தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்


20211003093718347.jpeg


அண்ணாத்த - ரஜினி... - லைட் பாய்

ஏழை ரசிகன் தலைவர் மேல் உள்ள வெறியில் எத்தனை பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி இந்த படத்தை பார்க்க போறானோ....😪


தெருவெல்லாம் தமிழ் முழக்கம்... - 2 - இரா.சு.இராசன்

அழகு தமிழ் மொழியில் அருமை நடை கொண்டு இனிய கவிதையினை முழங்கும் மகராசனம் உடல் நல்ல சுகமோடு நிறைந்த மனமோடு ஆண்டுகள் பலநூறு வாழ பிரார்த்திப்போம்...!!

பாலகிருஷ்ணன்


விடை தேடும் வினாக்கள்...!! - பாலகிருஷ்ணன்

Arumayana kavithai.

உஷாலக்‌ஷ்மி, பெங்களூர்


கொரோனாவின் அடுத்த அவதாரம் - AY 4.2... - தில்லைக்கரசிசம்பத்

என்னடா இது... தமிழனுக்கு வந்த சோதனை! புது டிரஸ் அணிந்து, ஸ்வீட் எடுத்து, அண்ணாத்தே படம் பார்த்து, பட்டாசு வெடிச்சு கொண்டாடலாம்னு பார்த்தா... கொரோனா A2, BY, 4.2 பரவல்னு சொல்லி பயமுறுத்தறீங்க! அப்புறம் எல்லாமே 'செலக்டிவ் அம்னிஷியா'வா மாறிடப் போகுது!

திலகவதி ராமகோபால், குன்றத்தூர்


போதை மருந்து ஒழிப்பு! - அரசின் கண்ணாமூச்சி ஆட்டம்!! - மும்பைவாலா

உன்மை சம்பவமே. ஏதோ படம் பார்ப்பது போல் உள்ளது நன்றி விகடகவி ஆசிரியர்

சுலோ மணி, பொன்னேரி


தெருவெல்லாம் தமிழ் முழக்கம்... - 2 - இரா.சு.இராசன்

இனிய பிறந்த நாளில் வணங்குகிறேன். அற்புதமான மென் கவிதை தங்களுடையது. மேன் மேலும் எதிர்பார்க்கிறோம்.


பெட்ரோல் விலை உயர்வால்... - மாலாஸ்ரீ

பெட்ரோல் விலை இனி குறையப் போறதில்லை. அதனால எல்லாரும் சைக்கிள், மாட்டு வண்டி, குதிரை வாங்கி வெச்சு ஓட்டுங்க. அப்பத்தான் பெட்ரோல் பயன்பாடு குறைந்து, அதன் விலையை பெட்ரோலிய நிறுவனங்கள் விலையை குறைக்கும்.

ரேணுகா ஹரிஹரன், திருபாதிரிபுலியூர்


ஓய்வு... - கி. ரமணி

ரமணி சார், இதெல்லாம் உங்க ஓய்வுக்கால அனுபவம் போல தெரியுதே?! கதை, திரைக்கதை, வசனம் எல்லாம் ஓகே! கதை முடிவை பட்டிமன்ற நடுவரின் தீர்ப்பை போல் 'சப்பு'னு முடிச்சிட்டீரே!

அம்சவேணி கலாதரன், திருவொற்றியூர்


மக்கள் கருத்து - வேங்கடகிருஷ்ணன்

இந்த நிலையில், ஹம்மர் போன்ற கார்களை ஒட்டுபவர்கள், ஒரு தலைவர் போகும் கார் பின்னால் பல கார்கள் தொடர்வது, இந்த நாட்டில் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள், பெட்ரோல், டீசல் விலை அவர்களுக்கு ஒரு பொருட்டாக இல்லை.


போதை மருந்து ஒழிப்பு! - அரசின் கண்ணாமூச்சி ஆட்டம்!! - மும்பைவாலா

எது எப்படியோ, அந்த பெற்றோர்கள் அனுபவித்த வேதனை, எவருக்கும் வரவேண்டாம்.

பார்கவன்


இது உண்மை தானே...?! - சி. கோவேந்த ராஜா.

கோவேந்தராஜாவும் விகடகவி வாசகர்களும் ஒருமையா, பன்மையா? அவரது காதலும் கவிதையும் பிரிக்க முடியுமா? அவரது கவிதைகள் ரசிக்கத்தகுந்தவை.

