உலகம் முழுவதும் புற்று நோய் என்பது சகஜமான ஒன்றாக உள்ளது. பெண்கள் மத்தியில் புற்றுநோய் என்பது அதிகமாகிவருகிறது என்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது .அதே சமயம் ஆண்களுக்கும் புற்றுநோய் என்பது ஒரு மறைமுக எச்சரிக்கை மணியை அடித்துள்ளது.

லண்டனில் உள்ள ப்ராட்போர்ட் பல்கலைக்கழகத்தில் Cancer Drug Discovery ஆராய்ச்சி படிப்பில் முதுகலை பட்டம் பெற்று National Health Service யில் பணிபுரிந்து விட்டு இந்தியா திரும்பியுள்ள மரியாவை சந்தித்து பேசினோம் ,
" புற்றுநோய் என்பது பெண்களுக்கு மட்டும் வரும் ஒரு நோய் என்று கூறமுடியாது ஆண்களுக்கு மறைமுகமாக எட்டி பார்க்கும் ஒரு புற்று நோய் புரோஸ்டேட் கேன்சர்!
மற்றொன்று நுரையீரல் புற்று நோய் என்பது ஆண்கள் மத்தியில் முதலில் தாக்கும் ஒரு அபாயகரமான நோய் என்பது எவருக்கும் புரிவதில்லை .
நுரையீரல் புற்று நோய் ஆண்கள் புகை பிடிப்பதால் வருகிறது இந்த புற்று நோய் அனைத்து தரப்பு மனிதரையும் தாக்குகிறது அதற்கு காரணம் குப்பை எரிப்பது , வாகன புகை மாசால் பாதிக்கப்படுகிறது.இதை விட கொடுமை குழந்தைகளை நுரையீரல் புற்று நோய் பாதிப்பது எப்படி தெரியுமா அந்த குழந்தையின் பெற்றோரோ அல்லது உடன் இருப்பவர்கள் புகைக்கும் பொழுது அந்த புகை அந்த பிஞ்சு நுரையீரலை தாக்குகிறது என்பது யாருக்கு தெரியும் ? என்கிறார் மரியா .
அவரின் ஆராய்ச்சி மற்றும் வருத்தமே ஆண்களை பாதிக்கும் புரோஸ்டேட் கேன்சர் தான் !

" நாம் நினைக்கிறோம் வயதான ஆண்களுக்கு தான் இந்த புற்று நோய் தாக்குகிறது என்று ,இளைஞர்களையும் அது தாக்குகிறது என்பது தான் ஷாக்கிங் நியூஸ் இளம் ஆண்களின் லைப் ஸ்டைல் ,உணவு முறை வேலை பளு , மன அழுத்தம் மிக பெரிய காரணமாக உள்ளது .முக்கியமாக கனரக வாகன ஓட்டிகள் , காவல்துறையினர் ,ஐ டி ஊழியர்கள் என்று பாதிப்புக்குளாகிறார்கள். அதிக நேரம் நின்று பணிசெய்யும் போதும் , நீண்டநேரம் மற்றும் இரவில் தூக்கமில்லாமல் அமர்ந்து பணிபுரியும் நபர்கள் அதிக நேரம் சீறுநீர் கழிக்காமல் இருப்பது ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதால் இந்த கேன்சர் நோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .புரோஸ்டேட் சுரப்பியில் விந்தணு தேக்கம் ஏற்படும்போது மற்றும் வயதாகும்பொழுது அந்த சுரப்பியில் வீக்கம் ஏற்படும்பொழுது இந்த புற்று நோய் வர அதிக வாய்ப்புகள் இருக்கிறது .
அதே போல மரபியல் ரீதியாக தந்தைக்கு இந்த நோய் இருந்தால் அது மகனுக்கும் வரலாம் என்று கூறப்படுகிறது.
இதற்கான அறிகுறிகள் என்ன என்று தெரிந்து கொள்வது நல்லது , அதிகமாக இரவில் சிறுநீர் கழிப்பது ,பிறப்புஉறுப்பில் எரிச்சல் ,சிறுநீர் கழிக்கும் போது ரத்தம் கசிவது , விதைபையில் வலிவருவது,
இடுப்பில் வலி ஏற்பட்டு அது கால்களிலும் பரவும்போது அதுவும் இந்த கேன்சர் நோயிக்கு ஒரு அறிகுறி .

