தொடர்கள்
கதை
மறு பிறவி -5- கி ரமணி )

2024032616420432.jpeg

"என் பேரும் உன் இஷ்டம் தான்.

தாடகை, சூர்ப்பனகை இடும்பி னு எது பிடிச்சிருக்கு.எல்லாம் உங்க இதிகாச அழகிகள் பேரு தான்."என்று வானவில் போல நிறங்கள் சிதறச் சிரித்தாள்

அந்த வேற்று கிரகப் பெண்.

"சே சே. ரதின்னு வேணும்னா வெச்சுக்கோ."என்று ஒரேடியா ஜொள்ளு விட்டான் ஆதி.

"உனக்கு எப்படி தமிழ் தெரிந்தது?"

"எங்களிடம் உங்கள் உலகத்தின் 'மொழிகள் மாற்றி', எப்பவும் உண்டு.

அந்தப்பெட்டியில் தங்கம் என்ற உலோகத்தினால் ஆன ஆபரணங்கள்.....மொழி மாற்றம் சரி தானே... வைத்திருக்கிறாயா.?

அதிர்ந்து போனான் ஆதி.

"எப்படி தெரியும்?"

" என் கண்ணில் ஸ்கேனர் உண்டு."

"உனக்கு என்ன வேணும்?"

சிரித்தாள் ரதி.

இன்னும் கொஞ்சம் மிதந்து அவன் அருகே வந்தாள். தன் விரலால் அவன் கையை தொட்டாள்.

ஒரு பெண் தொட்டால் கதைகளில் வழக்கமாக ஆணுக்கு ஷாக் மாதிரி அடிக்கும். இங்கு ஆதிக்கு நிஜமாவே ஷாக் அடித்தது. மிகச் சிறிய பொறுத்துக் கொள்ளும் படியான கரண்ட் ஷாக்.

"ஆதி! உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.நீ என்னோட வரியா! உனக்கு பிரபஞ்ச வெளியை சுற்றிக் காட்டறேன்.

நீயும் என்ன மாதிரி ஒளி வடிவில் மாறிவிட்டால் ஒளியின் வேகத்தில் ஜாலியா அண்டம் சுற்றலாம்.

ஒரே நாள் திரும்பி இதே இடத்தில் உன்னை உன் உருவில்

விட்டுவிடுவேன்.

பின்னர் நீயாக விரும்பி என்னை நினைத்தால் மட்டும்.. உன்னை திரும்பவந்து கூட்டிச் செல்வேன்.

நான் ஒரு நாள் உன் தங்க ஆபரணங்களை ஜாலியா அணிந்து கொள்வேன்.

உன்னைக் கீழே இறக்கும்போது எல்லா ஆபரணங்களையும் ஒன்றுக்கு இரண்டாக மாற்றி உனக்குக் கொடுத்து விடுகிறேன். உன்னுடைய அதே தங்கத்தின் இரட்டைப்பிறவி போல ஒரிஜினலாக... உன் கடனும் தீரும்."

ஆதிக்கு அவள் சொன்னது, அந்த "டீலிங்ஸ் "எல்லாம் பிடித்துப்போச்சு.

"கடைசில சொன்னாளே.. எல்லா நகையையும் டபுள் ஆக்கி குடுக்கறேன்னு.. ஆஹா. வேற என்ன வேணும். அப்போ 500 பவுன மனைவிட்ட குடுத்து மத்த 500 பவுன வித்து கடன் அடைச்சிடலாம்." என்று

எண்ணி.

"இம்ம். ஓகே. கிளம்பலாமா ரதி".. என்று

சொல்லி ஷாக்கைப் பொறுத்துக்கொண்டு ரதி கையைப் பிடிக்க, அவள் அவனை மெதுவாக அந்த பலூனுக்குள் ஏற்றி தானும் ஏறிக் கதவடைக்க,.

தீபாவளி தரைச்சக்கரம் போல தீப்பொறிகள் பலூனை சுத்தி கிளம்ப திடீர் என பலூன் ஒளி வடிவில் வானில் மறைந்தது.

************-

டிசம்பர் 4..2023 காலை 10 மணி

சித்தார்த்தும் நாடலியும் தாத்தா வீட்டுக்குள் கூடத்தில் வந்து அவர் படத்தை மேஜை மீது வைத்து மலர் தூவி அலங்காரம் செய்திருந்தனர்.

ப்ரோகிதர் வந்து மந்திரங்கள் சொல்ல ஆரம்பித்த தருணத்தில் ஆதி

பழைய டிரங்க் பொட்டியும் கையுமா

வீட்டுக்குள் நுழைந்து கூடத்தில் நின்றான்.

"யார் நீங்க?. என்ன நடக்குது இங்கே?

தம்பி, நீ யாருப்பா.? யார் இந்த வெள்ள க்காரக்குட்டி? ப்ரோகிதரே. ஊருக்கு புதுசா?. நம்ம வீ ட்டில் என் போட்டோக்கு ஏன் பூஜை பண்ணுரீர்.? வீடேல்லாம் ஏன் மாறிஇருக்கு?" என்றான் ஆதி.

