தொடர்கள்
பொது
அமெரிக்காவில் ஒரு லிட்டர் ஒட்டகப்பால் விலை ருபாய் 3000….. - ஆர்.ராஜேஷ் கன்னா

20180610081518316.jpg

இந்தியாவில் வெள்ளை தங்கம் என்றழைக்கப்படும் ஒட்டகப்பாலை தான் தற்போது அமெரிக்கர்கள் மருத்துவ குணம் அதிகமுள்ளது என விரும்பி குடிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். அமெரிக்கர்களின் இந்த தீடீர் மோகம் உலக நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்கர்கள் ஒட்டக பாலை குடிப்பதற்கு 2009-ல் சட்டம் இயற்றினாலும், 2014 ஆண்டு தான் அது அமுலுக்கு வந்தது. தற்போது இந்தியா போன்ற நாடுகளிலிருந்து 5000 ஒட்டகங்கள் அமெரிக்க பண்ணைகளில் வளர்த்து பால் கறந்து விற்பனை செய்து வருகிறார்கள்.

உலகம் முழவதும் 10 பில்லியன் டாலர் அளவிற்கு ஒட்டகத்தின் பால் மற்றும் பால்பொருட்கள் விற்பனை ஆவதாக அமெரிக்காவின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAQ) தெரிவிக்கிறது. இந்த ஒட்டகப்பால் அமேசன் ஆன்லைன் வர்த்தக தளத்தில் அமோகமாக விற்பனையாகிறது.

20180610081555601.jpg

இந்தியாவில் ஒட்டகப்பாலை அதிகம் விரும்புவதில்லை அதே நேரம் தற்போது அமெரிக்கர்கள் ஒட்டகப்பாலை விரும்பி குடிப்பதால் ஒட்டகப்பாலிற்கு மவுசு அதிகமாகி உள்ளது. இதனால் இந்தியாவில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநில ஒட்டகம் வளர்ப்பவர்கள், ஒட்டகப்பாலை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் அரிய வாய்ப்பு உருவாகி உள்ளது.

ஒட்டக பாலை இந்தியாவில் உள்ள ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலத்தில் ஒட்டகம் வளர்பவர்களிடம் இருந்து 1 லிட்டர் ருபாய் 200 முதல் 250 வரை வாங்கி, அதனை பதப்படுத்தி அதிலுள்ள நச்சுகளை நீக்க ரு 150 வரை செலவு ஆகிறது. ஒட்டகப்பால் திரவ வடிவிலும் பவுடர் வடிவிலும் தயாரிக்கப்படுகிறது.

ஒட்டகப்பால் 200மிலி டெட்ரா பாக்கெட்டுகளில் பதப்படுத்தியும், ஒட்டக பால் பவுடரை 200 கிராம் மற்றும் 500 கிராம் பேக்குகளில் இந்தியாவிலிருந்து அமெரிக்கா ஆன்லைன் வர்த்தகம் மூலம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அமெரிக்காவில் ஒரு லிட்டர் ஒட்டகப்பாலின் விலை 50 அமெரிக்க டாலர்கள், இது இந்திய ருபாய் மதிப்பில் ரூ3000 ஆகும்.

20180610081358854.jpg

ஒட்டக பாலில் 5 மடங்கு விட்டமின் சி யும் 10 மடங்கு இரும்பு சத்தும் பசும் பாலை விட அதிகமாக இருக்கிறது. பசும்பாலில் இருக்கும் சில புரோட்டீன்கள் மனிதர்களுக்கு அலர்ஜி ஏற்படுத்தி, வயிற்று போக்கை ஏற்படுத்துகிறது. ஒட்டகப் பாலில் இந்த அலர்ஜி ஏற்படுத்தும் புரோட்டீன்கள் இல்லை. அதற்கு மாறாக வயிற்று போக்கை கட்டுபடுத்தி நன்மை செய்யும் புரோட்டீன்கள் உள்ளது. ஒட்டகப்பாலில் ஆண்டி பாக்டீரியாவும் , குறைந்த அளவு லாக்டோஸ், சர்க்கரை நோயை தடுக்கும் சிறப்பு புரோட்டீன் நிறைந்த இயற்கையான இன்சுலின் மற்றும் கொழுப்பு சத்து குறைவாக உள்ளது. எலும்பு மூட்டுகளில் உள்ள பசையம் (Gluten) குறையாமல் ஒட்டகப்பால் பார்த்துக் கொள்கிறது. ஒட்டகப்பாலில் அதிகளவு கால்சியம் இருப்பதால் எலும்புகளுக்கு அதிக உறுதியாகவும் பலமாகவும் இருக்கும்.ஒ ட்டகப் பாலில் காப்பர், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாதுக்கள் அதிகளவில் இருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்குவதோடு, உடலில் ரத்த ஒட்டத்தினை எந்த வயதிலும் சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது என்பதனை அமெரிக்கர்கள் கண்டுகொண்டதன் விளைவே, இந்த ஒட்டகப் பால் மோகம் என்று அமெரிக்க மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

