என்னை சுற்றி அமர்ந்துள்ள உறவுக் கூட்டத்தை ஒரு முறை பார்த்தேன். எல்லாரும் என் மேல் உண்மையான அக்கறை உள்ளவர்கள் தாம் எனத் தோன்றியது. ஆனால் என்னைப் புரிந்து கொள்ள மறுக்கிறார்களே! என்று எண்ணும் போதே சுய பச்சாதாபமும் ஆற்றாமையால் கோபமும் மேலிட்டது.
‘ துணிவு இல்லையாம் எனக்கு, இல்லாமலா காரியத்துல இறங்கியிருப்பேன்னு தோண வேணாம்?, ‘உறவுகளை இப்படித்தான் நம்பி ஏமாறுகிறோம்’, என்று எண்ணத் தோன்றியது. இந்த இடத்தில் என்னைப் பற்றியும் சொல்ல வேண்டும், சிறிய வயதிலிருந்தே எனக்கு ஒரு வழக்கம், தொட்டதிற்கெல்லாம் அழுது விடுவேன்.’ என்ன செய்வது? மனதின் இயலாமை கண்ணீராக மாறி முகம் வீங்கி விடும், அப்புறமென்ன அழுமூஞ்சி, உம்மணா மூஞ்சின்னு பேர் வாங்கியாச்சு.. ‘ என் கண்ணீருக்கு மதிப்பு இல்லேன்னு தெரி்ஞ்சும் அழுவது வழக்கமாகி விட்டது.
சரி, மேற்சொன்ன உறவுகளெல்லாம் யாரெனக் கேட்பது பரிகிறது. அதி முக்கியமான உறவுகள் தாம் , அத்தை, மாமா, சித்தப்பா மற்றும் அவர்களின் என் தலைமுறையொத்த பிள்ளைகளும். என் விஷயத்தில் எல்லாம் வாழைப்பழம் மாதிரி ‘ வழவழா கொழகொழா தான். இருந்தாலும் ஒரு முயற்சி தானே!
‘ உம் , இப்போ என்ன தலை போற மாதிரி ஆச்சு?, இந்த புலம்பலா இருக்கேன்னு நீ்ங்க தலைய பிச்சுக்கறது எனக்கு தெரியறது, விஷயத்துக்கு வரேன், எல்லார் வீட்லயும் நடக்கிறது தான், ( அப்படி ஒண்ணு நடக்கிறதே இல்லன்னு என் அம்மா சத்தியம் பணறது வேற விஷயம்) அதுவும் தமிழ் சீரியல்களைக் கண் கொட்டாம, பார்த்துட்டும் இது ஒரு அதிசயம்னு சொல்றாங்கன்னா பாருங்க! அம்மா மனம் ஒன்றி அவற்றை பார்ப்ப்பதை தினமும் பார்க்கிறேனே!, ஒர்க் ப்ரம் ஹோமில் அறையில் அமர்ந்து வேலை செய்யும் போது ஹாலில் டிவி அலறும் சத்தம் நம் காதை துளைக்கும் பாருங்கள்! ... ‘அவன் கல்யாணத்தை நிறுத்து’ ‘இவன் சாப்பாட்டில விஷம் வை’ , ‘இவள வீட்ட விட்டு துரத்திட்டு தான் மத்த வேல’ ன்னு, மகா பாரத பாத்திரங்களாக மாறி அலறும் சத்தம் , அறைக் கதவில் வந்து மோதும்.டிஆர்பி க்கு சேனல்கள் அடித்துக் கொள்வதால் சீரியலிலும் எல்லோரும் அடித்துக் கொள்கிறார்கள் போலும்.
சரி, உங்கள் பொறுமையை சோதித்தது போதும், சொல்லி விடுகிறேன், ஒன்றுமில்லை, ( முடிவில் இது ஒன்றுமில்லையா என்று கேட்கப் போகிறீர்கள் என்று தெரிகிறது, அது என்னைப் பொருத்தவரை ஒன்றுமில்லை தான். )கொஞ்ச காலமாகவே நானும் என்னுடன் பணி புரியும் ராமும் காதலித்து வருகிறோம். இப்போது சொல்லுங்கள், நான் தைரியசாலி தானே, அதில் என்ன சிக்கல் என்றால், வழக்கம் போல குடும்பங்களில் வரும் சிக்கல் தான். அவன் வேற சாதி , அதனாலென்ன? என்று தானே கேடகிறீர்கள்? அதுவும் இந்த 2025 ல், அது தான் இல்லை, விஷயத்தை ஆரம்பித்த உடனே அம்மா ஓவென அலறி ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விட்டாள். அப்பா அவர் பாணியில் ‘ என்னம்மா இதெல்லாம்? ( அவர் சற்றே அமைதியானவர், அது மட்டுமல்ல, காலத்தை ஒட்டி சிந்திக்கும் திறனும் உண்டு.) என்று கடுமையான குரலில் தன் மறுப்பைத் தெரிவித்தார்.
