
மக்கள் இயல்பு நிலைக்கு ‘நன்கு’ திரும்ப.... இவ்வார நிலவரங்கள் சிறிது உன்னிப்பாக உள்ளன..... என்னன்னு போய் பாப்போம்!
கலைமாமணி நடிகர் விவேக் அவர்களின் மரணம் குறித்த விசாரணையை ஏற்றுள்ளது தேசிய மனித உரிமை ஆணையம்!!
“தடுப்பூசியால இருக்குமோ?? ஏற்கனவே நம்ம மன்சூர் அலிகான் டென்ஷன் ஆயிட்டார்!!”
கடலுக்கு அடியில் பூகம்பம்! தாக்கம் அடையாறு மற்றும் திருவான்மியூர் பகுதிகளில் உணரப்பட்டது....
“இந்தோனேஷியா-வுல வந்திருக்கும் பா!”
சென்னைக்கு மிக அருகிலே... வெறும் 320 கிலோ மீட்டர் தான்...
இன்னும் டிசம்பரே வரல, அதுக்குள்ளயா??
இராணுவம் குறித்து தயாரித்த, இப்போது டிரெண்டிங்கில் உள்ள பாலிவுட் படம் “ஷேர் ஷா”, தமிழகத்திலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.... குறிப்பாக “நம்மவர்” நெஞ்சு நிமிர பெருமிதம் கொண்டு அப்படக் குழுவினரை பாராட்டியது தற்போது வைரலாகி வருகிறது....
முதல் இரண்டு போட்டிகளில் அசாத்தியமாய் விளையாடிய இந்தியா, மூன்றாவது போட்டியில் பேட்டிங் தொடங்கி 78 ரன்களுக்குள் சுருண்டது.... இன்னும் நான்கு நாட்கள் இருந்தாலும், இங்கிலாந்து பக்கம் தான் தற்போது வெற்றிக்கனி தெரிகிறது....
கடந்த வார தாலிபான் பிரச்சினைக்கு உதவிக்கரம் நீட்டி அடைக்கலம் தந்துள்ளது மெக்சிகோ அரசு.... வந்த ஆப்கான் அகதிகளில் ஐந்து பெண்கள் கொண்ட எந்திரனியல் குழுவும் (Robotics team) அடங்கும்...
இந்தியா - இங்கிலாந்து இடையேயான 3-வது டெஸ்ட் போட்டியில் சாதனை படைத்துள்ளார் ஜேம்ஸ் ஆண்டர்சன் (Jimmy Anderson).... கோலி-யை இதுவரை 23 போட்டிகளில் 7 முறை அவுட் செய்துள்ளார்..... அதுமட்டுமா!?
கோலியையும் சச்சினையும் (9 முறை) அதிகமுறை டெஸ்ட் போட்டிகளில் வீழ்த்தியுள்ளார்.

Leave a comment
Upload