குரோஷியா-
உலக கோப்பை கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் ஃபிரான்சுடன் மோதப் போகிறது.



ஃபிரான்சைப் பற்றி புதிதாக ஒன்றும் சொல்லத் தேவையில்லை. அது ஜெயிக்கும் என்றே உலக மக்கள் ஆரம்பத்திலிருந்து எதிர்பார்த்து வந்திருக்கிறார்கள்.
சூதாட்ட புள்ளிகள் அனைத்திலும் ஃபேவரைட் பிரான்ஸ் என்றே சொல்லப்படுகிறது. ஆனால் குரோஷியா??
ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள தக்கினியூண்டு நாடு.

வெறும் நாற்பது லட்சம் மக்களே உள்ள இந்த நாடு உலகக் கோப்பை இறுதிப்போட்டி வரை வந்திருப்பது அனைவருக்கும் வியப்பு.
இதுவரை ஐந்து முறை உலகக் கோப்பையில் விளையாடியிருக்கும் குரோஷியா இறுதிப் போட்டிக்கு வந்திருப்பது இதுதான் முதல் முறை.
ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டிகளிலேயே ஐந்து முறைதான் விளையாடியிருக்கிறது. அதில் கால் இறுதி வரை மட்டுமே இரண்டு முறை வந்திருக்கிறது இந்த குட்டி நாடு. 1998 மற்றும் 2008 ல்.
குரோஷியாவின் கால்பந்து வரலாறு இதுதான்.
1998 ல் உலகக் கோப்பையில் நுழைந்த குரோஷியா மூன்றாவதாக வர, உலக தர வரிசையில் 125-வது இடத்திலிருந்து 3-வது இடத்திற்கு வந்தது.
ஆனால் 2014 ல் தகுதிச்சுற்றிலேயே பிரேசிலுடன் நடந்த மோதலில் 3-1 என்ற கணக்கில் தோற்றுப் போனது.
2018-ல் நுழைந்தது எப்படி???
குழுச் சுற்றில் நைஜீரியாவை 2-0 என்ற கோல் கணக்கிலும், அர்ஜெண்டினாவை 3-0 என்ற கோல் கணக்கிலும், ஐஸ்லாந்துடன் 2-1 என்ற கோல் கணக்கிலும் வென்று பின்னர் நாக் அவுட்டில் டென்மார்க்கை பெனால்டியில் ஜெயித்து, கால் இறுதியில் ரஷ்யாவை மண்ணைக் கவ்வ வைத்து, அரை இறுதியில் இங்கிலாந்தை எட்டி உதைத்து இறுதிச்சுற்றுக்கு வந்து விட்டது.
இனி ???
ஆருடங்கள் என்ன சொல்கிறது என்றால்... குரோஷியா வெற்றி பெறும் என்றே கணிக்கின்றன. 1998 வீரர்களின் நிழலில் விளையாடும் குரோஷியா வெற்றியை நோக்கியே செல்வதாக விளையாட்டுப் பத்திரிகைகளும் சொல்கின்றன.

லூகா மோட்ரிச்
குரோஷிய கால்பந்து நட்சத்திரம், 'லூகா மோட்ரிச்'சை பொறுத்தவரை 'இந்த அரை இறுதி ஆட்டமே தன் நாட்டு கால்பந்து வீரர்களின் நம்பிக்கையை திரும்பப் பெறும் வாய்ப்பு' என்றார். இப்போது இறுதிப் போட்டிக்குள் நுழைந்து விட, 32 வயதில் இதுவே அவரின் கடைசி உலகக் கோப்பையாக இருக்கும்.
சரி இன்றைய நிலவரப்படி, சூதாட்ட உலகில் யார் ஜெயிக்கப் போகிறார்களாம்?
பிரான்ஸுக்குத் தான் மவுசு. ஒரு டாலர் கட்டினால் ஐம்பது செண்ட் ஜெயிக்கலாம். உணர்ச்சிவசப்பட்டு நீங்கள் எங்கேயாவது பந்தயம் கட்டி, தோற்றாலோ ஜெயித்தாலோ விகடகவி பொறுப்பல்ல !!!
குரோஷியா மேல் ஒரு டாலர் கட்டினால் இரண்டு டாலர்கள் கிடைக்கும்.
ஆனானப்பட்ட கால்பந்தாட்ட நாடுகளை எல்லாம் காலால் உதைத்து விட்டு வந்திருக்கும் குரோஷியா பிரான்சையும் பந்தாடுமா?
இன்னும் ஒரே நாள்தானே...பொறுத்திருந்து பார்ப்போம்!

Leave a comment
Upload