உடனே மருத்துவரை சந்தித்து ஆலோசனை கேட்பது பின் PSA [Prostate -Specific Antigen] ரத்த பரிசோதனை செய்வது அவசியம் .
இந்த புற்று நோய் ஆபத்தானதா என்றால் ஆபத்தானது தான் ஆரம்பத்தில் சில அறிகுறிகள் தெரியும்போதே உடனே மருத்துவர்களை அணுகி சரியான பரிசோதனை செய்து சிகிச்சை எடுத்துக்கொண்டால் எந்த பயமும் இல்லை. பெரும்பாலான ஆண்கள் தங்களுக்கு ஏற்படும் சங்கடங்களை வெளியே சொல்வது இல்லை அதிலும் தங்களின் பிறப்புறுப்பு சம்மந்தமான பிரச்சனைகளை மருத்துவரிடம் சொல்லாமல் மறைத்து வைத்து விடுவதால் மிக பெரிய ஆபத்தான நிலையில் போய் நிற்கிறார்கள் பாவம் !

UK போன்ற நாடுகளில் பொது மருத்துவ ஆலோசனை மையம் NHS இருப்பதால் அனைத்து மக்களும் அங்கு தங்களின் பெயர்களை பதிவு செய்து வைப்பது அவசியம் .உடல்ரீதியான பிரச்சனை இருக்கும் போது எங்களை போன்ற மருத்துவ நிர்வாக ஆலோசகரை அணுகி கலந்தாலோசிக்கும்பொழுது தெளிவான சிகிச்சைக்கு வழிவகுக்கும் பெரும்பாலான ஆண்கள் இந்த உடல் பிரச்சனையை சொல்ல தயக்கமும் பயமும் ஏற்படுவது தான் உண்மை .
யு கே வில் வருடத்திற்கு ஒரு முறை எல்லாரும் கட்டாயம் மருத்துவ பரிசோதனையை GP யில் செய்து கொள்ளவேண்டும் அப்பொழுது ஒருவரின் முழு உடல் ஆய்வு தெரியும் அவர்களின் பரிசோதனை வரலாறு பாதுகாக்கப்பட்டு என்ன பிரச்னையுள்ளது என்பதை தெரிந்துகொண்டு சிகிச்சைக்கு மருத்துவரின் ஆலோசனைக்கு அனுப்பிவைக்கப்படும் ".
மேலும் அவர் கூறும்போது , " நம் உடல் நலன் காத்துக்கொள்வது நம் கையிலும் வீட்டிலும் தான் முதலில் துவக்க வேண்டும் .முக்கியமாக நம் இந்தியாவில் உள்ள ஆண்கள் கொழுப்பு உணவை தவிர்ப்பது நல்லது பஜ்ஜி ,போண்டா , பிஸ்ஸா போன்ற ஜங் உணவுகளை தவிர்ப்பது நல்லது.
தினம் உடற்பயிற்ச்சியானா வாக்கிங் ,சைக்ளிங் ,ரன்னிங் செல்வது மிக நல்லது அதிலும் காலை பயிற்ச்சி என்பது சுத்த காற்று சுவாசிப்பது ,சூரிய வெளிச்சத்தால் வைட்டமின் டி இலவசமாக நம் உடலுக்கு கிடைக்கும் நம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை எரித்து விடும் அப்பொழுது நம் உடல் ஆரோக்கியத்தை அரவணைத்து கொள்ளும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை .
மற்ற ஒரு விஷயம் காலை பிரேக் பாஸ்ட் 7 .30 முதல் 8 .30 மணிக்குள் உட்கொள்வது ,இரவு டின்னெர் அதே நேரத்திற்கு உண்ணவேண்டும் பின்னர் செல் போன் ,டிவி யை தவிர்த்து விட்டு அமைதியான பிராத்தனை அல்லது சிறிது நேரம் நல்ல புத்தகத்தை படித்துவிட்டு நிம்மதியாக sleep like baby அப்பொழுது எந்த நோய்யும் உங்கள் உடலை சீண்டாது !."

