தொடர்கள்
பொது
“தென்னிந்தியாவின் முதல் சுரங்கப்பாதை சாலை!" - ஸ்வேதா அப்புதாஸ்

இந்தியாவில் சாலை போக்குவரத்து வெளிநாடுகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலை துரையினரால் புதிய சாலைகள் உருவாக்கப்பட்டு வருகின்றது.
நெடுஞ்சாலைகளின் அபார வளர்ச்சியினால் நான்கு வழி சாலை ஆறுவழி சாலை என்று விரிவு படுத்தி வேகம் மற்றும் ஆரோக்கியமான பயணத்தை தேசிய நெடுஞ்சாலைத் துறை உருவாக்கி கொடுத்து வருகிறது .

20180611231732541.jpg
தற்போது தேசிய நெடுஞ்சாலை எண் 544 கேரளா மற்றும் தமிழகத்தை இணைக்கும் ஒரு சூப்பர் சாலையாக திகழ்கிறது. இந்த தேசிய நெடுஞ்சாலையில் கேரளா மாநிலம் பாலக்காட்டையும் திருச்சூரையும் இணைக்கும் மலை சாலை குதிரான் மலை கேற்றம் சாலை. இந்த சாலை ஒரு குறுகிய சாலை. தினமும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் ஒரு ஸ்பாட் .

2018061123421758.jpg
மேலும் இந்த சாலையில் ஏகப்பட்ட விபத்துகள் நடப்பது சகஜமான ஒன்று. இந்த முக்கிய சாலையில் ஏற்படும் சிக்கல்களை தவிர்க்கவும் தேவையற்ற வளைவுகளை தவிர்க்கவும் வாகனங்கள் சுலபமாக இந்த பகுதியை கடக்கவும், மலையைக் குடைந்து சுரங்க பாதை அமைத்து புதிய சகாப்தத்தை உருவாக்கும் முயற்ச்சியை எடுத்தது தேசிய நெடுஞ்சாலை துறை.

20180611234740713.jpg


இந்தப் பகுதியில் உள்ள குதிரான் மலையில் சுரங்கம் குடைந்து இரண்டு டனல்கள் கட்டி அதன் வழியாக போக்குவரத்தை விட முடிவு செய்து, அதற்கான பணிகளை 2009 வருடம் துவங்கினார்கள்.


ஹைதராபாத்தை சேர்ந்த கே.எம்.சி. என்ற கம்பெனியிடம் இந்த சவாலான பணி ஒப்படைக்கப்பட்டது. கே.எம்.சி. கம்பெனி பிரகதி என்ற ஆந்திர கம்பனியிடம் சப் கான்ட்ராக்ட்டை ஒப்படைத்தது. இதற்கான மொத செலவு 200 கோடி என்று முடிவு செய்யப்பட்டது.

20180611231823367.jpg
இந்த இரட்டை சுரங்க பாதை பணி துவங்க வழக்கமான எதிர்ப்புகள் வந்து நிற்க, அனைத்தையும் மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசியல் பின்ணணியுடன் பின்னுக்கு
தள்ளின. கட்டுமான பொறியாளர்கள் ஒரு சவாலாக இந்தப் பணியை செய்ய துவங்கி ஒன்பது வருடம் ஓடிவிட்டது. ஒரு டனல் முடியும் தருவாயில் உள்ளது மற்றது சற்று தாமதமாகும் என்று கூறப்படுகிறது.


964 மீட்டர் நீளமும், 14 மீட்டர் அகலமும், 10 மீட்டர் உயரமும் கொண்ட இந்த டனல் சாலை தென்னிந்தியாவின் முதல் சுரங்க சாலை என்ற பெருமையை பெறுகிறது. வனப் பகுதியில் உள்ள இந்த மலை மண் இளகிய மண். அதனால் மழை பெய்தால் மண் கொட்டுவது சகஜமாம். அதனால் மிக ஸ்ட்ராங்காக சுரங்கத்தை கட்டியுள்ளனர். அப்படி இருந்தும் தீடீர் என்று ஒரு சுரங்கத்தில் மண் சரிந்து மழை தண்ணீர் சுரங்கத்தினுள் புகுந்துவிட்டது.

20180611232647565.jpeg

மனம் தளராத பொறியாளர்கள் விடாப்பிடியாக மீண்டும் கட்டுமான பணியை துரிதமாக மேற்கொண்டுள்ளனர்.

20180611233651716.jpg
இந்த கட்டுமான பணியை ரசித்து, ஏக்கத்துடன் இந்தச் சுரங்க பாதையை திறக்கும் நாளை எண்ணி காத்துக்கொண்டிருக்கும் திருச்சூரை சேர்ந்த மார்ட்டின் கூறும்போது, “இந்த ட்வின் டனல் ஒரு ஆச்சிர்யமான அதிசயமான சாலை என்று சொன்னால் மிகையாகாது. தென்னிந்தியாவில் முதல் சுரங்க சாலை இது! பாலக்காடு டூ திருச்சூர் சாலையில் குதிரைக்கேற்றம் வந்தவுடன் போக்குவரத்து தடை, தினமும் ஏற்படுவது ஒரு தலைவலி . ஒரு மணிநேரம் என்பது தற்போது மூன்று மணிநேரம் கூட ஏற்படுகிறது. பயணிகள் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு தள்ளப்படுகிறார்கள். ஆரம்பத்தில் வேலை படு சுறு சுறுப்பாக நடைபெற்றது. திடீர் என்று மண் பாறை சரிந்து வேலை தடை பட்டது. பின்னர் கே.எம்.சி. கம்பெனிக்கும் பிரகதி குரூப் கம்பெனிக்கும் எதோ பிரச்சனை ஏற்பட வேலை முடங்கிப்போனது. தற்போது சமாதானம் ஏற்பட்டு வேலை ஆரம்பித்துள்னர். சற்று வேகமாக நடந்தாலும் வேலை முடிந்து போக்குவரத்திற்கு இந்த டனல் சாலை திறக்க ஆறு மாதத்திற்கு மேல் ஆகும். அதுவரை போக்குவரத்து தடையை சகித்து கொள்ள வேண்டியதுதான். பருவமழை வெளுத்து வாங்குகிறது இதனால் இந்த பணி தடைபடுகிறது. விரைவில் வேலை முடிந்து இந்த ஆச்சிர்ய சாலை திறந்தால்
முதலில் சந்தோஷபடுவது நான்தான்" என்று கூறுகிறார் .

20180611233045480.jpg

இந்த சுரங்க சாலை கேரளாவிற்கு பெருமையை சேர்க்கும் ஒன்று என்று கூறுகிறார்கள் கேரளா வாசிகள்.


இந்த அழகிய சுரங்க சாலையை பாரத பிரதமரின் கரத்தால் தான் திறந்து வைப்போம் என்று கூறுகிறார்கள் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்.

20180611233134245.jpg
கோவையில் இருந்து வேகமாகவும் சுலபமாகவும் கேரளாவிற்கு இந்த சாலை வழியாக பயணிக்கலாம். இந்த அழகிய சாலையில் அதி நவீன கேமரா மற்றும் சுரங்கத்தின் நடுவில் வெளியேற வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்த சாலை திறப்புக்கு பின் தான் மற்ற மலை சாலைகளில் இப்படிப்பட்ட சுரங்கச் சாலைகள் உருவாக்குவதை பற்றி திட்டம் தீட்ட எண்ணியுள்ளது தேசிய நெடுஞ்சாலைத்துறை.