தொடர்கள்
சினிமா
சினிமா சினிமா சினிமா-லைட் பாய்

ராஷ்மிகா மந்தனா

20260825173127449.jpeg

பழங்குடி பெண்ணாக ராஷ்மிகா நடித்துள்ள 'மைசா' படம் நவம்பர் 27-ஆம் தேதி ரிலீஸ். தனி ஒரு போராளியாக நின்று களம் காணும் அஞ்சாத ஒரு பெண்ணாக ராஷ்மிகா இந்த படத்தில் நடித்திருக்கிறார்.

வித்யா பாலன்

20260824200225220.jpeg

ரஜினி நடிக்கும் ஜெயிலர் 2 படத்தில் வித்யா பாலன் காந்தா கேரக்டரில் நடிக்கிறார். அவரது முதல் தோற்றத்தில் வித்யா பாலன் கையில் சிகரெட் நடந்து வரும் காட்சிகள் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

சூரி

20260825173710678.jpeg

சூரி நடித்த 'மண்டாடி' படம் 100 கோடி வசூலை தாண்டி உள்ளது. 100 கோடி வசூல் நடிகர்கள் வரிசையில் முதல் முறையாக சூரி இப்போது இணைந்திருக்கிறார்.

தமன்னா

20260825173354549.jpeg

"என் பயணம் அதிக வேகத் தடைகளைக் கொண்டது. ஆனாலும் என் வேகத்தை குறைக்காமலும், நிதானம் தவறாமல் என் கனவுகளை துரத்தி செல்கிறேன் " என்கிறார் நடிகை தமன்னா.

காஜல் அகர்வால்

20260825174042758.jpeg

"சகிப்புத்தன்மை மற்றும் அளவுக்கு அதிகமான சமூக வலைத்தலை பயன்பாடே அதிகரித்து வரும் விவாகரத்துகளுக்கு முக்கிய காரணம்" என்கிறார் நடிகை காஜல் அகர்வால்.

நிதிஅகர்வால்

20260825171720742.jpeg

"நல்ல கதையம்சமுள்ள கதாபாத்திரங்களுக்கான களம் தமிழ் சினிமா " நிதி அகர்வால்.

ஜேசன் சஞ்சய்

20260825171339313.jpeg

"எதிர்காலத்தில் சூரியுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக" ஜேசன் சஞ்சய் சொல்கிறார்.

ராதிகா ஆப்தே

20260825172035770.jpeg

"சமீபத்தில் ஒரு படத்தில் சண்டைக் காட்சிகளில் உள்ளாடை மற்றும் ப்ரா மட்டும் அணிந்து கொண்டு நடிக்க முடியுமா என்று கேட்டார்கள், நான் மறுத்து விட்டேன். முன்பு செய்திருக்கிறிர்களே என்று கேட்டார்கள். அப்போது செய்தேன் இப்போது முடியாது என்று சொன்னேன் "என்று ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார் நடிகை ராதிகா ஆப்தே.

நானி

20260825171235547.jpeg

"தமிழ் திரைப்படங்கள் எனக்கு ஒரு பைபிள் மாதிரி. என்னுடைய சினிமா அறிவிற்கும் என்னுடைய மீதான ஆர்வத்திற்கும், காதலுக்கும் தமிழ் சினிமாவில் உள்ள கலைஞர்கள் தான் இன்ஸ்பிரேஷன் " என்கிறார் நடிகர் நானி.

காயடு லோஹர்

20260825165914789.jpeg

சமூக வலைதள ரசிகர்களுக்கென்று பிரத்யோகமாக போட்டோ ஷுட் மூலம் எடுத்த புகைப்படங்களை காயடு லோஹர் சமூக வலைதளத்தில் பதிவு செய்து ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறார்.

பிரியா வாரியார்

20260825170048968.jpeg

"நீங்கள் எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள்? என்ற கேள்விக்கு, "நீங்கள் ஏன் எனக்கு திருமணம் செய்து வைக்க இவ்வளவு ஆர்வமாக இருக்கிறீர்கள் ? நான் சின்னப் பெண்ணுதான்" என்று பதில் சொல்லி இருக்கிறார் நடிகை பிரியா வாரியார்.

மகிமா நம்பியார்

மண்டாடி படத்தில் சூரியுடன் இணைந்து நடித்த மஹிமா நம்பியார் மீண்டும் அவருடன் நடிக்க ஆசைப்படுகிறார்.

சோபிதா துலி பாலா

20260825170558459.jpeg

"எங்கள் கிராமத்தில் குறிப்பாக மற்ற துறைகளில் இருந்து வரும் புதிய கனவு காண்பவர்களுக்கு சூழல் ஊக்கமற்றதாக இருந்தது. எல்லாவற்றையும் குறை கூறும் மனப்பான்மை அதிகமாக இருந்தது. அதனால்,16 வயதில்வீட்டிலிருந்து வெளியேறி மும்பையில் குடியேறினேன் "என்கிறார் நடிகை சோபிதா துலி பாலா.