தமிழக வெற்றி கழக இரண்டாவது மாநாடு மதுரையில் நடந்தது.
மாநாடு நடந்த இடம் மொத்தம் 350 ஏக்கர்.
1.75 ஆயிரம் பேர் அமர வசதியாக நாற்காலிகள் போடப்பட்டது.
கூட்டத்திற்கு வந்திருந்தாவர்கள் முன்று லட்சம் பேர் இருக்கும்.
இதில் பெரும்பாலோர் இளைஞர்கள்.
இந்தமாநாட்டின் முழுநிகழ்ச்சியும் நேரலையாக ஓளிப்பரப்பபட்டது.
இந்தமாநாட்டுக்கான செலவுமுழுவதும் செய்தது ஆதவ் அர்ஜுனாதான் என்கிறார்கள்.
மொத்தம் ஐந்து கேரவன்கள் பயன்படுத்தபட்டன.
அதில் ஓன்று விஜய் இன்னொன்னு எஸ்ஏசந்திரசேகர், ஷோபா பயன்படுத்தினார்கள்
மாநாடு கொடிகம்பம் கிழே விழுந்துதில் விஜய் கொஞ்சம் அப்செட்.
திருஷ்டி கழிந்ததாக நினைச்சுக்கோ என்று ஷோபா சந்திர சேகர் ஆறுதல் சொன்னார்.
[இந்த மாநாட்டிலும் வழக்கப்படி திமுகவையும் பாரதிய ஜனதாவையும் சாடி பேசினார் விஜய் .
போட்டியே எங்களுக்கும் திமுகவுக்கும் தான் என்ற குரலில் உறுதி தெரிந்தது.
முதல்வர் ஸ்டாலினை அங்கிள் என்று வர்ணித்தார் விஜய்.
"பொருந்த கூட்டணியாக பாஜக கூட்டணி இருக்கிறது .
இதனால் ஆட்சியில் இருக்கிற விளம்பர திமுகபாஜகவுடன் உறவு வைத்துக் வெளியே எதிர்ப்பது போல் நடிக்கிறது"என்றார் விஜய் .
ஏற்கனவே பேசியது தான் புதிதாக ஒன்றுமில்லை.
அதிமுக பெயரை குறிப்பிடாமல் எம்ஜிஆர்தொடங்கிய கட்சி என்று குறிப்பிட்டு பேசினார் .
திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார்.
"பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து விட்டால் போதுமா அங்கிள்?
படிக்கிறதுக்கு வேலைக்கு போகும் இடத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கா? ?
சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கா சொல்லுங்க மை டியர் அங்கிள்? "என்று நாக்கலாக கேட்டார் விஜய்
பெண்களுக்கு மட்டுமா பொய் வாக்குறுதிகள் கொடுத்தீர்கள்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ,விவசாயிகள் அவர்களை ஏமாற்றுகிறீர்கள்.
போதைப் பொருள் ஒழிப்போம் என்று ஏமாற்றுகிறீர்கள்.
நீங்கள் வெரி வொர்ஸ்ட் அங்கிள் என்று சொல்லி நக்கல் அடித்தார் ஜோசப் விஜய்.
எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சி இப்போது எப்படி இருக்கிறது என்று அவர் சொன்னதன் மூலம் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்பதை மறைமுகமாக சொல்கிறார் என்று பேச்சு வர தொடங்கி இருக்கிறது.
அதிமுக தொண்டர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார் அந்த கூட்டத்தில் விஜய்.
எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சியை கட்டி காப்பது யார்?எப்படி இருக்கு இன்னைக்கு அந்த கட்சி!
அப்பாவி தொண்டர்கள் சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள்.
சட்டமன்ற தேர்தலில் யாருக்கு ஓட்டு போடணும் யார் ஆட்சி அமையும் என அந்த அப்பாவி தொண்டர்களுக்கு தெரியும் என்று அவர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் மறைமுகமாக விஜய்
ஒரு பக்கம் பாஜகவை சாடுகிறார் விஜய் மதவாத கட்சி என்றும் சொல்கிறார்.
கிருஷ்ண ஜெயந்திக்கு வாழ்த்து சொல்லி இருக்கிறார் விஜய்.
இப்போது தொண்டர்களின் ஆதரவும் கடவுளின் ஆசியும் என்று அவரது அறிக்கையில் கடவுளைத் துணைக்கு அழைத்திருக்கிறார்.
இந்த முறை எடப்பாடி, ஜெயக்குமார் ,திமுக ,பாஜக என்று எல்லோரும் விஜய் வரிசை கட்டி விமர்சிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
ஆட்சியில் பங்கு என்பதை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தாலும் இன்று வரை அவரது கூட்டணிக்கு வர யாரும் தயாராக இல்லை .
அரசியல் நோக்கர்கள் எதிர்காலத்தில் விஜய் தவிர்க்க முடியாத சக்தியாக இருப்பார் என்கிறார்கள்.
அரசியலில் எதுவும் நடக்கலாம்…வெயிட் அண்ட் சீ தான்…!பார்க்கலாம்..!
Leave a comment
Upload