனை என்று பரபரப்பு பற்றிக்கொள்ளும் "பரவாயில்லையா என்ற மிஸ்டர் ரீல் சமூக வலைதளம் ரொம்ப ஷார்ப்பு சந்தேகம் இருந்தா உங்க பையன் கிட்ட கேளுங்க என்றார் மிஸ்டர் ரீல்

"அப்ப நான் என்னதான் செய்யறது" என்று நடிகர் விஜய் கேட்க ""படிச்சிட்டு சிரிச்சிடுங்க "என்ற மிஸ்டர் ரீல் "இன்னொரு வதந்தி கூட உங்களை பற்றி இருக்கு அத கேட்டா நீங்க டென்ஷன் ஆயிடுவீங்க வேண்டாம் "என்று சொல்ல உடனே நடிகர் விஜய் முகத்தை அமைதியாக வைத்துக்கொண்டு நான் டென்ஷன் எல்லாம் ஆக மாட்டேன் நீங்க பயப்படாம சொல்லுங்க "என்று சொல்ல அன்னைக்கு மேடையில நடிகர் சரத்குமார் அடுத்த சூப்பர் ஸ்டார் நீங்க தான் என்று சொன்னது கூட நீங்க சொல்லி தான் என்று ஒரு தகவல் இருக்கு "என்று தயங்கியபடியே மிஸ்டர் ரீல் சொல்ல ஆவேசமான நடிகர் விஜய் "நாட்டாமை தீர்ப்பை மாத்து "என்று கூச்சலிட என்ன ஏது என்று பயந்து போய் அப்பா சந்திரசேகர் அம்மா ஷோபா வாட்ச்மேன் கார் டிரைவர் சமையல்காரம்மா என்று எல்லோரும் ஓடி வர ரொம்ப டென்ஷன் ஆயிட்டாரே என்று யோசித்தபடியே மெல்ல எஸ்கேப் ஆனார் மிஸ்டர் ரீல்.