ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டில் இந்திய அணியின் பிங்க்-பால் (இளஞ்சிவப்பு) பகல் – இரவு டெஸ்ட் மேட்ச் நேற்று டிசம்பர் 6 ஆம் தேதி தொடங்கியுள்ளது. இது ராட்சச விளக்குகளின் கீழ் விளையாடப்படும் 23 வது டெஸ்ட் ஆகும்.
ஆஸ்திரேலியா இதுவரை 12 இந்த பிங்க் பால் பகல்-இரவு டெஸ்ட் போட்டிகளில் ஆடி 11 வெற்றிகளைப் பெற்றுள்ளது. இந்தியாவோ இதுவரை ஆடிய நான்கு போட்டிகளில் மூன்று வெற்றிகளைக் கைகொண்டுள்ளது.
கடைசியாக டவுன் அண்டர் சுற்றுப்பயணம் என்று சொல்லப்படும் ஆஸ்திரேலிய நாட்டில் நடந்த போட்டித் தொடரில் அடிலெய்டில் நடந்த போட்டியில் ஒரே தோல்விதான். இந்த போட்டியில் இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸில் 36 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது, இது டெஸ்ட் வரலாற்றில் அவர்களின் குறைந்த ஸ்கோராக உள்ளது.
இருப்பினும், ஐந்து போட்டிகள் கொண்ட 2024-25க்கான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் பெர்த்தில் நடந்த போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என முன்னேறி, இந்த முறை அடிலெய்டில் நடந்து கொண்டிருக்கும் பிங்க் டெஸ்ட்டில் ஜெயிக்குமா என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் இதயத் துடிப்பு இரட்டிப்பாக உள்ளது.
ஆனாலும், இந்த மாதிரியான பிங்க் டெஸ்ட் போட்டிகளில் இதுவரை ஆஸ்திரேலியா பெற்றிருக்கும் 11/12 வெற்றிகள், அதாவது, 92% வெற்றி விகிதம் இந்தியாவின் நம்பிக்கைக்கு ஒரு சாலஞ்சாகவே இருக்கப் போகிறது..
இந்த பகல்-இரவு கிரிக்கெட் டெஸ்ட்களின் சில மைல் கல்கள் இதோ.
1. அனைத்து 22 பிங்க்-பால் டெஸ்டும் முடிவுகளைத் தந்துள்ளன.
2. 22 டெஸ்ட்களில் ஐந்து மட்டுமே ஐந்தாவது நாளுக்கு சென்றது.
3. 22 டெஸ்ட்களில் இரண்டு இரண்டாவது நாளிலேயே முடிந்தது.
4. 10 அல்லது அதற்கு மேற்பட்ட பிங்க்-பால் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கும் ஒரே அணி ஆஸ்திரேலியா.
பிங்க் பால் செயற்கை விளக்குகளின் கீழ் கிளியரக தெரிவதால் விரும்பப்படுகிறது. சிவப்பு பந்து நாட்கள் ஆக ஆக பழுப்பு நிறமாக மாறும்போது அதன் தெரிவுநிலையை இழக்கிறது. இரவு நேரங்களில் விளக்குகளின் வெளிச்சத்தில் தெளிவாகத் தெரிவதில்லை.
இந்த மாதிரியான முதல் டெஸ்ட் 27 நவம்பர் 2015 அடிலெய்டில் உள்ள அடிலெய்டு ஓவல் மைதானத்தில் அன்று நடைபெற்றது.
மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை பரப்புவதே பிங்க் டெஸ்டின் நோக்கமாகும். முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் கிளென் மெக்ராத், இந்த நோயால் தனது மனைவி ஜேன்னை இழந்தார். மெக்ராத் தனது மனைவிக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்ட பிறகு 2005 இல் மெக்ராத் அறக்கட்டளையைத் தொடங்கினார். அவரே இந்த பிங்க் பால் டெஸ்ட் உருவாவதற்குக் காரணமும் ஆவார்.
