
முலன்ட் மும்பாயின் முக்கியமான மிகவும் சுறு சுறுப்பான பகுதியில் உள்ள அந்தப் பிரபல உடல் உறுப்பு மாற்றுச் சிகிச்சை ஹாஸ்பிடல்….
“இறந்து போன சுனிதா குடும்பமும், என் குடும்பம் மாதிரி தான். இதோ அவ கொடுத்த இந்தக் கையினால் அவள் அண்ணனுக்கு இல்லை இல்லை என் அண்ணனுக்கு வரும் வருடம் ராக்கி கட்டி விடுவேன்” நானும் இனி அவங்க வீட்டு பொண்ணு தான்.என்று அந்த ஹாஸ்பிட்டலில் சிகிச்சை முடிந்த பின் அனிதா இப்படிச் சொன்ன போது, ஒட்டு மொத்த அனிதா குடும்பமும் சுனிதா குடும்பமும் மிகவும் நெகிழ்ச்சி ஆனது.
“அன்று என் வாயில் சனி புகுந்ததே காரணம் ; பாவம் குழந்தை பூரிகேட்ட போது உடனே கொடுக்காமல் அவளை மொட்டை மாடிக்கு அனுப்பிய பாவி நான்.”
புலம்பி தவித்தாள் அனிதாவின் அம்மா.
“காட்ஹோபரில் வசிக்கும் நாங்கள் அந்த ஃபிளாட் மொட்டை மாடியில் இந்தத் துணிகளைக் காயப் போட்டு வரையா அனிதா; நீ வேலை முடிச்சவுடன் பிரேக்ஃபேஸ்ட் . ஒனக்கு பிடிச்ச பூரி மசாலா ரெடியா இருக்கு. சாப்பிடலாம். லிஃப்ட் மூலம் போ. நேத்து ராத்திரி மழை பெஞ்சிருக்கு. ஜாக்கிரதை. “ என்று நான் அன்று சொல்லாமல் இருந்திருந்தால் இந்த விபத்து நடந்துருக்குமா? “
” சரிம்மா “ மொட்டை மாடிக்குப் போய்த் துணியைக் காயப் போடுகிறேன் என்று
எட்டு வயது நிரம்பியஅனிதா சந்தோசமா துணிகளை எடுத்து போனவள் , முதல் நாள் இரவு பெய்த கடும் மழையினால், அறுந்து விழுந்துக் கீழே கடந்த 11கே.வாட் லைவ் ஒயரை தன்னையறியாமல் மிதிக்கப் போய்த் தூக்கி எறியப்பட்டு “அய்யோ அம்மா “ ஓடம்பெல்லாம் எரியுதே என்கிற அலறல் சத்தம் கேட்கவே, அந்த எட்டு மாடி பிளாட்டில் இருந்த அனைவரும் ஓடி போய்ப் பார்த்ததில், அனிதாவின் இரண்டு கைகள் மற்றும் உடம்பு முழுவதும் தீப்புண் காயம்.
உடனடியாக ஹாஸ்பிட்ட லில் சேர்க்க டிரீட்மென்ட் முடிவில்உடல் காயங்கள் ஏற்பட்டதால் தொற்றுநோய்களின் தாக்கத்தினால, இரத்தச் சுற்றோட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டு, இத்தகைய இழைய அழுகல் ஏற்பட்டு உள்ளது. இதற்கு Gangrene
என்று ஆங்கிலத்தில் சொல்வோம்; எனவேஅவளுடைய வலது கையைஎடுக்கும்படி சூழ்நிலை வந்துருக்குஎன்று டாக்டர் கூறவும்
விம்மி விம்மி அழுதார்கள் அனிதாவின் பெற்றோர்கள்.
“இதற்கு மாற்று வழி இல்லையா டாக்டர்?” என்று அனிதா அம்மா கேட்டபொழுது. “
இருக்கு மாற்றுச் சிகிச்சை ஒன்று தான் ஆனால் அது மிகவும் கடினமான வழி. ஒரு முழுக் கை கிடைக்க வேண்டும்.
எதற்கும் நீங்கள் மாதுங்காவில் உள்ள Donate Life என்கிற அமைப்பில், உங்கள் தேவையைப் பதிவு செய்துவைக்கணும்.எப்போது எப்படிக் கிடைக்கும் என்று சொல்வது மிகவும் கடினம் “.
“அது மற்றவர்களுக்கு ஆர்கன் அதாவது உடல் உறுப்புகள் கொடுக்கும் தன்னலமற்ற அமைப்பு.
எண்ணற்ற பேர்கள் இதன் மூலம் பலன் அடைந்து உள்ளார்கள்.
கடவுளை பிரார்த்திப்போம் நல்லதே நடக்கும்.”
டாக்டர் கனிவோடு பேசிய விதம் அனிதாவின் பெற்றோர்களுக்கு ஒரு தெம்பை கொடுத்தது.
ஒவ்வொருநாளும் அனிதா படும் அந்த ரணவேதனை கண்கலங்கசெய்தது .ஆனாலும் அவள் உயிர் பிழைத்துக் கூடிய சீக்கிரம் எழுந்து நடமாட வேண்டி கடவுளைப் பிராரர்தனை செய்தனர் பெற்றோர்கள்.
“எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை டாக்டர் எப்படியாவது அனிதாவுக்கு மாற்று சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யுங்க டாக்டர்” தினமும் கெஞ்சினாள் அனிதாவின் அம்மா.
