செயலிகளால் சூழப்பட்ட உலகம் இது. முன்பெல்லாம் நம் பர்ஸில் என்ன இருக்கிறது என்று பார்ப்பார்கள், அல்லது பெண்களின் கைப்பையில் என்ன இருக்கும் என்று யோசிப்பார்கள். இன்றெல்லாம் நீ என்ன என்ன ஆப் வைத்திருக்கிறாய் என்று கேட்க தோன்றுகிறது. பொருளாதாரத்தை பற்றியும், சேமிப்பு பற்றியும் நாம் என்ன என்ன
செயலிகளை வைத்திருத்தல் நலம். இதோ சில ஆப்ஸ் . உங்களையும் உங்கள் பொருளாதார சூழ்நிலையையும் அறிந்துகொள்ளவும் மேம்படுத்திக்கொள்ளவும்.
MINT by intuit .

intuit நிறுவனம் கொண்டு வந்திருக்கும் இந்த ஆப் ஒரு மிகச் சிறந்தது. குய்க்பூக்ஸ் போன்ற நிதி மேலாண்மை மென்பொருள் தயாரித்த நிறுவனம் இந்த செயலியை கொண்டு வந்துள்ளது. இந்த செயலியில் மிகவும் சிறப்பாக நம்முடைய வரவு செலவுகளை கண்காணிக்க முடியும். நமது அணைத்து வாங்கி மற்றும் கடன் கணக்குகளை இதனில் இணைத்து அணைத்து வரவு செலவுகளை பதிவு செய்து அதிலிருந்து அறிக்கைகளை தயாரிக்க முடியும். நம்மிடம் எவ்வளவு பணம், வருமானம் வருகிறது அதனை எப்படி செலவு செய்கிறோம். எவ்வளவு சேமிக்கிறோம் என்று தெள்ள தெளிவாக பார்க்க முடியும். இந்தக் காலத்தில் விரல் நுனியில் நமது பணபரிமாற்றத்தை கையில் வைத்திருக்க உதவும்.
Expenses by zoho

zoho நிறுவனம் சமீபகாலமாக பல நல்ல செயலிகளை உருவாக்கி உள்ளார்கள். அதில் நிதி சார்ந்த செயலிகளை வெளியிட்டுள்ளது.அதில் expense என்ற செயலி நமது அன்றாட செலவுகளை சில நேரம் குறித்து வைக்க மறந்து விடுவோம். அவைகளை முறையாக பதிவு செய்வதற்க்காகவே இந்த செயலி. பெரும்பாலும் மார்க்கெட்டிங் வேளையில் உள்ளவர்கள் தங்கள் நிறுவனத்துக்காக செய்யும் செலவுகளை பதிவு செய்து பணம் பெற்றுக் கொள்ளுவார்கள். அதாவது பெட்ரோல் போடுவது, கூரியர் அனுப்புவது, மொபைல் பில் செலவுகள், ஹோட்டல்களில் தங்கி சாப்பிட்ட செலவுகள் என அனைத்தையும் இந்த செயலி மூலம் பதிவு செய்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.
Acorns

இது ஒரு அற்புதமான செயலி. ஏனென்றால் இதுவரை நாம் பார்த்த இரண்டு செயலிகளும் நமது வரவு செலவுகளை பதிவு செய்து அறிக்கைகள் கொடுத்து நமது நிதி நிலைமையை அறிய உதவ கூடியவைகள். ஆனால் இந்த செயலி சற்று வித்தியாசம். நாம் செய்யும் ஒவ்வொரு செலவையும் அறிந்து, அந்த செலவுக்கேற்ப சில நிதிகளை சேமிக்க உதவும். அதாவது நாம் 500 ரூபாய்க்கு உணவகத்தில் உணவு சாப்பிடுகிறோம் என்றால், அதே 500 ரூபாயை நமது கணக்கிலிருந்து எடுத்து நம் சார்பாக முதலீடு செய்யும். அதாவது உண்டியலில் போடுவது போல். மாத கடைசியில் நமது சேமிப்பு கணக்கிலிருந்து நமது செலவுக்கு நிகரான பணம் முதலீடு செய்யப்பட்டிருக்கும். இது பல பேருக்கு ஆச்சரியத்தையும் சந்தோஷத்தையும் கூட்டுகிறது. இன்னும் இதன் சேவைகள் இந்தியாவிற்கு வரவில்லை. விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.
Tycoon

Tycoon வருமானத்தை கணக்கிடுவதற்கான செயலி. இது முக்கியமாக தரகர்களை வைத்து வியாபாரம் செய்பவர்கள், இணையத்தில் பல இணையதளங்கள் மூலம் வேலை எடுத்து செய்யும் சுய வேலை செய்பவர்கள். இவர்கள் அனைவரும் பெரும்பாலும் ஒரு தொகையை கமிஷனாக தங்களுக்கு வேலை கொடுப்பவர்களுக்கு தர வேண்டும். இன்னும் சொல்லப் போனால் அவர்களுடைய கமிஷனை எடுத்துக்கொண்டே நமக்கு பணத்தை அனுப்புவார்கள். அவர்களுக்கு குழப்பம் வராமலிருக்க இந்த செயலி உதவும். நாம் எவ்வளவு வேலை செய்திருக்கிறோம், அதற்கு கமிஷன் போக நமக்கு எவ்வளவு வரும் என்று கணக்கீடு தெளிவாக கொடுத்துவிடும்.

Leave a comment
Upload