தொடர்கள்
ஆரோகியம்
123 விதிமுறை - மஹாத்ரியா

20260826072818465.jpeg

(மஹாத்ரியா வின் வீடியோவிற்கு இங்கே கிளிக்கவும்)

பல முறை நமக்கே தோன்றாத சில விஷயங்கள் நம்மையறியாமல் ஒரு யூடியூப் வீடியோவில் தலைக்குள் பல்பு எரியும்.

அந்த வகையில் மஹாத்ரியா ரா என்ற ஒரு மாமனிதனைப் பற்றி அறிந்திருக்காதவர்கள், அல்லது அவரை பின் தொடராதவர்கள், சட்டென்று இந்த வீடியோவை பார்க்க நேர்ந்தால், அவர்களுக்கு உடற்பயிற்சியின் அவசியம் புரிய வரும்.

மஹாத்ரியா ஒரு ஆன்மீக தலைவரில்லை. வாழ்க்கைக்கு தேவையான, நேர மேலாண்மை, உடற்பயிற்சி, உறவு நலம், மன நலம், தேச நலம் இப்படிப் பட்ட அத்தியாவசியமான விஷயங்களை நமக்கே தெரிந்த ஆனால் பின்பற்றாத விஷயங்களை பின்பற்ற வைப்பவர்.

அவரது இந்த குட்டி வீடியோ நமக்குள் பல கதவுகளை திறக்கும். சந்தேகமேயில்லை.

மனிதன் பல்பரிமாண ஆளுமை கொண்டவன். ஒரு நாளில் உள்ள 24 மணி நேரத்தில், தினமும் 1 மணி நேரத்தை உங்கள் உடலின் ஆரோக்கியத்திற்காக ஒதுக்குங்கள். அப்படிச் செய்தால், மீதமுள்ள 23 மணி நேரமும் உங்கள் உடல் உங்களுக்கு முழு சுதந்திரத்தையும், ஒத்துழைப்பையும் தரும்.

தினசரி கடமை: உடற்பயிற்சி என்பதை ஏதோ எப்போதாவது செய்வது என்று இல்லாமல், தினமும் தவறாமல் செய்ய வேண்டும். "நேரமில்லை" என்று சாக்குப்போக்கு சொல்லாமல், இதை ஒரு முக்கியமான பொறுப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

பல்வேறு பயிற்சிகள்: உங்களுக்குப் பிடித்த எந்தவொரு உடற்பயிற்சியையும் தேர்வு செய்யலாம்.

நடைபயிற்சி (Walking)

நீச்சல் (Swimming)

ஜிம் உடற்பயிற்சி / வெயிட் டிரெய்னிங் (Weight Training)

யோகா மற்றும் பிராணாயாமம் (Yoga & Pranayama) எதுவாக இருந்தாலும் தினமும் உடலை இயங்க வைப்பது அவசியம்.

சிறந்த பரிசு: தினமும் 1 மணி நேரம் உடலுக்குப் பயிற்சி தந்து ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதே, நாம் நமக்குக் கொடுத்துக்கொள்ளும் மிகச் சிறந்த பரிசாகும்.

இது நமக்கு தெரியாததல்ல. ஆனால் மஹாத்ரியா போல ஒருவர் நம்மிடம் சொல்வது நம் மனசாட்சி நம்மிடம் பேசுவதற்கு சமம்.

இறுதியாக அவர் சொல்வது தான் உண்மை.

"நம்மால் முடியாது என்பதல்ல உண்மை, நாம் செய்வதில்லை என்பதே உண்மை."

இது உடற்பயிற்சி மட்டுமல்ல பல விஷயங்களுக்கும் பொருந்தும்.

மஹாத்ரியா வின் வீடியோவிற்கு இங்கே கிளிக்கவும்