தொடர்கள்
ஆன்மீகம்
ஆன்மீக ஆசான் - 64 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

20211003174602865.png

ஸ்ரீ மகா பெரியவா இந்த உலகில் சரீரத்தோடு உலா வந்த போது, அவரோடு பல்வேறு காலகட்டங்களில் பயணித்த பலரை பற்றியும், பல இடங்களை பற்றியும் பார்த்து வருகிறோம். இந்த வாரம்....

ஸ்ரீமதி மங்களம் பாடி - மும்பை

ஸ்ரீ மஹாபெரியவாளின் பக்தர்களின் அனுபவத்தை கேட்பதே நமக்கெல்லாம் கிடைக்கும் பெரும் பாக்கியம். ஸ்ரீமதி மங்களம் பாடி அவர்களின் இந்த நீண்ட அனுபவ பதிவு நமக்கு பல அனுகிரக அனுபவங்களை தரும்.

ஸ்ரீமதி மங்களம் பாட்டியின் மகா பெரியவா அனுபவத்தை பகிர்வதற்கு முன், அவர் தன் பால்ய கால வாழ்க்கையை விவரிக்கும் போது, நாம் கவணிக்க வேண்டிய ஒரு முக்கிய விஷயம் உண்டு. அந்தக் காலத்தில் தங்கள் பரம்பரையை எப்படி எல்லாம் சந்தோஷமாக நினைவு கூருகிறார் என்று நமக்கு விளங்கும். தன் கொள்ளு தாத்தா, தாத்தா அவர்களை பற்றியெல்லாம் ஆர்வமாக விவரிக்கும் விதம் போல் நாம் நம் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என்பதே நாம் இதிலிருந்து புரிந்துகொள்ள வேண்டிய விஷயம்.

மும்பையில் ஸ்ரீமதி மங்களம் பாட்டியின் அனுபவங்கள் நமக்கு பல ஆச்சரியங்களை அளிக்கிறது. யாருக்கும் கிடைக்காத மகா பாக்கியம் இவருக்கு கிடைத்திருக்கிறது. ஸ்ரீ மஹா பெரியவா தன் பக்தர்களை அழைத்து அனுக்கிரஹம் செய்து, தன் பக்தர்களை மகிழ்வித்து பார்க்கும் விதமே தனி.

மிக நீண்ட பதிவு தான், ஆனால் இந்த அனுபவம் உங்களுக்கு பல அனுகிரஹத்தை கொடுக்கும்.


ஸ்ரீ சந்திரசேகர ஸ்ரீ சந்திரசேகர ஸ்ரீ சந்திரசேகர பாஹிமாம்
ஸ்ரீ சந்திரசேகர ஸ்ரீ சந்திரசேகர ஸ்ரீ சந்திரசேகர ரக்ஷமாம்