
எல் நினோ காரணமாக, தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் அதிக மழையும், வெள்ளமும் ஏற்படலாம் , அதன் பிறகு தண்ணீர் பற்றாக்குறை, வறட்சி கடுமையான வெப்பம் போன்ற பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கலாம் என்றும் தமிழக அரசின் நிபுணர் குழு தெரிவித்துள்ளது.
எல் நினோ என்றால் மழை குறைந்து வறட்சி ஏற்படும் என்ற பொதுவான கருத்து தமிழ்நாட்டைப் பொருத்தவரை சரியாக இருக்காது என்றும் அந்த குழு எச்சரிக்கை செய்திருக்கிறது. 2026-ஆம் ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான வடகிழக்கு பருவமழைக் காலத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் இயல்பை விட அதிக மழை பெய்யக்கூடும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. எனவே தமிழ்நாடு அரசு பல்வேறு சாத்தியமான பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் தயாராக இருக்க வேண்டும் என்றும் அந்தக் குழு பரிந்துரை செய்திருக்கிறது. எல் நினோ 2026ஆம் ஆண்டின் இறுதி மற்றும் 2027-ஆம் ஆண்டில் தொடக்கம் வரை நீடிக்கக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவின் எச்சரிக்கைக்கு ஏற்ப இப்போது இருந்தே திட்டமிட்டு மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் கடமையையும் இந்த அரசு சரிவர செய்ய வேண்டும். வழக்கப்படி பாதுகாப்பாக மக்களை பள்ளிகளில் தங்க வைப்பது அவர்களுக்கு உணவு போடுவது என்ற முறையை மாற்றி இந்த அரசு பொறுப்புடன் செயல்பட வேண்டும்.
அலட்சியம் வேண்டாம்.

Leave a comment
Upload