தொடர்கள்
கற்பனை
கருத்து கதிர்வேலன்

20211026133535931.jpeg

ஒரு லட்சம்கோடி டாலர் பொருளாதார இலக்கு... - முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை

அதைவிடுங்க அந்த 1000 ரூபா எப்ப அதைச் சொல்லுங்க முதல்ல


வாரிசு அரசியல் ஜனநாயகத்துக்கு எதிரானது... - பாரதிய ஜனதா தேசியத் தலைவர் நட்டா

ஆமா தமிழ்நாட்டுக்கு வந்தாஇதைத்தான் பேசணும் இதுதானே நம்ம கட்சி வழக்கம்


பழைய வாகனத்தை விற்று புதிய வாகனம் வாங்கினால் வரிச்சலுகை... - மத்திய அரசு அறிவிப்பு

பெட்ரோலுக்கு வரிச்சலுகை எப்போ அதை முதலில் சொல்லுங்கள்


மன்மோகன் சிங் ஆட்சியில் மும்பை தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து இருக்க வேண்டும்... - காங்கிரஸ் மூத்த தலைவர் மணிஷ் திவாரி குற்றச்சாட்டு

வேற கட்சியில சேர துண்டு போட்டு ரிசர்வ் பண்ணிட்டாரோ என்னவோ...


அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் பாரதிய ஜனதாவில் சேர்ந்தது ஏன்

ரொம்ப சிம்பிள் இப்ப அவங்க தானே ஆளுங்கட்சி


ஆசிய பணக்காரர் பட்டியலில் அதானி முதலிடம்

இதுவும் மோடியின் சாதனை தான்


பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைப்பது சாத்தியமில்லை... - தமிழக நிதி அமைச்சர்

அதாவது தேர்தல் அறிக்கை எல்லாம் நம்பாதீங்க என்று சொல்கிறார்


பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்கள் வீரம் மானம் எங்கே போய்த் தொலைந்தது... - ராமதாஸ்

எல்லாம் நீங்க கூட்டணி வைத்த இடத்தில் தான் காணாம போச்சு ஐயா


அறங்காவலர் பதவிக்கு விண்ணப்பிப்பவரிடம் சொத்து விவரம் கேட்க கோரிய மனு தள்ளுபடி

பதவிக்கு வந்த பிறகுதானே சொத்து சேர்க்க முடியும் இப்ப கேட்டா எப்படி