தொடர்கள்
அரசியல்
கருத்துக்கதிர்வேலன்

20260824191142483.jpeg

கைதுக்கான காரணங்களை எழுத்துப்பூர்வமாக தர வேண்டும் உச்ச நீதிமன்றம் உத்தரவு.

அதாவது உண்மைய சொல்லனுமாம்.

சொந்தமாக டிவி சேனல் தொடங்கிய அதிபர் மாளிகை.

டிரம்ஸ் விடுற உடன்ஸ்ஸையெல்லாம் மீடியா கண்டுக்க மாட்டேங்குது அதனால !!

காலை உணவு திட்ட விரிவாகத்திற்கு பாராட்டு தெரிவிக்கலாம் .மாணிக்கம் தாகூர் அறிக்கை.

ஆமா இது தான் கூட்டணி தர்மம்.

காங்கிரஸில் இருந்துதான் பிரதமர் வருவார் பா.சிதம்பரம்.

அவர் ராகுல் காந்தின்னும் சொல்லல ? எந்த காங்கிரஸ்ன்னும் சொல்லல !!

பாமக நடுநிலை வகிப்பதற்கு முக்கிய காரணங்கள் என்ன ? பரபரப்பான புதிய தகவல்கள்.

அன்புமணி ராமதாஸ் ராஜ்யசபா உறுப்பினரா அதிமுகதயவில் ஆகிவிட்டார். இப்போதைக்கு உடனடித் தேர்தல் எதுவும் இல்லை இதான் அந்த புதிய பரபரப்புக்கான காரணம் !!

மன்னாதி மன்னர்களையே தோற்கடித்த கட்சி திராவிட முன்னேற்ற கழகம் துரைமுருகன்.

ஆனா, பாருங்க தலைவரே, ஜனநாயகத்துகிட்ட தோத்துப் போயிட்டீங்க !!

சிலர் என்னை போராளி என்று சொல்கிறார்கள், சிலர் என்னை நடிகர்ன்னு சொல்றாங்க பிரகாஷ்ராஜ்.

ஆனா, போராளி மாதிரி நடிக்கிற நடிகர் அப்படித்தானே !!

போதை பானங்கள் தடை செய்வது அரசின் கொள்கை முடிவு சார்ந்தது. கள் குறித்த வழக்கில் தமிழக அரசு பதில் மனு.

கொள்ளை முடிவுன்னு கூட சொல்லலாம்.

வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதியில் மக்களை பாதுகாக்க வேண்டும் விஜய் உத்தரவு.

அதாவது அவங்களுக்கு சாம்பார் சாதம், தயிர் சாதம் தரணும் பள்ளிக்கூடங்களில் தங்க வைக்கணும், அந்த பாதுகாப்பு தானே ?

மின்வெட்டால் முடங்கிய தொழிற்சாலைகள்.

மின்வெட்டே கிடையாது அப்படின்னு அமைச்சர் சொல்றாரு ?

திருமாவின் ஜாகுவார் காரில் 'CM2031' தில்லாலங்கடி நம்பர் பிளேட்டால் சர்ச்சை.

அந்த நம்பர் ஏதோ ஒரு மோட்டார் பைக் நம்பர்ன்னு சொல்றாங்க திருமா சார் உண்மையா கோபால் ?

டெங்கு வராமல் இருக்கணுமா முழுக்கை சட்டை, பேண்ட் போடுங்க ! சுகாதாரத் துறை அமைச்சர் அறிவுரை.

அரசாங்கம் எதுவும் செய்யாது போல தெரியுது .

முதலமைச்சர் விஜய் 27-ஆம் தேதி கரூர் செல்கிறார்.

குழந்தைகள் ஜாக்கிரதை.