
நீட், இருமொழிக் கொள்கையில் அரசுக்கு ஆதரவு... - பேரவையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உறுதி.
ஒரு வேளை ரெய்டு பயமோ என்னவோ.
முக ஸ்டாலினுக்கு பிரதமராகும் தகுதி உள்ளது... - அமைச்சர் கே என் நேரு
லைன் கிளியர் ஆகுதுன்னு உதயநிதி ஸ்டாலின் குஷி ஆகிடுவார்.
தேமுதிக என்னும் வேர் என்றும் அழியாது... - விஜய பிரபாகரன்
ஆமா... ஆனா. வேர் மட்டும் தான் இருக்கு.
அனைத்து வங்கிகளும் லாபம் ஈட்ட தொடங்கியுள்ளன... - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
ஆமாம்... ஆமாம்... சர்வீஸ் சார்ஜ் நிறைய வருதே.
மேற்கு வங்க வன்முறை சிபிஐ 9 வழக்குகள் பதிவு
மம்தா அரசு போலீஸ் சும்மா தான் இருக்கு போல இருக்கு.
பள்ளிக்கல்வித்துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வோம்... - கல்வி அமைச்சர்
அதான் ஆல் பாஸ்ன்னு பழக்கியாச்சு... அதற்கப்புறம், அடுத்த கட்டம் என்ன...?
குத்துச்சண்டையில் இந்தியா ஆதிக்கம்...
ஆமாம் நம்ப சார்பட்டா பரம்பரை ஆச்சே.
புதிய திட்டத்திற்கு 500 கோடி ஒதுக்கீடு சட்டசபையில் அமைச்சர் அறிவிப்பு...
இந்த வருஷம் ஒரு குடும்பத்துக்கு எப்படியும் கடன் 5 லட்சம் வந்திடும் போல இருக்கு.
பாரதிய ஜனதா மாவட்ட தலைவர்கள் சிறப்பாக செயல்படாவிட்டால் கடும் நடவடிக்கை... - மாநிலத் தலைவர் அண்ணாமலை
ஆமாம். எல்லாத்தையும் ஆடியோ, வீடியோ ஆதாரம் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

Leave a comment
Upload