" பெண்களுக்கு ஏகப்பட்ட விழிப்புணர்வு இருந்தாலும் இளம் வயது முதல் 30 வயதுள்ள பெண்கள் தங்களின் மாதவிடாய் பிரச்னையை அலட்சியப்படுதுவது அவர்களுக்கு ஆபத்தை உருவாக்கும் என்பதை புரிந்து கொள்வது அவசியம். அதிகமான ரத்தப்போக்கு ,வலி இருந்தால் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்று சிகிச்சை மேற்கொள்வதை நினைவில் கொள்வது அவசியம். பெண்களின் மேல் அதிக அக்கறை எடுத்து கொள்ளும் நம் சமுதாயம் ஆண்களின் உடல் மனரீதியான பிரச்சனைகளை கண்டுகொள்வதில்லை .சரியான விழிப்புணர்வு இல்லாததானாலும் ஆண்கள் மத்தியில் இந்த புரோஸ்டேட் கேன்சர் என்பது பெரிய பயத்தையும் அவமரியாதையை ஏற்படுத்தி அவர்களின் உயிருக்கே ஆபத்தை வரவழைத்து கொள்வது தான் வருத்தமான விஷயம்".
புரோஸ்டேட் கேன்சர் உலகளவில் எத்தனை ஆண்களை பாதித்துள்ளது என்பதை பற்றிய ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது 2024 ஆம் ஆண்டு 1 .5 மில்லியன் ஆண்களை பாதித்துள்ளது ,அதில் 4 ,20 ,000 பேர் இந்த புற்றுநோயால் இறந்துள்ளனர்.
இந்தியாவில் 40 ,071 ஆண்கள் இந்த நோய்யால்பாதிக்கப்பட்டுள்னர் .17 ,018 பேர் இறந்தள்ளதாக பதிவாகியுள்ளது .உலகில் இரண்டாவது இடத்தையும் நம் நாட்டில் ஐந்தாவது இடத்தை பெற்றுள்ளது என்ற ஆறுதல் இருந்தாலும் ஆபத்து இருக்கத்தான் செய்கிறது "என்கிறார் மரியா.

அதே சமயம் 2025 ஆம் ஆண்டு புள்ளிவிவரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உலகளவில் 1 .6 மில்லியன் பேரை பாதித்துள்ளது ,463 ,000 ஆண்கள் இறந்துள்ளார்கள் .இந்தியாவில் 44 ,000 பேர் பாதித்துள்ளனர் .18 ,000 பேர் இறந்துள்ளனர். இதை பார்க்கும்பொழுது இதன் தாக்கம் சற்று உயர்ந்துள்ளது வருத்தமளிக்கிறது.
அமெரிக்காவில் 59 வயது மதிக்கத்தக்க ஒருவர் வழக்கமான உடல் பரிசோதனைக்கு செல்லும் போது அவரை PSA பரிசோதனையும் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது .பரிசோதனை முடிவுகள் PSA 7 .5 அதிகமாகி சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியள்ளது. அதே சமயம் இதே நபர் ஐந்து மாதங்களுக்கு எதர்ச்சையாக முன் பரிசோதித்த போது 1 .3 என்று இருந்துள்ளது .இதில் இருந்து நமக்கு தெரிவது எப்படிவேண்டுமானாலும் புற்று நோய் வளர வாய்ப்பு உள்ளது என்பதை புரிந்து கொள்வது நல்லது .
மற்ற ஒரு விஷயம் PSA டெஸ்ட் என்பது மிகவும் நல்லது அதே சமயம் அந்த பரிசோதனை புரோஸ்டேட் கேன்சர் அறிகுறி என்று மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டாம் சில சமயம் புரோஸ்டேட் சுரபியில் வீக்கம் ஏற்பட்டாலும் PSA பரிசோதனை அளவு அதிகமாக காண்பிக்கும் போது யாரும் பயப்படவேண்டாம் மருத்துவரின் ஆலோசனையை பெற்றாலே போதுமானது .
மருந்து தயாரிக்கும் முன்னணி நிறுவனங்களான Johnson & Johnson , Astellas Pharma, Pfizer , Astrazeneca ,Novartis ,Bayer புதிய ஆராய்ட்ச்சி நடத்தப்பட்டு நவீன சிகிச்சை முறையான chemotherapy ( மருந்துகள் -abiraterone ,enzalutamide ,apalutamide and darolutamide), hormonal theraphy மற்றும் Immuno theraphy புரோஸ்டேட் கேன்சரை எதிர்த்து போராட துவங்கியுள்னர் .
ஆராய்ச்சி நிறுவனங்களான AIIMS ,ICMR ,CMC Vellor இதற்கான புதிய மருத்துவ கண்டுபிடிப்புகளை துவக்கியுள்ளனர் என்பது ஆறுதலான விஷயம் ,புது நம்பிக்கையை இவர்கள் விதைத்துள்ளனர் என்று கூறுகிறார் மரியா .
செப்டம்பர் மாதம் புரோஸ்டேட் கேன்சர் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது .

மேலும் மரியா கூறும்போது ," ஆண்களே கேன்சர் என்ற வார்த்தையை கேட்டு பயப்படவேண்டாம் .அதே நேரத்தில் கண்டுகொள்ளாமல் இருக்கவேண்டாம் .உங்களின் உடல் நலனை உணர்ந்து உன்னிப்பாக கவனிக்கவேண்டும் .எதாவது அறிகுறிகள் உணர்ந்தால் மருத்துவ ஆலோசகரை அணுகி ஆலோசனை பெற்று மருத்துவரை சந்திப்பது மிக அவசியம் " என்கிறார் .

Leave a comment
Upload