சித்தார்த் கடுப்பாகி, "ஹல்லோ யாருப்பா நீ. திறந்த வீட்டுல ஏதோ மாதிரி நுழைஞ்சு கலாட்டா பண்ணறே.

. ப்ரோகிதரே, கொஞ்சம் போலீஸ சொல்லி வரச் சொல்லுங்க."

"யாருப்பா நீ? நான் தான் ஆதிசேஷன். இந்த வீட்டுக்காரன்.

யார் நீங்க எல்லாம்.?"

"யாரா?. நான் தான் ஆதி சேஷனோட

பேரன். இப்ப வீட்டு சொந்தக்காரன்.

ஆதி சேஷன் காணாம போயி 60 வருஷம் ஆச்சு. அவரு இருந்தா இன்னிக்கு அவருக்கு 100 வது பொறந்த நாள். உயிரோட அவர் இருந்து இங்க வந்தாக்கூட இப்போ ஒரு

பொட்டலம் மாதிரி தான் இருப்பார்.

நீ ஜம்முன்னு 40 வயசுக்காரன் போல

இருக்கே. நான் தான் ஆதி சேஷன் என்கிற.புடிச்சு உள்ள தள்ளிடுவேன்."

.... என்ற சித்தார்த்தை நாடலி அழைத்து

ஏதோ அவன் காதில் கிசு கிசுத்தாள்.

சித்தார்த் பூஜையில் வைத்திருந்த ஆதி சேஷன் படத்தையும்,, நிஜ ஆதியையும் மாத்தி மாத்தி பார்த்து அசந்து போய்" மை காட்" என்றான்.

ஆதியைப் பார்த்து " எப்படிப்பா நீ எங்க தாத்தா சின்ன வயசுல இருந்த மாதிரி இருக்கே. அவரோட மறு ஜென்மமா? என்றான்

"மறு ஜென்மமும் இல்லை

மண்ணாங்கட்டியும் இல்ல. நான் ஆதியே தான். ஒரு நாளைக்கு வெளி கிரகத்துக்கு வான் வெளில போய் வந்தேன். அவ்வளவு தான். இங்க என்னென்னவோ ஆயிருக்கு." என்ற ஆதி , "சரி செல்லம்மா எங்கே? என் குழந்தை பூமா எங்கே " என்றான்.

அதிர்ச்சில இருந்து மீளாத சித்தார்த்

"எங்க பாட்டி செல்லம்மா இறந்து ஒரு மாசம் மேலாறது. அங்க பார்." என்று மாலை போட்ட பாட்டி போட்டோவை காண்பித் தான்.எங்கம்மா தான் பூமா.

இப்போ அமெரிக்கால இருக்கா. "

ஆதியால் நம்ப முடியல. இந்த வயசான

கிழவியா செல்லம்மா.? இறந்து போய்விட்டாளா?. என்னதான் செல்லம்மாவுடன் எப்பொழுதும் சண்டை என்றாலும் ஒரே நாள் வித்யாசத்தில் அவள் இவ்வளவு கிழவியாகி இறந்ததை அவனால் ஜீரணிக்க முடியல. "

என் பெண்ணுக்கும் ரொம்ப வயசாயுட்டுதா?ஒரு வேளை எனக்கும் நூறு வயசு நிஜமா ஆயிடுத்தா?. இது 1963 ம் வருஷம் தானே. இல்லையா"... என்று சுத்தி முத் திப் பார்த்த ஆதி சுவரில் இருந்த காலெண்டரைப் பார்த்தான். திட்டுக்கிட்டான்.

ஆமாம் 2023 ம் வருஷம் தான் இது.

கோவில் காலண்டரும் 2023 தான்

காட்டியது.

1963 இல்லை.

அப்படின்னா ஒரு நாள் ரதியோட போன என் விண் பயணத்தில், இங்கு 60 வருஷம் கடந்திருக்கு. நம்ப முடியலையே. அது தான் 1923 இல் பிறந்த எனக்கு 2023 ல நூறு வயசு தானே. அட கஷ்ட காலமே.!" என்று

மனசுக்குள் புலம்பினான் ஆதி.

சிறிது நேர மௌனத்துக்குப் பின்

சித்தார்த் பேச ஆரம்பித்தான்.

"நீங்க தான் என் நூறு வயசு தாத்தா என்ற கதையை நாம் பேசும் முன், எங்க தாத்தா எடுத்துக்கொண்டு ஓடினதாகச் சொல்லப்பட்ட 500 பவுன் நகையும் வீட்டுப் பத்திரமும் எங்கே சொல்லுங்கள்? "

ஆதி எழுந்து தன் டிரங்க் பொட்டிய கவுக்க 500 x2 =1000 பவுன் ( ரதி கொடுத்ததும் சேர்த்து ) கொட்டியது!

(தொடரும் )