வங்கிகள் இணைப்பு ஒன்றும் புதிய சமாச்சாரம் இல்லை. தற்போது ஒரே மூச்சில் பல வங்கிகள் இணைக்கப்பட்டுள்ளது என்பதால் ஒரு பரபரப்பு நிலவுகிறது.
பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் ஓரியனடல் பாங்க் ஆஃப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியா இணைக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே மிகப் பெரிய வங்கியாக பஞ்சாப் நேஷனல் பாங்க் விஸ்வரூபம் எடுக்கிறது.
கர்நாடகாவைச் சேர்ந்த கனரா பாங்க் மற்றும் சிண்டிகேட் வங்கியின் கூட்டணி அமைகிறது.
யூனியன் பாங்க், அலகாபாத் வங்கியையும் ஆந்திரா பாங்கையும் தன்னுடன் இணைத்துக் கொள்கிறது.
நமது இந்தியன் பேங்க் அலகாபாத் வங்கியை சேர்த்துக் கொள்கிறது.
இந்த இணைப்புகள் தேவையானது தான். ஒரு பெரிய வங்கியுடன் பலவீனமான சிறிய வங்கிகள் இணைவது, இணைப்புக்குப் பின் பெரிய வங்கிகளின் முதலீட்டு நிதி (Capital Fund) அதிகமாவதால் அவைகளின் கடன் கொடுக்கும் சக்தியும் அதிகமாகிறது.
தற்போது அயல்நாடுகளில் இந்திய வங்கிகளின் கிளைகள் மிகவும் குறைவு. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் எல்லாம் சேர்ந்து 159 கிளைகள்தான் அயல் நாடுகளில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இதில் 41 வங்கிகள் நஷ்டத்தில் இயங்குகின்றன. கடந்த ஆண்டு மட்டும் 35 அயல் நாட்டில் இயங்கும் வங்கி கிளைகள் மூடப்பட்டன. இந்த ஆண்டு இன்னும் 70 அயல் நாட்டு கிளைகளை மூடிவிடும் எண்ணம் இருப்பதாக தெரியவந்துள்ளது.
இணைக்குப்பின் வங்கிகளின் மூலதனம் அதிகரிப்பதால் அயல் நாட்டினருக்கும் நமது அயல் நாட்டு கிளைகள் மூலமாக வர்த்தக பரிமாற்றம் செய்ய ஒரு தன்னம்பிக்கை ஏற்படும். அயல் நாட்டு வணிகர்களைப் பொறுத்தவரை ஒரு வங்கியின் மூலதன அளவு, கடன் கொடுக்கும் திறன், தொழில்நுட்பம் ஆகியவையே அவர்களது தேர்வுக்கு முக்கியமான அளவுகோலாக செயல்படும்.
இணைப்புகளுக்குப் பிறகு இந்த வங்கிகளின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 12 கோடிக்கும் மேல், சுமார் 85,000 ஊழியர்களும், 9500-க்கும் மேல் கிளைகளைக் கொண்டதாகவும் இந்த நான்கு வங்கிகள் விஸ்வரூபமெடுக்கும். ஒரு வங்கியின் அளவைப் பொறுத்து, நிர்வாகத் திறமை கூடுவதும் குறைவதும் சகஜம்.
வங்கிகளின் இணைப்பினால் சில தீமைகளும் உண்டு. காலப்போக்கில் இப்போது இருக்கும் அளவிற்கு ஊழியர்கள் தேவைப்படமாட்டார்கள். இப்போது இல்லாவிட்டாலும் இன்னும் சில வருடங்களில் வாலண்டரி ரிட்டையர்மெண்ட் ஸ்கீம் (VRS) வர வாய்ப்புண்டு. வங்கி வர்த்தக பரிமாற்றங்களில், தொழில்நுட்பம் அதிக அளவு பயன்படுத்தப்படுவதால், எதிர் காலங்களில் வேலை வாய்ப்பு குறையும். தெருவுக்கு நாலு வங்கிக் கிளைகள் இருக்கும் நிலைமை மாறி, பல வங்கிக் கிளைகள் இணைக்கப்படலாம் அல்லது மூடப்படலாம்.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் எண்ணிக்கை 27-லிருந்து 12 ஆக குறைந்து விட்டது.
ஆனால் தாராளமயமாக்கல் கொள்கை கடைபிடிக்கும் நாடுகளில் இந்த மாற்றங்கள் காலத்தின் கட்டாயம். இந்த இணைப்பிற்கு பின் தன் கடமை முடிந்துவிட்டது என்று அரசாங்கம் தூங்கப் போகாமல், இந்த வங்கிகளின் செயல் திறனை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். வாராக் கடனால் (Non performing Assets) மீளாத் துயரில் இருக்கும் வங்கிகள் விழித்துக் கொள்ள வேண்டும். தனியார் வங்கிகளிடம் போட்டி போடக் கூடிய நிலைமை வரவேண்டும்.
2019 மத்திய பட்ஜெட்டில் நலிவுற்ற வங்கிகளின் மூலதனத்தை வலுப்படுத்துவதற்காக 70,000 கோடி ரூபாயை ஒதுக்குவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்த தொகையை வங்கிகள் சரியாக, திறமையாக ஆக்கபூர்வமான தொழில் வளர்ச்சி திட்டங்களுக்காக பயன்படுத்த வேண்டும். இந்த சந்தர்ப்பத்தையும் வங்கிகள் கோட்டை விட்டால் எதிர்காலத்தில் தனியார் வங்கிகளை மட்டுமே நம்பி நாம் வாழ வேண்டி இருக்கும்.
