தொடர்கள்
அரசியல்
சக்தி கேந்திரம் எனும் ஓட்டு இயந்திரம்..

20180614015937738.jpg

"பா.ஜ.கவை வளர்க்க அமித் ஷாவின் கட்டளைப்படி கட்சியின் கட்டமைப்புக்களையும் மாநிலத்தில் பலப்படுத்தி வருகிறோம்" என்றார் கட்சியின் நிர்வாகி ஒருவர் நம்மிடம். அது எப்படி என்பதையும் அவரே விளக்கினார்.


"அரசியல் கட்சிகள் தங்கள் ஓட்டுக்களை அதிகரிக்க பிரபலங்களையும், தலைவர்களையும் நாடுவதே வழக்கம். ஆனால் பாஜக இதில் ஒரு மாபெரும் மாற்றத்தை உருவாக்கியுள்ளது.


பாஜக, மக்களை நோக்கி நெருக்கமாக நகர்கிறது. ஒவ்வொரு வாக்குச் சாவடியின் கணக்கிற்கேற்ப சக்தி கேந்திரங்கள் உருவாக்கப் படுகின்றன. அதற்கு என ஒரு தனி பொறுப்பாளரும், அவருக்கு உதவியாக வாக்காளர் எண்ணிக்கைக்கு ஏற்ப அமைப்பாளர்களும் உருவாக்கப்படுகிறார்கள்.


இவர்கள் தேர்தல் வரைக்கும் காத்திருக்காமல் இப்போதே தங்கள் பணிகளை தொடங்க அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். பல சக்தி கேந்திரங்கள் இப்போதே செயல்பாட்டில் உள்ளன. மக்களை தனித்தனியாக இந்த அமைப்பாளர்கள் சந்தித்து அவர்களுக்கு மத்திய அரசின் திட்டங்கள் மூலம் சாத்தியமான பணிகளை,உதவிகளை செய்து தர வேண்டும்


சின்னச் சின்ன தொகுப்புகளாக சக்தி கேந்திரங்கள் உருவாக்கப்படுவதாலும், அந்தந்த பகுதியைச் சேர்ந்தவருக்கே சக்திக் கேந்திரப் பொறுப்புகள் வழங்கப்படுவதாலும் இவர்கள் வாரத்தில் பல முறை வாக்காளர்களை நேரடியாகச் சந்திக்கும் வாய்ப்புகள் மிக அதிகம்.


இப்படியாக ஐந்து சக்தி கேந்திரங்களை ஒன்றிணைத்து ஒரு மகா சக்தி கேந்திரம் உருவாக்கப்படுகிறது. அதன் பொறுப்பில் பாஜகவின் முழுநேர ஊழியர் ஒருவர் ஈடுபடுத்தப்படுகிறார். இனி மக்கள் MLA, MP வரவிற்காக காத்திருக்க வேண்டாம் அவர்களுக்கு வேண்டியதை சக்தி கேந்திரப் பொறுப்பாளர்களே செய்து தருவார்கள்.. இதன் மூலம் கட்சிக்கு தங்கள் பகுதி ஓட்டுக்களையும் உறுதி செய்வார்கள்.


இனி தமிழகம் முழுவதிலும் பாரத் மதாகி ஜே கோஷம் கேட்டாலும் வியப்பில்லை. பாஜகவின் வலைதளத்தில் A PARTY WITH A DIFFERENCE என்று எழுதப்பட்டிருப்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம்." என்றார் அந்த நிர்வாகி. நமக்கு அவர் பேசுவதை கேட்கையில் இப்போதே அக்கட்சியின் பாதி தேர்தல் அறிக்கையை கேட்பது போல் இருந்தது.