தொடர்கள்
Other
மூலிகை மருத்துவம் - மீனாசேகர்.

Herbal medicine

நோயற்ற வாழ்வே.. குறைவற்ற செல்வம்…
நாம் எத்தனை செல்வங்களைப் பெற்று இருந்தாலும், ஆரோக்கியம் மட்டும் இல்லாவிட்டால் எந்த செல்வங்களையும் நாம் அனுபவிக்க இயலாது. நல்ல உடல் வலிமை இருந்தால் மட்டுமே மன உறுதியுடன் செயலாற்ற முடியும். நோய் வந்தபின் தவிப்பதைவிட, வரும்முன் காப்பது மிகச் சிறந்த வழியாகும்.
நம் முன்னோர்கள் இயற்கையோடு இணைந்து வாழ்ந்ததால் தான் தாவரங்களின் மருத்துவக் குணங்களையும் மிக எளிதாகப் புரிந்து வைத்திருந்தனர்.
மூலிகை மருத்துவம் மற்றும் பாட்டி வைத்தியத்தின் பலன்கள் சில…

ஞாபக சக்தி பெருக:

Herbal medicine

வல்லாரைக் கீரையை உணவில் சேர்த்துச் சாப்பிட்டு வரலாம்.
வல்லாரை, வசம்பு பொடியாக்கி தேனில் கலந்து சாப்பிடலாம்.
மாதுளம் பழம் அடிக்கடி சாப்பிட்டு வர ஞாபக சக்தி பெருகும்.
பெருவிரலும் ஆள்காட்டி விரலும் இணைத்து வைத்திருக்கும் சின் முத்திரையால் (ஒரு மணி நேரம்) ஞாபக சக்தி அதிகரிக்கும்.

வாய் துர்நாற்றம் நீங்க:
நெல்லி முள்ளி, தான்றிக்காய், கடுக்காய், இம்மூன்றையும் குடிநீரில் ஊறவைத்து வாய் கொப்பளித்து வர வாய் துர்நாற்றம் நீங்கும்.
தினமும் கோதுமை புல்லை மென்று துப்பி வந்தாலும் துர்நாற்றம் குறையும்.
கொட்டைப் பாக்குடன் கிராம்பு சேர்த்துப் பொடித்த பொடியைச் சாப்பாட்டிற்குப் பின் வாயில் அடக்கி வைத்துத் துப்பி வரவும்.

தலைவலியிலிருந்து விடுபட:

Herbal medicine

அகத்தி இலைசாறை நெற்றியில் தடவுவதால் தலைவலியிலிருந்து விடுபடலாம்.
குங்குமப்பூவைத் தாய்ப்பால் விட்டு அரைத்து நெற்றியில் பற்று போடலாம்.
சுக்கையும் அரைத்துப் பற்று போடலாம்.
ஒற்றைத் தலைவலிக்கு எட்டி மரக்கொழுந்து, மிளகு, பூண்டு இவைகளை நல்லெண்ணெய்யில் போட்டுக் கொதிக்க வைத்துக் குளிக்கலாம்
மிளகாய் வற்றல், மிளகு நல்லெண்ணெய்யில் காய்ச்சி வாரம் ஒரு நாள் தலை முழுகி வர எவ்விதமான தலைவலியும் தீரும்.