பொது
ஹேக்!! - ஆடிப்போன ட்வீட்டர்! – ஆர்.ராஜேஷ் கன்னா

2019080508063982.jpg

உலகின் பாதுகாப்பான சமூக வலைதளமாக கருதப்படும் டீவிட்டர் கணக்கிலேயே இண்டர்நெட் ஹேக்கர்கள் உள்நுழைந்து, கைவரிசையை காட்டி மிரள வைத்துவிட்டனர். ட்விட்டரின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் பேட்ரிக் டார்சியின் ட்விட்டர் கணக்கை கண் இமைக்கும் நேரத்தில் ஹேக் செய்து இனவெறி சம்மந்தமான சில அவதூறு மெசேஜ்கள் மற்றும் ஜெர்மனியின் நாஜிக்கள் பற்றி செய்திகளை பதிவிட்டனர்.

ட்விட்டர் இணை நிறுவனர் கணக்கினை ஹேக் செய்தவர்கள் சக்லிங்க் ஸ்குவட் (Chuckling Squad) என்ற பெயரில் தங்கள் கைவரிசையை காட்டினர். ட்விட்டர் இணை நிறுவனர் கணக்கினை ஹோக் செய்தவர்கள் பெயர் வெளியிட முடியாத ஒரு சாதாரண மொபைல் இணைப்பு வழங்கும் நிறுவனத்தில் ட்விட்டர் இணை இயக்குநர் செல் எண்ணிற்கான சிம் கார்டு பெற்று, அதிலிருந்து ட்விட்டர் இணை நிறுவனர் கணக்கினை ஆக்டிவேட் செய்து, அவரது ட்விட்டர் பக்கத்தில் நுழைந்து, இனவெறியை தூண்டும் மெசேஜ்களை அனுப்பி வெறும் 15 நிமிடங்களில் ஹேக் செய்து மிரள வைத்துவிட்டனர்.

20190805081250779.jpg

ட்விட்டர் நிறுவனம், இணை நிறுவனர் டோர்சியின் ட்விட்டர் கணக்கினை ஹேக்கர்கள் உள்ளே நுழைந்து விட்டதை கண்டுபிடித்து, அடுத்த பதினைந்து நிமிடங்களுக்குள் இனவெறி மெஸேஜ்களை இணை நிறுவனர் பக்கத்திலிருந்து நீக்கியது.

ட்விட்டர் இணை இயக்குநர் டோர்சி கணக்கு ஹேக்கிங் செய்யப்பட்டது அமெரிக்கா முழவதும் பரப்பரபான செய்தியாக மீடியாவில் பிரேக் நியூசாக அலறியது. அமெரிக்காவின் வெள்ளை மாளிகை மற்றும் அமெரிக்காவின் உளவு பிரிவுகள் அலர்ட் செய்யப்பட்டு, ட்விட்டர் நிறுவன வலைதளத்தில் நடந்த நிகழ்வுகளை உடன் அறிந்து கொண்டனர். அமெரிக்காவின் அதிபர் ட்ரம்ப்பிடம் தகவல் சொல்லப்பட்டு, உடனடியாக அவர் ட்விட்டர் சமூக வலைதள நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

20190805081422296.jpg

ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு ட்விட்டர் பக்கத்தில் உள்நுழைந்து, பிரபலமான நபர்களான வால்கர் ஜேம்ஸ், யூடியூப் புகழ் டெஸ்மண்ட் அம்மோப் என்கிற எட்டிகா கணக்கினை ஹேக் செய்து தங்கள் பதிவினை நுழைத்து சில அல்லுசில்லுகள் சங்கபடுத்திவிட்டனர். எட்டிகா ட்வீட்டர் கணக்கினை ஹேக் செய்யப்பட்ட பின், அவர் சில மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டு விட்டார் என்ற தகவலை

ஹேக்கர்கள் பரப்பினர். டிஸ்கார்ட் என்கிற ஒரு அரட்டை சேனலை ஹேக்கர்கள் உடனே துவக்கி, ட்விட்டர் வலைதளத்தில் ஹேக் செய்யப்பட்ட பின் விவாதிக்கவும், ஹேக்கிங் பற்றி கேலி செய்வதற்காக ஒரு தனிவலைதளமும் அமைத்து செயல்படுத்தி வந்தனர். ட்விட்டர் டீம் அதனைக் கண்டுபிடித்து ஹேக்கர்களின் தனி வலைதளத்தினை முடக்கியது.

தற்போது ட்விட்டர் சமூக வலைதளம் ஹேக்கர்களால் எதுவும் செய்யமுடியாத பாதுகாப்பு வலைதளம் என்று உலகமே நம்பிக்கொண்டிருக்கும் வேளையில், ட்விட்டரின் இணை நிறுவனர் கணக்கை ஹேக்கர்கள் முடக்கியதுதான் அமெரிக்கா முழுவதும் தற்போதைய அதர்ச்சிப்பேச்சு!