தொடர்கள்
அரசியல்
கருத்து கதிர்வேலன்

20230224182335110.jpeg

சட்டமன்றத்தில் திமுக எம்எல்ஏக்கள் புகழ் பாடக்கூடாது முதல்வர் ஸ்டாலின்.

இது தலைவர் வழக்கமா சொல்றதுதான் நம்ப உதயா அண்ணாவுக்கு ஜால்ரா தட்டற பழக்கத்தை விட கூடாது அண்ணே

உலகின் மிக முக்கிய கட்சி பாரதிய ஜனதா அமெரிக்க நாளிதழ் கருத்து.

இந்த விஷயம் எடப்பாடிக்கு தெரியலையே

எதிர்க்கட்சிகள் விமர்சித்தால் அமைதியாக இருக்க வேண்டும் திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்.

ஆமா அவங்கள ஊழல் தடுப்பு போலீஸ் பார்த்துக்கும் அப்படித்தானே தலைவரே

டாஸ்மாக் வருமானம் 50,000 கோடியாக எதிர்பார்ப்பு நிதித்துறை செயலாளர்.

இதே ஒரு சாதனையா கொண்டாடுவார்களோ என்னவோ யார் கண்டது

மத்திய அரசை விமர்சிப்பது நாட்டை விமர்சனம் செய்வதாகாது இதை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும் காங்கிரஸ் கட்சி.

ஆனால் பாரதிய ஜனதா நீங்க சொல்றத தப்பா புரிஞ்சிக்கிறாங்க அத நீங்க இன்னும் புரிஞ்சுக்கல இதான் மேட்டர்

அதானி விவகாரம் நாடாளுமன்ற விசாரணைக் குழுவில் மட்டுமே உண்மை வெளிவரும் காங்கிரஸ் கட்சி.

அதெல்லாம் சரி அந்த உண்மைய சொல்ல போறவங்க யாரு அத முதல்ல சொல்லுங்க

தமிழக விவசாய பட்ஜெட் வேளாண் பெருமக்களை பாதுகாக்கும் கமலஹாசன்

தலைவர் கூட்டணி என்பதால் இப்ப கொஞ்சம் புரியிற மாதிரி பேச ஆரம்பிச்சுருக்காரு

ராணுவத்துக்கு பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கீடு பாராளுமன்ற நிலைக்குழு வலியுறுத்தல்.

அப்போ பிரதமருக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு கிடைக்காதே பரவாயில்லையா

புதுச்சேரி அரசு பேருந்தில் மகளிர்க்கு இலவசப் பயணம் பேரவையில் முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு.

தேர்தல் வாக்குறுதிகளை நம்மள விட அவங்க பாஸ்டா நிறைவேத்துறாங்கன்னு ஒரு பேச்சு வருது தலைவரே அதை கொஞ்சம் கவனிங்க.

தனித்தமிழ் சொற்கள் எவை என்பது நம்மில் பலருக்கு தெரியவில்லை மருத்துவர் ராமதாஸ்

ஐயா ஏற்கனவே அம்பதாயிரம் மாணவர்கள் தமிழ் தேர்வு எழுதாமல் ஓடிப் போயிட்டாங்க நீங்க இப்படி எல்லாம் பேசினா அவங்க ரொம்ப பயப்படுவாங்க

மருமகன் சபரீசன்காக பத்திரப்பதிவு கட்டணத்தை குறைத்து இருக்கிறார் ஸ்டாலின் முன்னாள் அதிமுக அமைச்சர் வைகை செல்வன்

நல்லவேளை துர்கா ஸ்டாலினுக்காக குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் என்று சொல்லாமல் விட்டாரே

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் ஓ பன்னீர்செல்வம் போட்டி போட தயார் ஐகோர்ட்டில் பரபரப்பு தகவல்.

இது பரபரப்பு தகவல் மாதிரி இல்ல ஏதோ காமெடி மாதிரி இருக்கு

இரண்டு மாதத்தில் ஒரு கோடி பேரை கட்சியில் உறுப்பினராக சேர்க்க இலக்கு திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் முடிவு

ஒரு கோடி வாக்காளர் அட்டை நமக்கு தேவையாச்சே அவ்வளவு அட்டைக்கு நாம் எங்கே போவது கவலைப்படுகிறார் ஒரு திமுக தொண்டர்

எதிர்க்கட்சிக் கூட்டத்துக்கு சரத் பவர் அழைப்பு

எதிர்க்கட்சியிலேயே எதிர்க்கட்சி இருப்பது தலைவருக்கு தெரியாது போல இருக்கு