தொடர்கள்
பொது
பயம் வேண்டாம், புரிதல் போதும் - 1 - பிருந்தா ரகுநாத்

20260824205024990.jpg

கற்றல் குறைபாடுள்ள குழந்தையின் பெற்றோருக்கு ஒரு வழிகாட்டி.

யாருக்காக: பள்ளி செல்லும் குழந்தைகளின் பெற்றோருக்காக
நோக்கம்: குழந்தைக்கு என்ன நடக்கிறது என்பதைப் புரிஞ்சுக்கிட்டு, அடுத்து என்ன பண்ணலாம் என்ற தெளிவை பெற்றோருக்குக் கொடுப்பது. அதன்மூலம் பயத்தையும் பதற்றத்தையும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைப்பது.

20260824211020386.jpg

“என் குழந்தை சோம்பேறி இல்ல”

கற்றல் குறைபாடு என்றால் என்ன?

சில குழந்தைகளுக்கு படிக்க, எழுத அல்லது கணக்குப் போட மற்ற குழந்தைகளைவிட கொஞ்சம் அதிக சிரமம் இருக்கும். வெளியிலிருந்து பார்க்கும்போது அது அவ்வளவு எளிதாகத் தெரியாது. அதனாலதான் பல நேரம் குழந்தை சோம்பேறி, கவனமே இல்ல, முயற்சி பண்ணவே மாட்டேங்குது என்று நினைச்சுடறோம்.

இந்தப் பகுதியில், கற்றல் குறைபாடு உண்மையில் என்ன, அது ஏன் ஒரு கண்ணுக்குத் தெரியாத சிரமம் போல இருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

இதில் பார்க்கப்போவது:

- கற்றல் குறைபாடு என்றால் என்ன?
- பொதுவாக என்னென்ன அறிகுறிகள் இருக்கும்?
- டிஸ்லெக்சியா, டிஸ்கிராஃபியா, டிஸ்கால்குலியா என்றால் என்ன?
- இது எவ்வளவு பொதுவானது?
- ADHD-க்கும் கற்றல் குறைபாட்டுக்கும் என்ன தொடர்பு?

இந்தப் பகுதியில் நாம் புரிஞ்சுக்க வேண்டிய முக்கியமான விஷயம்:
குழந்தைக்கு கற்றல் குறைபாடு இருக்குன்னா, அது அறிவுக் குறைவு கிடையாது. சோம்பேறித்தனமும் கிடையாது. முதல்ல அந்த சிரமத்துக்கு ஒரு பெயர் இருக்கு என்று தெரிஞ்சுக்கிட்டாலே, பயம் கொஞ்சம் குறையும்.

பிருந்தா ரகுநாத்

குழந்தைகள் சிறப்பு கல்வி ஆலோசகர்,

குழந்தைகள் மன நல ஆலோசகர்.

+919841883569

புரிதல் தொடரும்...