ஆனால் அவர்களின் பிரார்த்தனை கடவுளின் காதில் விழுந்ததாக. தெரியவில்லை.
அனிதாவின் நிலைமை பார்த்து பரிதாப பட்ட ஃபிளாட் குடியிருந்தவர்கள் தங்களால் ஆன பொருளுதவி செய்தார்கள்.
எல்லாவற்றுக்கும் நேரம் வரவேண்டும் . என்று மற்றவர்கள் சமாதானம் சொல்லிவிட்டு போனார்கள்.
டோம்பிவிலி ஆறு மாடி ஃபிளாடடில் மூன்றாவது மாடியில்
“அம்மா எனக்கு வாந்தி வருதும்மா.குமட்டிகிட்டி வருதும்மா.”
ஸ்கூல் முடிந்து வீட்டுக்கு வந்ததும் சுனிதா சொல்ல,
ஸ்கூல் ப்ரேக் டயத்தில் ஏதாவது வாங்கிச் சாப்பிட்டாயா? புட் பாய்சன் ஏதாவது இருக்கும்” .
“இல்லம்மா நீ கொடுத்த லஞ்ச் மட்டும் தான் சாப்பிட்டேன்.”
பேசிக்கொண்டு இருக்கும் போது வாந்தி எடுத்தவள் “அம்மா எனக்குப் பயங்கரமா தலையை வலிக்குத்து மண்டைய பிளக்குதும்மா என்னால தாங்க முடியல?”
பதறிப்போன சுனிதாவின் அப்பாவும் அம்மாவும்டோம்பிவிலியில் உள்ள அந்தப் பிரபல ஹாஸ்பிடலில் சேர்த்தபொழுது, சி டி ஸ்கேன் எடுத்து பார்த்ததில் Brain Haemorrhage ஏற்பட்டுள்ளது என்றார் டாக்டர் .
“மூளையில் உள்ள இரத்த நாளங்களில் ஏற்படும் மாற்றங்களின் பின்னணியில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது.,
மூளையின் ஒரு ரத்தக்குழாய் வெடித்துள்ளது அந்த இடத்திலும் அதைச் சுத்தியுள்ள திசுக்களிலும் ரத்தக் கசிவை உண்டாக்கி உள்ளது. இது மூளை செல்களை அழித்துவிடும் அபாயம் .
டாக்டர் தங்களால் முயன்ற அளவு சிகிச்சை செய்தும்நோயின் தீவிரம் அதிகமாகி சிகிச்சை பலனின்றி அவள் மறுநாள் இறந்து போனாள்.
ஏற்கனவே Donate Life அமைப்பைப் பற்றிக் கேள்விப்பட்ட அவர்கள் தன் பெண்ணின் உடல் உறுப்புகளை, மாதுங்காவில் உள்ள அந்த Donoate Life அமைப்புக்குத் தானமாகக் கொடுத்தனர் அந்தத் தம்பதிகள்.
நாலாவது படிக்கும் சுனிதா இப்படி அல்பயாசுல் இறந்து போனாலும் அவளுடைய உறுப்புகளான இதயம்,கல்லீரல்,கிட்னி ,கை கால்கள் மற்றவர்களுக்குப் பயன்பட்டு அவர்கள் நன்றாக இருக்கட்டும் என்ற அவளின் பெற்றோர்களின் உயரிய சிந்தனையைப் பாராட்டினார் அந்த அமைப்பின் நிறுவனர்.
மிகக் குறைந்த வயதில் சுனிதாவின் அவையங்கள் தானமாகக் கொடுப்பது சுனிதாவின் பெற்றோர்கள் நல்ல உயர்வான எண்ணத்தைக் கொண்டுருக்கும் போது எனக்குப் பெருமையா இருக்கு”.
இதோ அந்தச் சுனிதாவின் வலது கை அனிதாவுக்குப் பொறுத்த பட உள்ளது.
இந்தியாவிலேயே ஏன்உலகிலேயே சிறிய வயதில் Hand transplant கொடுத்தது சுனிதா என்னும் எட்டு வயது சிறுமி . அவள் கையைப் பெற்றுக் கொண்டு இனி புதியதொருவாழ்க்கையைத் தொடங்க போகும் அனிதா வுக்கு 7 வயது.
இப்படி நடப்பது மருத்துவ உலகில் அதிசயமான நிகழ்வு.
சட்டப்படி மற்றும் ஆபரேஷன்க்கு தேவையான மருத்துவப் பரிசோதனைகள் முடிந்த பிறகு மற்ற பார்மலிடி பின் பற்றப்பட்டுச் சுனிதாவின் வலது கை உறுப்பு அனிதாவுக்குப் பொறுத்தப பட்டது.
“என் வாழ்க்கையில் மிகவும் சந்தோசமா இருப்பதற்குக் காரணம் சுனிதா.அவளுக்கு அவங்க குடும்பத்துக்கும் என்று நான் கடமைப்பட்டுள்ளேன்.என்று சொன்னபோது உச்சி முகர்ந்து முத்த மழை பொழிந்தாள் சுனிதாவின் அம்மா.
“ஆன்டி சனி ஞாயிறு ஒங்க வீட்டுக்கு வந்து அண்ணா ராகுலுடன் விளையாட பர்மிட் பண்ணுவிங்களா ?”
Leave a comment
Upload