தொடர்கள்
தொடர்கள்
பெண் மனதை பேணிக்காப்போம்... - 35 - சுபஸ்ரீ

2021930202410409.jpg

சகோதரிகளே,

இந்த வாரம் மூளை பற்றி தெரிந்து கொள்வோம்.
அற்புதமான மூளை: அதிர்ச்சி மற்றும் காயம் ஆறுதலின் சாத்தியம்

ஒரு குழந்தையின் மூளையானது உடனே மலரத் தயாராயிருக்கும் ஒரு மலரைப் போன்றது. வாழ்வின் துவக்க கணங்களிலிருந்து மூளையானது புது அனுபவங்களை ஏற்றுக்கொள்கிறது. அதன் சுற்றுப்புற சூழ்நிலையிலிருந்து தன்னை உருவாக்கி கொள்கிறது. இந்த முதல் அனுபவத்தை, குழந்தையால் தனது ஞாபகங்களில் அதனை பதித்து வைக்க முடியாது, ஆனால்... வளர்ந்து கொண்டிருக்கும் மூளையானது அதனை மறப்பதில்லை.

முதலில் பதிவாகும் எண்ணம், வாழ்நாள் முழுவதும் நிலைத்திருக்கும். ஒரு குழந்தையின் மூளை உங்களிடமிருந்து பெறும் நேர்மறை , ஆதரவான அனுபவம் கொண்டு மலரத் துவங்கும். எதிர்மறை அனுபவங்கள் மூளையின் துவக்கக் கட்ட வளர்ச்சியில், எதிர்மாறான அனுபவங்களையே பதிவு செய்யும். புறக்கணிக்கணிக்கப்பட்ட மலரானது வாடிப்போவதுபோல.

இளமைப்பருவத்தில் ஏற்படும் அதிர்ச்சியானது, வளர்ச்சிபெறும் மூளையில் அழியாத பதிவினை ஏற்படுத்திவிடும். குழந்தையானது எவ்வளவு இளமையாய் இருக்கிறதோ, அந்த அளவிற்கு அந்த மூளையானது அதிர்ச்சியின் பாதிப்புகளை ஈர்க்கும்.

சிறுவயது அதிர்ச்சி என்பது ஒரு குழந்தைக்கோ, ஒரு சிறுவனுக்கோ எந்த ஒரு எதிர்மறை அனுபவங்களால் ஏற்படும் மனச்சோர்வு. குடும்ப வன்முறை என்பது குழந்தைகளுக்கு மிகவும் அதிக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தக்கூடும். ஏனென்றால்... அதில் அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர் தாக்கப்படுகிறார் அல்லது தாக்குகிறார். அவர்கள் வசிக்கும் வீட்டில் பெற்றோர்கள் பயமுறுத்தப்படுவது அல்லது தாக்கப்படுவதென்பது பாலியல் வன்கொடுமை அல்லது துன்புறுத்தலுக்கு சமமானது ஆகும். குடும்ப வன்முறை சூழலில் வளரும் குழந்தைகள், ஒரு வித பயம் மற்றும் குழப்பத்திலேயே வளர்வார்கள். அவர்கள் வாழ்க்கையில், அடுத்து என்ன நடக்கப்போகிறது என்றே யூகிக்க முடியாத பயணம் போல ஆகிவிடும். இது அக்குழந்தையின் மூளை வளர வேண்டிய நேரத்தில் பிரச்சனைகளை உருவாக்கிடும்.

நீங்கள் அவர்களுக்கு உதவ விரும்பினால்... அதிர்ச்சியில் இருக்கும் குழந்தைகளை மூளை வளர்ச்சி பற்றிய ஆறு அடிப்படைக் கருத்துக்களை புரிந்து கொண்டு செயல்படுங்கள்

1 . வாழ்க்கையா அல்லது வெற்றியா?

மூளை வளர்ச்சியின் கட்டமைப்பானது, கீழிருந்து மேலாகவே நடைபெறும். குழந்தைகள் பாதுகாப்பாகவும், அக்கறையோடு கவனிக்கப்படுவதாய் உணரும்போது, அவர்கள் மூளையின் மேல்பகுதியில் அதிக நேரத்தை செலவழிக்கிறார்கள். குறிப்பாக உங்களுடன் பழக துவங்கும்போது, பேசிக் கற்றுக்கொள்ளும்போது, மற்றவருடன் பழகத் துவங்கும்போது.

குழந்தைகள் பயமுறுத்தப்படும்போது, பாதுகாப்பில்லாமல் உணரும்போது அவர்கள் மூளையின் கீழ்ப்பாகத்தில் அதிக நேரம் செலவழிக்கிறார்கள் - குறிப்பாக உயிர் வாழ்தல் குறித்து கவனம் செலுத்துகிறார்கள். இது மூளையின் கட்டமைப்பை மாற்றிவிடும், அதாவது....
# மூளையின் மேல்பகுதி குறைவாக வளர்ச்சியடைவது.
# மூளையின் அளவு சிறியதாகிப்போவது
# குறைவான மூளை சங்கிலிகள்

மூளையின் கீழ்பகுதியானது, வளர்ச்சியடைய துவங்கும். அதுவே.... இப்பகுதி அதிர்ச்சிக்கும், அதிக உணர்ச்சிவசப்படும் தன்மையும் கொண்டது. வளர்ந்து வரும் மூளையானது, மனஅழுத்தத்திற்கு அதிக அளவு உணர்ச்சி வசப்படத் துவங்கிவிடும். இளவயதில் அதிர்ச்சிக்குள்ளாகும் குழந்தைகள், தங்கள் தினசரி நடவடிக்கைகளில் சிறிதளவு மற்றம் இருந்தால் கூட, அதிக அளவில் பாதிப்படைவார்கள். அவர்கள் தங்களை அமைதிப்படுத்திக் கொள்வதோ, ஆறுதல்படுத்திக் கொள்வதோ மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும்.

கீழ்க்காணும் நடத்தைக் கோளாறுகள் இளவயது அதிர்ச்சி அனுபவம் பெற்ற சிறுவர்களிடம் நிச்சயமாய் இருக்கும்...

# கூர்ந்து கவனிப்பதில், கவனக் குவிப்பில் சிரமம் இருக்கும்
# கவலை, படபடப்பு இருந்துகொண்டே இருக்கும்
# அடுத்தவரை வம்புக்கிழுப்பது, அதிரடியான செயல்கள்.
அதிர்ச்சி மூளையின் கற்றலை தடை செய்கிறது.

குழந்தைகள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் உணரும்போது அவர்கள் தங்கள் திறன் முழுவதையும் கற்றலில் செலுத்துகிறார்கள். அதிர்ச்சியினால் பாதிக்கப்பட்டிக்கும் குழந்தைகள், எப்போதும் ஒரு நெருக்கசடியான சூழலில் தான் இருப்பார்கள். அவர்கள் சரியாக இருக்கிறோம் என்று நினைப்பதற்கும், நடப்பதற்கும் தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதிர்ச்சியினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அதிகமாக பேச்சுத் திறன் மற்றும் எப்படி கற்க வேண்டும் என்பதிலும் அதிக தடையைப் பெறுவார்கள்.

மேலும் விவரங்கள் அறிந்து கொள்ள www.thunai.org இணைய தளத்தை பாருங்கள்.

பேணுவோம்...