
அளவுக்கு அதிகமானால் மருந்தும் நஞ்சு தான் என்பதே பலமுறை நமக்கு மருத்துவர்கள் அறிவுரையாகவும், எச்சரிக்கையாகவும் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
சமீப காலமாக சிலர் குறிப்பிட்ட இருமல் மருந்துகளை உட்கொள்ளக்கூடாது என்றும் அவற்றைத் தடை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுரையின் பேரில் அரசாங்கம் அவற்றை தடை செய்தும் இருக்கிறது.
குறிப்பாக பாரசிட்டமால் பற்றி மருத்துவர்கள் தொடர்ந்து எச்சரிக்கை செய்துகொண்டே இருக்கிறார்கள். பாரசிட்டமால் பின் விளைவுகளை ஏற்படுத்தும் ஒரு மருந்து என்பதுதான் பெரும்பாலான மருத்துவர்கள் கருத்து. அதற்கு உதாரணம் தான் பிரிட்டனில் ஒரு மாணவருக்கு ஏற்பட்ட பாதிப்பு.
பிரிட்டனை சேர்ந்த இருபது வயது முதலாம் ஆண்டு பல்கலைக்கழக மாணவர் சளி தொல்லையால் இரண்டு மருந்துகளை உட்கொண்டார்.
இரண்டு மருந்துகளிலும் பாரசிட்டமால் இருந்தது. அது அவருக்கு தெரியவில்லை. அவர் அந்த மருந்தை அதிக அளவு எடுத்துக் கொண்டதால் அவரது உடல் உறுப்புகள் செயலிழந்து ஆபத்தான நிலையில் அந்த மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
உயிர் காக்கும் கருவிகள் உதவியுடன் சிகிச்சை பெற்ற அவர் பல வாரங்கள் மருத்துவமனையில் இருந்தார். அவர் குணமடைந்தாலும் அவரால் நடக்கவும் முடியாமல் பேசவும் முடியாமல் அவதிப்பட்டார். அதன் பிறகு அவருக்கு உரிய பயிற்சி அளித்து அவருக்கு பேசவும் நடக்கவும் கற்றுக் கொடுத்தனர். அதன் பிறகு முழுவதுமாக குணமடைந்து அவர் கல்வியைத் தொடர்ந்தார்.
மருத்துவர்களின் கருத்துப்படி அவர்கள் புள்ளி விவரங்களை ஆதாரமாக சுட்டிக்காட்டி பாராசிட்டமால் அதிக அளவு உட்கொள்வது மரணத்திற்கு காரணமாகிறது தெரிவிக்கின்றனர்.
மருந்துகள் பற்றிய ஒரு விழிப்புணர்வு மக்களுக்கு நாம் ஏற்படுத்த வேண்டும். அரசாங்கமும் பாரசிட்டமால் மருந்தின் அளவுக்கு அடிக்கடி கட்டுப்பாடுகளை விதித்து கண்காணிக்க வேண்டும் .மருந்துகளை வாங்கும் போது அவற்றில் குறிப்புகளை கவனமாக படிக்க வேண்டும்.
அதன் காலாவதி தேதியை கவனிக்க வேண்டும். மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் நாமே மருந்தகங்களுக்கு சென்று மருந்து வாங்கி சாப்பிடுவது நல்ல அணுகுமுறை இல்லை என்றும் மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

Leave a comment
Upload