இது வரை விளையாடிய பிங்க் பால் டெஸ்ட்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் மிட்செல் ஸ்டார்க், 12 போட்டிகளில் 18.71 ரன்கள் சராசரியில் 66 விக்கெட்டுகளி முன்னணியில் உள்ளார். நேற்று கூட ஆறு விக்கெட்டுகளை தனது பாக்கெட்டுக்குள் போட்டுக்கொண்டு விட்டாரே.
11 மாதங்களுக்குப் பிறகு நடைபெறும் முதல் பிங்க் பால் டெஸ்ட் போட்டி இதுவாகும். இதற்கு முன் பிரிஸ்பேனில் நடந்த பகல்-இரவு டெஸ்டில், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா போட்டியை இழந்தது.
நவம்பர் 27, 2015 அன்று ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் உள்ள அடிலெய்டு ஓவல் மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இடையே முதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டி நடைபெற்றது. அதன்பிறகு, 20க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகள் பகல்-இரவு வடிவத்தில் விளையாடப்பட்டுள்ளன. இரண்டாவது பிங்க் பால் டெஸ்ட் துபாயில் பாகிஸ்தானுக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையில் ஒரு வருடம் கழித்து 2016 இல் விளையாடப்பட்டது, அதே நேரத்தில் இந்தியா 2019 இல் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனில் பங்களாதேஷுக்கு எதிராக சொந்த மண்ணில் முதல் பகல்-இரவு டெஸ்ட் விளையாடியது.
பகல்-இரவு டெஸ்ட் போட்டிகளில் ஏன் பிங்க் பால் பயன்படுத்தப்படுகிறது?
கிரிக்கெட் பந்து உற்பத்தியாளர்கள் ஆப்டிக் மஞ்சள் மற்றும் பிரகாசமான ஆரஞ்சு உள்ளிட்ட பல்வேறு வண்ணங்களை முயற்சித்தனர். அதிக கேட்சுகளை எடுக்கும் பீல்டர்கள் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற பந்துகளை மைதானத்தில் எளிதாகக் கண்டுபிடிக்க முடியும். இருப்பினும், ஆடுகளங்களில் பழுப்பு நிறத் திட்டுகள் இருப்பதால் பேட்டர்கள் தெரிவுநிலையைப் பற்றி புகார் கூறினர். எனவே, அவர்கள் இளஞ்சிவப்பு பந்தைத் தேர்ந்தெடுத்தனர். இப்படியாகத் தான் பிங்க் பால் இந்த பகல் இரவு போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டது. பிங்க் பால் டெஸ்ட்டின் அர்த்தம் என்ன?
வழக்கமான சிவப்பு டெஸ்ட் கிரிக்கெட் பந்தானது கிரீஸில் தோய்க்கப்படுகிறது, இதனால் தோல் மீது தண்ணீர் இறங்காது. ஆனால் பகல்/இரவு டெஸ்ட் பிங்க் பந்தின் மீது இதைச் செய்ய முடியாது, ஏனெனில் கிரீஸ் ஒளிரும் இளஞ்சிவப்பு நிறத்தை மங்கச் செய்து, விளக்குகளின் கீழ் பந்தின் தெரிவுநிலையைப் பாதிக்கிறது.
பெரும்பாலான போட்டிகள் சொந்த அணிக்கு சாதகமாக முடிவடைந்துள்ளது, மேற்கிந்திய தீவுகள், இலங்கை மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் மட்டுமே வருகை தரும் அணியாக வெற்றி பெற்றுள்ளன. தற்போதுள்ள நிலையில், பகல்-இரவு டெஸ்ட் போட்டிகளில் 27 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானின் அசார் அலி மைல்கல்லை எட்டிய முதல் பேட்டராக இருந்தார், மேலும் அவர் அதே இன்னிங்ஸில் டிரிபிள் சதம் அடித்தார். பிங்க் பால் டெஸ்டில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் விராட் கோலி.
நடந்து கொண்டிருக்கும் டெஸ்ட் மேட்ச் எவ்விதம் செல்கிறது என்று பார்ப்போம்.
Leave a comment
Upload