நானும் கடந்த ஆறு மாத கலமாக எனது தரப்பு நியாயங்களை முன் வைத்து போராடி போராடி ( சாப்பிடாமல் சில நாள், கண்ணீருடன் பல நாள், பல ஒத்துழையாமை செயல்கள் )தோற்கும் நிலையில், மேற்சொன்ன உறவுகளை அணுகினேன். எனது வேண்டுகோள் அவர்களிடம் ஒன்று தான், என் அம்மா , அப்பாவிடம் சம்மதம் வாங்க வேண்டும், என்பது மட்டுமே. ஆரம்பித்தார்கள், அவரவர் பாணியில், ‘ இப்போது இதெல்லாம் சகஜம் தானே?, ‘ ‘ குழந்தைகள் மகிழ்ச்சி தானே நமக்கு முக்கியம்’ ‘ நாம் பார்த்து பண்ணும் திருமணத்தில் ரிஸ்க் இருக்கு’ ‘ ‘ வரதட்சணை தொல்லை இருக்காது’ ,’ ஒரே பெண் என்பதால் உங்களை கடைசி வரை அவளால் பார்த்துக் கொள்ள முடியும்’ , யோசியுங்கள்! என அனைத்தும் இயன்ற வரையில் சொல்லிப் பார்த்தனர். நேரம் கரைந்த தேயன்றி என் பெற்றோர் மனம் கரையவில்லை. வந்தவர்களும் காபியைக் குடித்து விட்டு ‘ எவ்வளவோ சொல்லிப் பாத்துட்டோம்’, கேக்கலியே’ என கையைப் பிசைந்தனர்.
இது ஒரு ‘ சிட்டிங்கில்’ முடியாதென தோன்றியது. இரண்டு,மூன்று ‘சிட்டிங்குகள்’ தொடர்ந்தன. காபி குடிப்பதும், கையைப் பிசைவதுமாய் அவர்கள் போக்கு இருந்தது. இன்னொரு பக்கம், ஓரிருவர் என்னைத் தொலை பேசியில் அழைத்து காட்டமாக ‘ தந்தையும் தாயும் முன்னெறி தெய்வம்’ என்ற விதத்தில் பேச எனக்கு தலை சுற்றியது. அவர்களின் விக்ரமாதித்ய முயற்சிகள் தோற்றுப் போன பின் என் மேல் பாய்ந்த வார்த்தைகள் இவை,
‘ துணிவு இல்லேனா இறங்க கூடாது’
‘ பெத்தவங்க சம்மதம் கிடைக்கும்னு எப்படி எதிர்பார்க்கலாம்?’
‘ முடிவெடுத்தா எத்தனையோ வழி இருக்கு’ ( என்ன செய்யச் சொன்னா என்ன செய்றீங்க? , )
‘ உனக்கு ரைட்ஸ் இருக்கு, அது படி நீ நினைச்சா? ( இது எனக்குத் தெரியாதா?)
‘ அவனும் உன்னப் போலத்தானா? ‘ (அதாவது துணிவில்லையாம்.)
எனக்கு மெல்லப் புரிந்தது. சண்டை சச்சரவு அறியாமல் அப்பா அம்மாவின் அரவணைப்பில் வளர்ந்த என்னைப் போன்ற ‘ டூ கே கிட்ஸ்’ க்கு அவர்கள் தான் எல்லாம். மற்றவை எல்லாம்( காதல் உள்பட) இதொன்றும் இயலாமையில்லை எனவும் கடந்து போவது எளிதெனவும் தோன்றியது. மிகைப்படுத்ததப்பட்ட ஒன்றாக இருந்தவரை அதை மதிப்பதாக எண்ணி மனிதர்களை அவமதிக்கும் செயல் என்றும் அமைதியை தரப் போவதில்லை என்று தோன்றிய நிமிடத்தில் எனக்கு வழக்கம் போல் வரும் கண்ணீர் வரவில்லை.
நான் தொலை பேசியில் ராமை அழைத்துச் சொன்னதும், ‘ எதிர்பார்த்தது தானே!’ என்று இயல்பாக பதில் அளித்தான்.
‘ இதென்ன இந்த காலத்தில இந்தக் குழந்தைங்க எதையும் சீரியஸா எடுத்துக்கறதில்ல, இவங்களுக்கு எல்லாம் விளையாட்டு தான்’ என்று ஓன்றிரண்டு சீனியர்கள் ( பாவம்)விமர்சித்தது செவியில் விழுந்தது.
‘ சரி, அப்ப கல்யாணம் என்ன ஆச்சுன்னு தானே உங்க அடுத்த கேள்வி?
‘ அடப்போங்கடா நீங்களும் உங்க கல்யாணமும்’
.
‘
‘
‘
‘
‘
Leave a comment
Upload