தொடர்கள்
பேரிடர்
டெங்கு ஜூரம் நிலவரம் !! -விகடகவியார்

20260826001512847.jpeg

தமிழ்நாட்டில் இந்த ஆண்டில் இதுவரை 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்

தமிழ்நாடு பொது சுகாதார மற்றும் மருத்துவ இயக்குனரகம் தகவல்படி ஜனவரி 1 முதல் செப்டம்பர் 20 வரை 18,334 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.

2025 ஆம் ஆண்டு இதே ஜனவரி முதல் செப்டம்பர் வரையில் 15, 688 பாதிப்புகளும் 13 மரணங்களும் பதிவாகியுள்ளன. இந்த சூழலில் வரும் மாதங்களில் டெங்கு பரவல், மேலும் அதிகரிக்க கூடும் என சுகாதாரத்துறை தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது .

அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் ஏடிஎஸ் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்வதற்கு உகந்த சூழல் உருவாக்கப்படும் என்பதால் தொடர்ச்சியான கண்காணிப்புகளும் தடுப்பு நடவடிக்கைகள் முக்கியமானது சுகாதாரத்துறை கூறியுள்ளது.

அரசின் புள்ளி விவரங்களே டெங்கு பரவல் தொடர்வதையே காட்டுகின்றன. உதாரணமாக செப்டம்பர் 17 தேதி மட்டும் 244 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது தினம்தோறும் தொடர்கிறது.

குறிப்பாக சென்னை ,திருவள்ளூர் ,செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் டெங்கு அறிகுறிகளுடன் வரக்கூடிய மக்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்து வருவதாக தகவல்கள் சொல்கின்றன.

இந்த சூழலில் டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த பொதுமக்களின் முழு ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்று சுகாதார துறை கேட்டுக் கொண்டுள்ளது. வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் விடுதியில் தங்கி படித்த மாணவர் ஒருவர் கடந்த வாரம் டெங்கு காய்ச்சலால் இறந்ததாகபத்திரிகைகளில் செய்தி வெளியானது.

இது தவிர 20 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட அவர்களை விடுதியில் இருந்து சொந்த ஊருக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி ஆணையர் அண்ணா பல்கலைக்க முழுவதும் டெங்கு கொசு தடுப்புக்கான மருந்து தெளித்தல், தேங்கி இருந்த சாக்கடை நீரை அகற்றல் போன்ற பணிகளை நேரடி கண்காணிப்பில் கவனித்து டெங்கு தடுப்பு பணியில் ஈடுபட்டார்.

அண்ணா பல்கலைக்கழகம் மாணவர் டெங்கு காய்ச்சலால் இறக்கவில்லை. உண்ணி காய்ச்சல் காரணமாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதுசிகிச்சை பலனளிக்காமல் இருந்துவிட்டார்என்று சுகாதாரத் துறை கருத்து தெரிவித்தது

உண்ணிகாய்ச்சல் என்பது ஒரு வகை பாக்டீரியாவில் ஏற்படும் தொற்று .இது சிறிய செடிகள் காணப்படும் ஒரு வகை உண்ணியில் காணப்படும். இந்த உண்ணிகள் மனிதர்களை கடிக்கும்போது மனிதர்களுக்கு உண்ணி காய்ச்சல் நோய் உண்டாகிறது என்றும் சுகாதாரத் துறை சொன்னது.

பொதுவாக விளைநிலங்கள் செடி கொடிகள் இருந்த பகுதி ஆகியவற்றில் இந்த பாக்டீரியா இருக்கும்.

நகர்ப்புறங்களும் இதற்கு விதிவிலக்கு அல்லஎன்று 2024 ஆம் ஆண்டு தேசிய நோய் கட்டுப்பாடு மையம் இந்த உண்ணி காய்ச்சல் பற்றி தெரிவித்து இருக்கிறது .இந்த நோய்க்கான அறிகுறி, திடீர் காய்ச்சல், குளிர், உடல் வலி தசை வலி, உண்ணி கடித்த இடத்தில் தோலில் சிவப்பு புள்ளிகள்ஆகியவை என்பதையும்தேசிய நோய் கட்டுப்பாடு மையம் தெரிவித்திருக்கிறது.