பார்த்திபன், காவேரிபட்டினம், கிருஷ்ணகிரி


“சார்… சுண்டல் வேணுமா?” - வெ.சுப்பிரமணியன்

அந்த சுண்டல் சுற்றப்பட்ட காகிதம் ஒரு தினசரி . அந்த பேப்பரில் உள்ள அச்சு மைய்யில் சுண்டல் நன்றாக ஊறிக்கொண்டு இருக்கிறது. அச்சு மைய்யில காரியம் உள்ளது. அது விஷம் என்பதை அறிவார்கள்?

பார்கவன்


போதை மருந்து ஒழிப்பு! - அரசின் கண்ணாமூச்சி ஆட்டம்!! - மும்பைவாலா

பெற்றவர்களின் சோகம்.


ஒன்னும் புரியல... விகடகவியார் ஸ்பெஷல் ரிப்போர்ட் 1

நிர்வாக ரீதியான ஒரு தயாராக இருக்க வேண்டிய முக்கியமான சில விஷயங்களுக்காக அனுப்பிய ஒரு சுற்றறிக்கையை அரசியலாக்க முயலுவது வீணான, பீதியடைந்தவர் செய்த வேல.

பார்கவன்


“சார்… சுண்டல் வேணுமா?” - வெ.சுப்பிரமணியன்

சார், சுண்டல் வேணுமா என்ற தலைப்பை வெச்சு வெ.சுப்பிரமணியன் கற்பனை குதிரையை அனாயசமா தட்டிவிட்டிருக்கார்! அப்படியே ஒரு காதல் கதை உருவாகி, காதலி வில்லியாக மாறி... அடடே, அருமையான கற்பனை!

மாயா குப்புசாமி, வடபழனி


கடமையைப் போற்று... – பா.அய்யாசாமி

நிஜத்தில் இப்படிப்பட்ட மின்வாரிய ஊழியர் இருந்திருந்தால், எவ்வளவு சந்தோஷமாக இருந்திருக்கும்?! அப்படிப்பட்ட உணர்வை ஏற்படுத்தியது - அய்யாசாமியின் கடமையை போற்று சிறுகதை!

ராதா வெங்கட், ஆலப்பாக்கம்


விடை தேடும் வினாக்கள்...!! - பாலகிருஷ்ணன்

பாலகிருஷ்ணனின் விடை தேடும் வினாக்கள் கவிதை, நமக்கு சோறிடும் விவசாயிகளின் அன்றாட அவலநிலையை தோலுரித்து காட்டியிருப்பது படிப்பவர்களின் நெஞ்சை ரத்தக்களறி ஆக்கிவிட்டது! நாட்டை ஆள்பவர்கள் படித்து உணர்ந்து, விவசாயிகளின் வாழ்வை மேம்பட செய்யட்டும்!

ரமாபாரதி, திருச்செங்கோடு


வாவ் வாட்ஸப்!

ஆல் வாட்ஸ் அப் வீடியோஸ் ஆர் சூப்பர்ப்! குறிப்பாக என்னவென்று சொல்வதம்மா, என்ன பிரச்னையோ, நிதானம் வெற்றி தரும், அசத்தல் ஷோ... சூப்பர்டா செல்லம்!

கௌஷிக், தீட்சிதா, ராகுல், பெங்களூர்


ஓய்வு... - கி. ரமணி

ஓய்வு! ஒரு அழகு ஓவியம் இல்லை காவியம் இல்லை கதை. ரமணியின் எண்ணங்களும் உரை நடையும் என் போன்ற வாசகர்களின் நெஞ்சததில் சதா பவனி வரும். அவர் படைப்புக்களில் ஓய்வு இன்னொரு மகுடமணி.


ஸ்ரீரங்கம் கோயில் யானைகளுக்கு புதிய நீச்சல் குளம்!! - ஆர்.ராஜேஷ் கன்னா.

கட்டுரை மிகவும் அருமை. இந்த கட்டுரையின் ஆசிரியர் யானை பிரியர் போலும். எம்பெருமானை வர்ணிப்பது போலே யானையும் கண்கொள்ளா காட்டியாக இருக்கிறது நன்றி டிஜிட்டல் விகடன் மற்றும் ஆசிரியர்.

சுலோசனா, பொன்னேரி