சென்னையில் பிறந்தவர்தான். திருவண்ணாமலை திருப்பனமூர் தான் பூர்வீகம். தந்தையும் முன்னாள் இந்திய விமானப் படை உயர் அதிகாரி தான்.


ராணுவ வீரன் குரூப் காப்டன் அபினந்தன் வர்த்தமான் .
2019-ஆம் ஆண்டு பாகிஸ்தானின் F-16 ரக போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்திய அதே அபிநந்தன் வர்த்தமான், இந்திய விமானப்படையிலிருந்து (IAF) இந்த ஆண்டு மார்ச் 31 அன்று விலகிய பிறகு, 'FLY91' என்ற வணிக ரீதியான விமான நிறுவனத்தில் விமானியாகப் இணைந்துள்ளார்.

இந்திய விமானப்படையில் 22 ஆண்டுகள் பணியாற்றிய முன்னாள் குரூப் கேப்டன் மற்றும் வீர் சக்ரா விருது பெற்ற இவர், இந்த 2026 ஆகஸ்ட் மாதம் கோவாவை தலைமைத் தளமாகக் கொண்ட பிராந்திய விமான நிறுவனமான FLY91 இல் வணிக பைலட்டாக சேர்ந்துள்ளார்.விமானப்படையிலிருந்து மார்ச் 31, 2026 முன்கூட்டியே ஓய்வு (premature retirement) பெற்றார்.பாதுகாப்பு அமைச்சகத்திடமிருந்து தேவையான 'தடையின்மைச் சான்றிதழைப்' (NOC) பெற்ற பிறகே, ஆகஸ்ட் மாதத்தில் இந்த நிறுவனத்தில் இணைந்துள்ளார்.
ராணுவ விமானிகள் சிவில் விமானப் போக்குவரத்து விதிகள், வான்வழி விதிகள் மற்றும் விமானப் போக்குவரத்து வானிலை ஆய்வு போன்ற தலைப்புகளை உள்ளடக்கிய தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும். அவர்கள் சிவில் விமானப் போக்குவரத்துக்கான மருத்துவத் தகுதிகளையும் பூர்த்தி செய்ய வேண்டும். பணியின் போது ராணுவ மருத்துவத் தரநிலைகளை நிறைவு செய்வதோடு மட்டுமல்லாமல், DGCA-வால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ மையத்திலிருந்து 'வகுப்பு 1' (Class 1) மருத்துவச் சான்றிதழையும் அவர்கள் பெற வேண்டும்.

Leave a comment
Upload