காங்கிரஸ் திமுக இடையே முரண்பாடுகள் ஏராளமாக இருக்கின்றன கே.எஸ்.அழகிரி.
கூட்டணி தர்மம் ஒரு தரம் கூட்டணி தர்மம் இரண்டு தரம் கூட்டணி தர்மம் மூன்று தரம் அவ்வளவு தான் ஓவர்.
தினமும் இரண்டு முதல் மூன்று கிலோ வசவுகளை நான் உட்கொள்கிறேன் பிரதமர் மோடி.
ராத்திரி ஒரு கிலோ மீம்ஸ் அத விட்டுட்டீங்களே பிரதமர்.
தனிநபர் வருமானம் 33.4 சதவீதம் அதிகரிப்பு மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தகவல்
விலைவாசி எத்தனை சதவீதம் உயர்வு அதையும் சொல்லலாம் இல்ல.
ஜனநாயக சக்திகள் ஒன்று சேர்ந்து பாஜகவை பின்னுக்கு தள்ள வேண்டும் சீதாராம் யெச்சூரி
இப்படிப் பேசிப் பேசியே பாஜகவை நீங்க முன்னுக்கு கொண்டு வந்துட்டீங்க.
மழை வெள்ளத்தை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன முதல்வர் ஸ்டாலின்.
அரசியல் செய்யாம அவியலா செய்வாங்க எதிர்க்கட்சியாக இருக்கும் போது நீங்க சொன்னது தான் தலைவரே.
அதிமுக இப்போ செயல்படாத ஒரு கட்சியாக பார்க்கிறேன் டிடிவி தினகரன்.
ஒருவேளை அமித்ஷா ஜுரமோ என்னவோ யார் கண்டா
அரசின் செயல்பாட்டில் தலையிடவில்லை கேரள ஆளுநர் ஆரிப் முகமது
காம்ரேட் வேற ஏதோ பிளான் பண்ற மாதிரி தெரியுது உஷாரா இருங்க.
திருப்பதி போல் திருவண்ணாமலை மாற்றுவோம் அமைச்சர் சேகர் பாபு
ஆனா உண்டி வசூல் அந்த அளவுக்கு தேறாது அமைச்சரே.
மக்களவைத் தேர்தலில் தேசியத்தின் பக்கம் தமிழகம் நிற்கும் அண்ணாமலை
தெளிவா பேசுங்க மிஸ்டர் ஐபிஎஸ் தேசியம்னு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சொல்றாரு என்கிறார் அழகிரி
மத்திய அரசு விருது முதல்வரிடம் காட்டி வாழ்த்து பெற்றார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
திராவிட மாடலுக்கு மத்திய அரசு விருதா பேஷ் பேஷ்.
சத்தியமூர்த்தி பவனின் ரகளை மண்டை உடைப்பு
அப்பாடா இப்பதான் சத்தியமூர்த்தி பவன் நார்மல் நடைமுறைக்கு வந்துடுச்சு.
ஒரு பிசாசு மாதிரி பிஜேபி உருவெடுத்து வருகிறது அமைச்சர் துரைமுருகன்.
ரொம்ப பயந்துட்டாரு போல இருக்கு மந்திரிச்சி விடனும். கையில் காவி கலர் கயிறு கட்டிரலாமா தலைவரே ?
Leave a comment
Upload