ஜோதிட சக்ரவர்த்தி ஏ.எம்.ஆர் அவர்களின் பேட்டி சென்ற வார சென்சேஷன்.
உலகமெங்கும் உள்ள ஆன்மீக தமிழ் நேயர்கள் அவரை நேரிலேயே பார்த்து புளகாங்கிதப்பட்டது போல யூடியூபில் காமெண்டுகளாகவும் லைக்குகளாகவும் போட்டு தள்ளி விட்டனர்.
அதை அவரிடம் சொன்ன போது அவருக்கும் ஏக மகிழ்ச்சி.
இப்படிப் பட்ட ஒரு மகானிடம் பேட்டி ஏற்பாடு செய்த மேப்ஸுக்குத் தான் முதல் நன்றி.
இந்த வாரம் பேட்டி தொடர்கிறது......
ஜோதிடம் பற்றியும், காஞ்சி சங்கராச்சாரியாருக்கு ஜாதக பலன் பார்த்தது பற்றியும், நம் கல்வி முறையில் என்ன மாற்றம் வர வேண்டும் என்பது பற்றியும் சொல்கிறார் அவர்.
இந்த நூறு வயதில் மறக்க முடியாத விஷயம் என்ன என்று கேட்ட போது ஒரு சுவாரஸ்யமான விஷயத்தையும் விவரித்தார். மந்த்ராலயத்தில் நடந்த ஒரு மகத்தான விஷயம் அது.
அது மட்டுமல்ல, அவரது இஷ்டதெய்வமான பூவரசங்குப்பம் லக்ஷ்மி நரசிம்மர் தான் இந்த வாரா ஆன்மீகப் பகுதியில் ஆரூர் சுந்தரேசன் எழுதியிருக்கிறார். இதுவும் விகடகவி ஏ.எம்.ஆருக்கு செய்யும் மரியாதை தான்.
Leave a comment
Upload