தொடர்கள்
அனுபவம்
நேபாளத்தில் ஒரு ஜென் மனிதி - தி. குலசேகர்

20260805083030176.jpeg

ஆன்மீகத்தின் முதல்படி தன்னலத்தை துறந்து பிறர்நலத்தை தன்னலமாக பாவித்து மகிழ்வைஇரட்டிப்பாக்கி கொள்வது. பிற்பாடு பிரபஞ்ச நேசத்தை உள்ளுணர்வின் வழி உணர்கிறபோது, பிறர் என்பது மறைந்து போகிறது. நான் என்பது நாமாகி விடுகிறது. பக்தி என்பது துவக்கத்தில்தன்னலத்தை வேண்டுதலாகவே துவங்குகிறது. நாம் செய்கிற செயல் வழியாகவும், சிந்தனைவழியாகவுமே நாம் நமது ஆன்மீக தேடலில் படிநிலைகளை கடக்கிறோம். அதற்கு பல வழிகள்உண்டு. பக்தியும் அதில் ஒரு வழி. உருவ வழிபாட்டிலிருந்து ஒளி வழிபாட்டிற்கு முன்னேறிச்செல்வதை போல, பக்தி தன்னலத்தை உதறி, பொதுநலத்தை தன்னலமாக பாவிக்கிற பிரபஞ்சகாருண்யத்தை கைக்கொள்கிறபோது அது வசப்பட்டுவிடுகிறது. அவர்களை ஜென் மனிதர்கள்என்று சொல்லலாம். அவர்கள் சாதி,மதம் என எந்தவிதமான அடையாளங்களையும்சூடிக்கொள்வதில்லை. அப்படியான ஒரு ஜென் மனிதியை பற்றித்தான் இந்த சிறியகட்டுரையில் பார்க்க இருக்கிறோம்.

இங்கிருந்து கைலாயத்திற்கு குழுகுழுவாக பலரும் பயணிப்பது வழக்கமான நிகழ்வு தான்.அப்படியொரு 57 பேர் கொண்ட குழு ஆகஸ்ட் 23 ம் தேதி தமிழ்நாட்டிலிருந்து கைலாசத்தைநோக்கி தங்களின் பயணத்தை நேபாளத்தில் உள்ள கைலாசம் நோக்கி மேற்கொள்கிறார்கள்.அகஸ்ட் 26 ந்தேதி அவர்கள் நேபாளத்தை அடைந்து, சைனாவிலுள்ள கிராங் நகரத்தின்செக் போஸ்ட்டை அடைகிறார்கள்.

அப்போது அவர்களுக்கு, கைலாச பனிப்பாறைகள் உருகி வரலாறு காணாத பெருவெள்ளம் வரஇருக்கிற சேதி தெரியாது. அவர்கள் சற்றும் சளைக்காமல் அந்த பிரமாண்டமானபனிமலையில் உச்சியை நோக்கி அடிமேல்அடி வைத்து பயணித்து கொண்டிருக்கிறார்கள்.அப்போது தான் கண் இமைக்கிற நேரத்தில் அவர்கள் சற்றும் எதிர்பார்த்திராத வண்ணம் அந்தபெருஞ்சீற்றம் அங்கே உருவெடுக்கிறது.

இந்த குழு மூணு குழுவா பிரிஞ்சி மூணு பஸ்ல பயணிச்சிருந்திருக்காங்க. அதில இப்போரெண்டு பஸ்ஸோட நெலமை என்னாச்சினே தெரியல. மீட்புக்குழு தேடிக்கிட்டு இருக்காங்க. இரண்டாவது குழுவை முன்னெடுத்துச் சென்ற அந்த பேருந்தின் ஓட்டுநர், அப்போ பெருசாஏற்பட்ட புழுதையை பாத்து சந்தேகமாகிறார். என்னவோ நிகழப்போகிறது என்று அவரின்உள்ளுணர்வில் ஏதோ ஒரு பொறி தட்டுகிறது. உடனே அங்கிருந்த இருந்த உயர்வானபகுதியில் உள்ள அந்த மலையடிவாரத்திற்கு பேருந்தை ஓட்டிக்கொண்டு போய் நிறுத்துகிறார்.அதற்குள் அந்த பெருவெள்ளம் சீற்றத்தோடு அவர்களை நோக்கி பாய ஆரம்பித்திருக்கிறது.அந்த பேருந்தில் இருந்தவர்கள் உடனே ஓட்டுநர் இருக்கை வழியாக நொடியில் அனைவரும்இறங்கி, அதன் ஓரமாக இருந்த செங்குத்து பாதை வழியாக அங்கிருந்த மலைக்குன்றைநோக்கி ஏற ஆரம்பிக்கிறார்கள். அந்த குன்று அங்கிருந்து மூன்று கிலோ மீட்டர் உயரத்தில்இருந்திருக்கிறது.

அந்த குழுவில் கிட்டத்தட்ட 27 பேர் இருந்திருக்கிறார்கள். அதில மூன்று ஆண்கள், ரெண்டுபெண்கள் மட்டும் மளமளவென அந்த குன்றின் மேல் எப்படியோ சிரமப்பட்டு ஏறிவிடுகிறார்கள்..மற்றவர்கள் எல்லாம் ஏறுவதற்கு, என்ன செய்வதென தெரியாமல் விழி பிதுங்கியபடி, தத்தளித்துக்கொண்டு இருந்திருக்கிறார்கள்.

20260805083058222.jpeg

அப்போது தான் அநாதை ரட்சகியாக அந்த பெண் முன்வந்திருக்கிறார். அவர் பெயர் பூங்குழலி.அவர் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள வள்ளாலகரம் என்கிற கிராமத்தைச் சேர்ந்தவர். யார்அவர்? வட்டார வளர்ச்சித்துறையில் அதிகாரியாக பணியாற்றி வருபவர். அவர் ஒரு புருஸ்லிரசிகை. உடற்பயிற்சி, தற்காப்பு கலைகளில் தொடர்ந்து பயிற்சி எடுத்துக்கொள்கிற வழக்கம்உள்ளவர்.

அந்த பெண்மணி கொஞ்சமும் யோசிக்காமல், தன்னுடைய சேலையை கழற்றி கீழே போட்டு, அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்தவர்களில் ஒவ்வொருவராக அதை பிடித்துக்கொண்டுமேலே வர உதவியிருக்கிறார். அவர் அப்படியாக மீதமிருந்த 21 பேரையும் பத்திரமாக வெள்ளப்பேரழிவிலிருந்து மீட்டு, குன்றேற்றியிருக்கிறார்.

பறவைகளோ, விலங்குகளோ அவை உடைகள் ஏதும் அணிவதில்லை. ஒவ்வொரு பறவையும், விலங்கும் ஜென் தான். அப்படி பார்க்கையில் இந்த பெண் பூங்குழலியும்ஒரு ஜென் மனிதி தான். அந்த கணத்தில் ஸ்வெட்டரை போட்டுக் கொண்டு கொஞ்சமும் யோசிக்காமல் தன் புடவையை கொடுத்து உசிரைக் காப்பாற்றிய பூங்குழலி என்ற பெண்மணியும் ஒரு ஜென் மனிதி தான்.