ஸ்ரீ மகா பெரியவா இந்த உலகில் சரீரத்தோடு உலா வந்த போது, அவரோடு பல்வேறு காலகட்டங்களில் பயணித்த பலரை பற்றியும், பல இடங்களை பற்றியும் பார்த்து வருகிறோம். இந்த வாரம்....
கீழம்பி - காஞ்சிபுரம் மாவட்டம்
காஞ்சிபுரத்தில் இருந்து பெங்களூர் செல்லும் நெடுஞ்சாலையில் 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது கீழம்பி கிராமம். ஸ்ரீ அம்பிகாபதீஸ்வரர் சிவன் கோயில் உள்ளது. ஸ்ரீ போதேந்திராளின் சிஷ்யர் ஸ்ரீ அத்வைதாத்மா ப்ரகாஷேந்திர ஸ்வாமிகளின் அதிஷ்டானமும் உள்ளது.
1704 ஆண்டு சித்தி அடைந்த இவர், காஞ்சி மடத்தின் 60-வது பீடாதிபதி ஆவார் .
ஸ்ரீ மகா பெரியவா இங்கு தங்கி, இந்த அதிஷ்டானத்தை பராமரிக்க சொல்லியுள்ளார். இங்கு சுமார் 23 ஆண்டுகள் பூஜை செய்த ஸ்ரீ சிவராம சிரௌதிகள் அவர்களின் காணொளி நம்மை 70-களின் வாழ்க்கைக்கே கொண்டுபோகிறது.
ஸ்ரீ மகா பெரியவா, புது பெரியவா, மற்றும் பால பெரியவா அனைவருக்கும் இவர் கைங்கரியம் செய்துள்ளார்.
இதுபோன்ற அனுபவ பதிவுகள் அனைத்தும் நமக்கு மிகப்பெரிய பொக்கிஷங்கள். அந்தக்காலத்தில் எப்படி பக்திமானாக வாழ்ந்தார்கள் என்பதை கேட்கும்போது, நம் மூதாதையர்கள் மேல் மரியாதையை வருகிறது.
முயல்களின் நடுவே அழகாக வீற்றிருக்கும் அம்பிகாபதீஸ்வரரையும், ஸ்வாமிகளின் அதிஷ்டானத்தையும் தரிசிப்போம்.

Leave a comment
Upload