தொடர்கள்
சிறு தொடர்கதை
மறு வாசனை... - 13 - அய்யாசாமி

20211003215646901.jpeg

மாலைநேரம் கோபிநாத் மற்றும் விஷால் இருவரும் நடந்தவைகளை கோர்வைப்படுத்தி பேசிக்கொண்டு இருந்தனர்.

நீங்கள் மற்ற சமயங்களில் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள். அந்த கோயில் சன்னதி, டாக்டர் கைலாசம், இந்த சதாசிவம் இவைகளுக்குள் ஒரு புதிர் இருக்கிறது எனத் தெரிகிறது. ஆனால், மருத்துவத்திற்கு இதில் இடமில்லை.

இவைகளுக்கு ஒன்றோடு ஒன்று தொடர்பு இருக்கிறதா? இல்லை தனித்தனி நிகழ்வுகளா? இது கற்பனையா? இல்லை கனவா? அதுதான் விளங்க வேண்டும் என்றார் கோபிநாத்.

எஸ்! நான் நார்மலாகவே இருக்கிறேன். அந்த நிகழ்வுகளைத்தான் ஆராயவேண்டும் என்று இருவரும் பேசியபோது...

உதவியாளர் உள்ளே வந்து... காரைக்குடி தொழிலதிபர் கருப்பையாவும், முன்னாள் எம்எல்ஏ என்கிற அசோகனும் தங்களை பார்க்க வந்துள்ளதாக கூறினார்.

வாட்..?

ஓய் நவ்? என்றார்.

மரியாதை நிமித்தமாக பார்க்க வந்ததாக கூறினார்கள்

இது என் பர்சனல் விசிட். யார் இவர்களுக்கு தகவல் சொன்னார்கள்?
ஓகே. லெட் தெம் கம் என்றார்.

இருவரும் உள்ளே வந்தமர்ந்து இருந்தனர். மருத்துவரும், உதவியாளரும் தொலைக்காட்சியில் செய்திகளை பார்த்துக் கொண்டிருந்தனர்.

ரெஸ்ட் ரூமிலிருந்து வந்த ஆட்சியர், இருவரையும் பார்த்து வணக்கம் தெரிவித்து அமரச் சொன்னார்.

சார்.. புதுசா நம்ம ஊருக்கு வந்திருப்பதாக தகவல் வந்ததும்... பாருங்க, நான் சிவகங்கைக்கே வரணும் என இருந்தேன். அதற்குள் சார், நீங்களே இங்க வந்துட்டிங்களா, அதான் மரியாதை நிமித்தமாக பார்த்து விடலாம் என கிளம்பினேன். அப்போ பாருங்க நம்ம நண்பரு இவரு.. மாவட்டத்திலே பல தொழில் செய்யும் பெரும் புள்ளி. நானும் ஐயாவை பார்க்கணும், சேர்ந்தே போவோம் என்றாரா... சரி, வாங்க என்று கிளம்பி வந்து விட்டோம் என பேசிக்கொண்டே போக... தலையைப் பிடித்தப்படி விஷால் அமர்ந்திருந்தார்.

மருத்துவர், விஷாலையே கவனித்து கொண்டு அமர்ந்திருந்தார். ஐயா, மேலுக்கு முடியலையா? என மீண்டும் பேசலானார்.

ஐயா, சொல்லிருந்தீங்கன்னா நம்ம பண்ணை வீட்டிலேயே தங்கியிருக்கலாமே. ஏன் இங்கே சிரமப்பட்டுகிட்டு என்றதும் தலைப்பகுதியில் அழுத்த தொடங்கியது விஷாலுக்கு.

கோபிநாத் ஆச்சரியமாக விஷாலைப் பார்க்க...

நீங்க கருப்பையாதானே? என்றார்...

இவரை ஏற்கனவே தெரியுமா? பின்னே கலெக்டர்னா சும்மாவா? விஷயங்களை பிஃங்கர் டிப்லே வச்சு இருப்பாங்க இல்லே! என
ஆச்சரியமடைந்த அசோகன்.

ஆமாங்க, ஹோட்டல், மால், பைனான்ஸ் கட்டிட கான்டிராக்ட் என பல தொழிலுங்க என அறிமுகப்படுத்தினார் அவரை.

ஆனால், செட்டியார்கிட்டே வாங்கின கடனை இன்னும் திருப்பலை இல்லே... என்று விஷால் சொன்னதும்...

எந்தச் செட்டியார்? யார் சார்? எனத் திருப்பிக்கேட்டார்.

(தொடரும்)