தொடர்கள்
ஆரோகியம்
இதயத்தைப் பாதுகாப்போம் -டாக்டர் கார்த்திக் ராமநாதன்.

❤️ இதயத்தைப் பாதுகாப்போம் – ஆயுர்வேத வழிகாட்டுதல்.

20260824190950953.jpeg

"உணவில் கட்டுப்பாடு… இதயத்திற்கு பாதுகாப்பு"

இதயம் நம் உடலின் முக்கியமான உறுப்பு. ஆரோக்கியமான உணவு, சீரான உடற்பயிற்சி, நல்ல தூக்கம் மற்றும் மனஅழுத்தக் கட்டுப்பாடு ஆகியவை இதயத்தை நீண்டகாலம் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

ஆயுர்வேதத்தில் பொதுவான பராமரிப்பு:

- சீரான உணவு, காய்கறிகள், கீரைகள், பழங்கள், முழுதானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் அளவான நல்ல கொழுப்பு உள்ள ஆகாரங்களை சேர்த்துக் கொள்ளுங்கள்.

- உப்பு, சர்க்கரை மற்றும் அதிக எண்ணெய் உள்ள உணவுகளை குறைக்கவும்.

- தினமும் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி அல்லது உடலுக்கேற்ற உடற்பயிற்சி செய்யலாம்.

- போதுமான தூக்கம் மற்றும் மனஅழுத்தத்தைக் குறைக்கும்

- தியானம்/பிராணாயாமம் பயனுள்ளதாக இருக்கலாம்.

- புகைபிடித்தல் மற்றும் அதிக மதுபானத்தை தவிர்க்கவும்.

- உடல் எடை, இரத்த அழுத்தம், சர்க்கரை மற்றும் கொழுப்பு அளவுகளை அவ்வப்போது பரிசோதிக்கவும்.

ஆயுர்வேத மருந்து

மருதம் பட்டை சூரணம் அல்லது அர்ஜுனா அரிஷ்டம் அல்லது பார்த்தாதய அரிஷ்டம் மருத்துவர் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்ளலாம். 

Home Remedies

வெதுவெதுப்பான நீர், சீரான உணவு, போதுமான ஓய்வு போன்ற எளிய பழக்கங்களை கடைப்பிடிக்கலாம். பூண்டு, இஞ்சி, மஞ்சள் போன்றவற்றை உணவில் அளவோடு சேர்ப்பது பொதுவான ஆரோக்கிய உணவுப் பழக்கமாக இருக்கலாம். ஆனால் இவை இதய நோய்க்கான மருந்துகளுக்கு மாற்றாகாது.

முக்கியம்:

மார்பு வலி/அழுத்தம், மூச்சுத்திணறல், அதிக வியர்வை, மயக்கம் அல்லது வலி -கை/தாடை/முதுகிற்கு பரவுதல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டு வைத்தியத்தை நம்பாமல் உடனடியாக அவசர மருத்துவ உதவி பெற வேண்டும்.

“இதய நோய் வராமல் தடுப்பதில் தினசரி ஒழுக்கம் மற்றும் வாழ்க்கை முறைதான் (Lifestyle management)முதல் பாதுகாப்பு.”

"இதயத்தை நேசிப்போம்… ஆரோக்கியமாக வாழ்வோம்"

உங்கள் இதயத்துடன்

டாக்டர் கார்த்திக் ராமநாதன்.