இந்தியாவின் முதல் வங்கி இணைப்பு எது என்று தெரியுமா?
வங்கிகளை இணைத்து ஒரு அறிக்கை விட்டாலும் விட்டார் நிர்மலா சீதாராமன்...
"ஐயகோ... வங்கிகளை இணைத்து பெரும் பாவத்தை செய்து விட்டாரே நிர்மலா சீதாராமன்.
வங்கியில் பணத்தை தான் காணலை என்றால் வங்கியையே காணோமே...!"
இப்படி எல்லாம் பல கிண்டல் சுண்டல் பதிவுகள்...
உலக தொலைக்காட்சியில் இது தான் முதல்முறையா மெர்ஜர்ரா என்று பார்த்தால்...
நஹி..நஹி..
இந்திய வங்கிகளின் துவக்கமே இப்படிப்பட்ட இணைப்புகளில்தான் தொடங்கி இருக்கு. SBI வங்கி தான் இந்தியாவின் பழமையான வங்கி. 1806-ல்.. பேங்க் ஆஃப் கல்கத்தா என்று துவக்கப்பட்டு...1809-ல் பேங்க் ஆஃப் பெங்கால்லாக செயல்பட்டிருக்கு...
வெள்ளைக்காரன் காலத்தில் இது போல இரண்டு வங்கிகள் துவக்கப்பட்டிருக்கு..
பேங்க் ஆப் பாம்பே..
பேங்க் ஆப் மதராஸ்.. (அட.. அந்த காலதத்தில் முதல் மூன்றில் நாம் இருந்திருக்கோம்).
அப்புறம் இந்த மூன்று வங்கிகளும், 1921ல் இணைக்கப்பட்டு... பேங்க் ஆப் இம்பீரியல் என்று ஆகி, பின்னர் விடுதலைக்கு பின் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா.
அப்பனே.. துவக்கமே மெர்ஜரில் தான்.. அப்போதெல்லாம் யாரேனும் பொருளாதார மேதைகள் பதிவுகள் போட்டார்களா என்று தெரியவில்லை.
சரி ...
இதுக்குப் பிறகு எந்த மெர்ஜரும் நடக்கவில்லையா என்றால் 1990 க்கு முன்னாலேயே கீழ் வரும் மெர்ஜர்கள்!
Allahabad Bank - United Industrial Bank Limited
Bank of Baroda - Traders Bank Ltd
Punjab National Bank - Hindustan Commercial Bank Ltd
State Bank of India - Bank of Cochin Ltd
Canara Bank - Lakshmi Commercial Bank Ltd
Union Bank of India - Miraj State Bank Ltd
State Bank of India - Bank of Bihar Ltd
State Bank of India - National Bank of Lahore Ltd
1990 to 2000-த்தில்
Bank of Baroda - Bareilly Corporation Bank Ltd
Union Bank of India - Sikkim Bank Ltd.
Oriental Bank of Commerce - Bari Doab Bank Ltd.
Oriental Bank of Commerce - Punjab Co-operative Bank Ltd.
State Bank of India - Kashinath State Bank Ltd
Bank of India - Bank of Karad Ltd
Punjab National Bank - New Bank of India
Bank Of India - Parur Central Bank Ltd
Central Bank Of India - Purbanchal Bank Ltd.
Indian Bank - Bank of Thanjavur Ltd.
Indian Overseas Bank - Bank of Tamilnadu Ltd
2000 - 2009 வரையில்
HDFC Bank - Centurion Bank of Punjab
ICICI Bank Ltd - Sangli Bank
Indian Overseas Bank - Bharat Overseas Bank
Centurion Bank of Punjab - Lord Krishna Bank
Federal Bank - Ganesh Bank of Kurandwad
Nainital Bank - Bank of Baroda
IDBI Ltd - United Western Bank
IDBI Ltd - IDBI Bank
Bank of Punjab (POB) - Centurion Bank
Bank of Baroda - South Gujarat Local Area Bank
Oriental Bank of Commerce - Global Trust Bank
Punjab National Bank - Nedungadi Bank Ltd.
ICICI Bank - ICICI Ltd.
Bank of Baroda - Benares State Bank Ltd
ICICI Bank Ltd - Bank of Madura Ltd
HDFC Bank Ltd. - Times Bank Ltd.
இவற்றில் பல 2004-க்கு பிறகு நடந்த இணைப்புகள்...
சரிதான். இது எல்லாம் அந்த காலம். சமீபத்திய வரலாறு சொல்லுங்க...
2010 டு 2017
State Bank of India - Bharatiya Mahila Bank (BMB),
State Bank of India - State Bank of Travancore (SBT),
State Bank of India - State Bank of Bikaner and Jaipur (SBBJ),
State Bank of India - State Bank of Hyderabad (SBH),
State Bank of India - State Bank of Mysore (SBM),
State Bank of India - State Bank of Patiala (SBP),
Kotak Mahindra Bank - ING Vyasa Bank,
ICICI Bank - Bank of Rajasthan Ltd.
என்னது 2017 வரைக்குமா வங்கி இணைப்புகள் நடந்து இருக்கு...?!
ஏம்பா போராளிகளே... இதை எல்லாம் ஒரு வார்த்தை கூட பேசாமல் சொல்லாமல்.. ஏதோ நிம்மி மாமி வந்துதான் இப்படி செஞ்சுட்டாங்கன்னு பேசுறது எல்லாம் நியாயமாரே?!
Leave a comment
Upload