20180610081639666.jpg

ராஜஸ்தான், பீகனர் மற்றும் கட்ச் பகுதிகளில் ஒட்டகங்களை வளர்க்கும் 150 விவசாயிகளிடம் மாதம் ஒன்றிற்கு 6000 லிட்டர் ஒட்டகப்பாலை சேகரித்து அமெரிக்காவுக்கு அமேசன் ஆன்லைன் விற்பனையகம் ஏற்றுமதி செய்கிறது. இந்த ஒட்டகப் பால் ஏற்றுமதி கடந்த ஒரு வருடமாக சத்தமில்லாமல் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு செல்கிறது. ராஜஸ்தான் மற்றும் குஜராத் பகுதிகளில் வெகு தொலைவில் இருந்து ஒட்டகப் பாலை சேகரிப்பது என்பது மிக சவாலான விஷயம். ஒட்டகப் பாலை சேகரித்து அது கெடாமல் பதப்படுத்தும் நிறுவனத்திற்கு கொண்டு வருவதற்கு அதிக செலவு ஆகிறது. இந்த பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள் ஒட்டகங்களை தங்கள் விவசாய பொருட்களை சுமந்து செல்லும் பாலைவன கப்பலாக பயன்படுத்தி வருகிறார்கள். அத்துடன் ஒட்டகத்திலிருந்து கறக்கப்படும் பாலை விவசாய குடும்பத்தினரே பருகி விடுகிறார்கள். ஒட்டகத்தின் பாலை எப்படி அதிகளவில் விவசாயிகளிடம் பெற முடியும் என்று எங்கள் டீம்முக்கு பயிற்சி அலித்து வருகிறோம். ராஜஸ்தானில் 90 வயது வரை இருக்கும் முதியவர்களின் ஆயுள் ரகசியம் இந்த ஒட்டகப்பாலை அருந்துவது தான் என்கிறார் அட்விக் உணவு தயாரிப்பு நிறுவனத்தின் ஹிதேஷ் ரதி.

ஒட்டகப் பாலின் லேசான உப்பு கரிக்கும் சுவையால் அமெரிக்கர்கள் ஈர்க்கப்பட்டு, விரும்பி அருந்துவதால், தற்போது இதன் தேவை அதிகரித்துள்ளது. அமெரிக்காவிலுள்ள உயர் வகுப்பினர் ஒட்டகப் பாலை விரும்பி குடிப்பதற்கு இதில் செயற்கையான நிறமிகளோ அல்லது அதிக கொழுப்போ அல்லது பசையமோ இல்லாதது தான். ஒட்டகப் பாலை பவுடர் முறையில் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஆன்லைன் மற்றும் ஆப்லைனில் விற்பனை செய்கிறோம். தற்போது மேற்கத்திய நாடுகளும் ஒட்டகப்பால் பவுடர்களுக்கு ஆர்டர் கொடுக்க ஆரம்பித்துள்ளது. இந்த ஒட்டகப்பால் பவுடரை வெளிநாட்டினர் விரும்பி வாங்குவதால் உயர்தர மெஷின் கொண்டு ஒட்டகப் பால் பவுடர் தயாரிக்கப்படுகிறது என்கிறார் டிஎன் எஸ் குளோபல் வதோரா நிறுவனர் டிவேஷ் அச்மீரா.

இந்தியாவின் ஒட்டகப் பால் சிறந்தது என இந்திய FSSAI (Food Safety and Standard Authority of india ) சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனை அமெரிக்க அரசும் அங்கீரித்துள்ளதால் அமெரிக்காவில் இந்தியாவின் ஒட்டகப்பாலிற்கு மவுசு அதிகமாகி உள்ளது.

20180610081727352.jpg

ராஜஸ்தான் மாநில அரசின் மிருகம் ஒட்டகம் ஆகும். இங்கு ஒட்டகம் வளர்ப்பவர்களுக்கு போதிய வருமானம் கிடைப்பதில்லை. இதனால் ராஜஸ்தான் மிருக வதை சட்டங்களோ மிக கடுமையானது. அதனால் பலர் ராஜஸ்தானிலிருந்து மறைமுகமாக பங்களாதேஷ் நாட்டிற்கு ஒட்டகங்களை கடத்தி அங்கு இறைச்சி கூடங்களுக்கு விற்று விடுகிறார்கள் என்கிறார் விலங்கின ஆர்வலர்.

தற்போது அமெரிக்காவிற்கு ராஜஸ்தான், குஜராத் மாநிலத்தில் இருந்து கடந்த ஒரு வருடமாக ஒட்டகப் பால் ஏற்றுமதி செய்வதால், தங்களுக்கு எதிர்பாராத பெரிய வருமானம் கிடைக்கிறது என்கிறார் ஒட்டக உரிமையாளர்கள் நாதுராம் ராய்க்கா மகிழ்ச்சியுடன்.

ஒட்டகப் பாலை காயச்சாமல் அருந்தினால் MERS (Middle East Respiratory syndrome ) வைரஸ் நோய் தாக்கும். அதனால் ஒட்டகப்பால் அல்லது பவுடர் எதுவாக இருந்தாலும் காய்ச்சிதான் குடிக்க வேண்டும் என டச்சு மற்றும் கட்டார் மெடிக்கல் பவுண்டேஷன் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை செய்கின்றனர்.

பலதரப்பட்ட ஆராய்சிகளில் ஒட்டகப் பால் பல மருத்துவ குணங்களை கொண்டது, ஆட்டிஸம், நீரிழிவு நோய்களை தடுக்கும் என நேஷனல் ரிசர்ச் சென்டர் பீகானார் டைரக்டர் படேல் கூறுகிறார்.

20180610081846238.jpg

இனி ஒட்டகம் மேய்க்கக் கூட லாயிக்கில்லை என்று திட்ட முடியாது! இந்தியாவின் ராஜஸ்தான், குஜராத் விவசாயிகள் ஒட்டகப் பாலை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்து பெரும் லாபம் ஈட்ட முடியும் என்பதே தற்போதைய மகிழ்ச்சியான செய்தி ஆகும்!