தொடர்கள்
பேசிக்கறாங்க
பேசிக்கறாங்க....

20210727225154777.jpg

நமது வாசகர்கள் அங்குமிங்கும் (ஹீ...ஹீ..ஒட்டு) கேட்ட உரையாடல்கள்...

ராஜகீழ்ப்பக்கம்.... போலீஸ் நிலையம்...

“ஏன் சார், கம்பளைண்ட் குடுத்தா ஒரு ஓடீபி வரும்னு சொன்னாங்க, வரவேயில்லையே...”

“யோவ், நீ எழுதி குடுத்தியா?”

“குடுத்தேன்.”

“என்னிக்கு?”

“அது இருக்கும் ஒரு வாரம்..”

“சரி தான் போ, அது அவங்க ரெஜிஸ்டர் பண்ண உடனே வரும்...”

“அப்பா ஏற்கனவே வந்திருக்கும்னு சொல்றீங்களா?”

“ஆமாங்க, இன்னும் வரலேன்னு சொல்றீங்களே அப்பா ரெண்டு விஷயம் தான் நடந்திருக்கும். ஒண்ணு உங்க கம்பிளைன்ட எடுத்திட்டு இருக்கவே மாட்டாங்க, இல்லே ஓடீபி வேற நம்பருக்கு வந்திருக்கும்.”

“என்னங்க இப்படி சொல்றீங்க, நான் வேல முடிச்சிருக்கும் நினச்சு வந்தேங்க... நீங்க இப்ப திரும்பவும் ஆரம்பிக்க சொல்றீங்களே. எல்லாத்தையும் விட நான் எம் பொண்டாட்டிக்கு என்ன பதில் சொல்லுவேன்?”

கவலையோடு நகர்கிறார்...

கண்ணன், க்ரோம்பேட்.


ஆஞ்சநேயர் கோவில் வாசலில், நங்கநல்லூர்...

“எங்க வாரம் நாலு நாள் கோயிலுக்கு வர்றீங்க, இப்ப என்னடான்னா வெள்ளி, சனி, ஞாயிறு ம் வர ஆரபிச்சுட்டீங்க போல.”

“அட எங்க நீங்க வேற, அந்த மூணு நாளு கோயில் திறக்க கூடாதுன்னு சொல்லி கவர்மெண்ட்டு என் வயித்துல அடிச்சிடுச்சுங்க...”

“எங்க நீங்க கோயில்ல ஏதாவது வேல செய்யறீங்களா?”

“அதெல்லாம் இல்லீங்க, தினமும் வந்து கோயில் சுத்திட்டு பிரசாதம் சாப்டுட்டு போவேன், மூணு தடவை லைன்ல வந்தா வயிறு நிறைஞ்சிடும், இப்ப அந்த மூணு நாளு நான் எங்க போறது சாப்பாட்டுக்கு.”

கேட்டவர் திகைத்து நிற்கிறார்...

ராம், நங்கநல்லூர்.