தொடர்கள்
உணவு
" உச்சியில் பறக்கும் பறக்கும் சிட்டு " - ஸ்வேதா அப்புதாஸ் .

பிரியாணி பிரியர்கள் உலகம் முழவதும் இருக்கிறார்கள் .

இந்தியாவில் அதிகம் என்றாலும் தமிழ்நாட்டில் பிரியாணி என்பது ஒரு அறுசுவை உணவு .

20250721161717286.jpg

பறக்கும் சிட்டு அரிசி பிரியாணி என்பது அனைவரையும் சுண்டி இழுக்கும் ஒன்று என்றால் மிகையாகாது .

தமிழகத்தில் நடக்கும் பெரும்பாலான திருமணங்களில் பறக்கும் சிட்டு அரிசியில் தான் பிரியாணி தயாரிக்க படுகிறது .

தற்போது பறக்கும் சிட்டு அரிசியின் விலை உச்சத்தில் பறந்து கொண்டிருக்கிறது என்பது அதிர்ச்சியான தகவல் .

ஒரு கிலோ பறக்கும் சிட்டு அரிசி 230 ரூபாய் விலையேற்றத்தால் இதன் விற்பனை தற்போது சரிந்துள்ளது வருத்தமான விஷயம்.

20250721161823960.jpg

ஒருவகை இயற்கை மணத்துடன் அனைத்து விழாக்களிலும் சுவையை கூடிக்கொண்டே போகும் பறக்கும் சிட்டு அரிசி விலையேற்றத்தால் கைக்கும் வாய்க்கும் எட்டாமல் உச்சியில் பறந்து விட்டது .

ஏன் இந்த விலையேற்றம் என்று கேட்டோம் ஊட்டி தாஜ் பிரியாணி ஹோட்டல் உரிமையாளர் கோபாலகிருஷ்ணனிடம்...

20250721162021183.jpg

" பிரியாணி என்றால் அது பறக்கும் சிட்டு அரிசியில் செய்தால் தான் அறுசுவையாக இருக்கிறது .

என் ஹோட்டலில் கடந்த முப்பத்திஐந்து வருடமாக பறக்கும் சிட்டு அரிசியில் தான் பிரியாணி வகைகள் தயார்படுத்துகிறோம் .

இந்த அரிசியின் இயற்கை வாசனை பிரியாணி ரெடியானவுடன் அந்த வாசமே ஒரு பிடிபிடிக்கலாம் என்று இழுத்து விடும் .

இந்த அரிசி மேற்கு வங்க வயல்களில் விவசாயம் செய்து அறுவடை செய்து இந்தியா முழுவதும் ஏன் உலகமுழுவதும் பயணிக்கிறது பிரியாணி ரெடியாக !.

ஒரு கிலோ பறக்கும் சிட்டு 99 ரூபாய் என்று துவங்கி 103, 118, 122,138,162, என்று உயர ..தற்போது கிலோ 230 என்று உயர்ந்து பறந்து சென்று தலை சுற்றவைத்துள்ளது .

ஒரு நாளைக்கு நூறு கிலோ அரிசி பிரியாணி தயாரிக்க உபயோகிக்கும் எங்களுக்கு இந்த விலை உயர்வு என்பது ஷாக்காக தான் இருக்கிறது .

இந்த விலை உயர்வுக்கு காரணம் மேற்கு வங்கத்தில் தென்மேற்கு பருவ மழை அதிகமாக மழை கொட்டி தீர்த்தத்தால் பறக்கும் சிட்டு அரிசி விளைச்சலின் மிக பெரிய பாதிப்பு ஏற்பட அது தான் விலையேற்றத்திற்கு காரணம் என்று கூறுகிறார்கள் .

சில வட இந்திய மொத்த அரிசி வியாபாரிகள் பறக்கும் சிட்டு அரிசியை பதுக்கிவிட்டனர் அதுவும் விலை உயர்வுக்கு காரணம் என்கின்றனர் .

நமக்கும் இந்த விலையேற்றத்தால் மிக பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது .

இன்னும் சில நாட்கள் காத்திருந்து பின் இது தொடர்ந்தால் பிரயாணியின் விலை ஏற்றப்படும் .

மற்ற ஒரு விஷயம் இந்த அரிசியை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வதும் ஒரு காரணமாக உள்ளது .

இந்தியாவில் பிரியாணி தயாரிப்பு பறக்கும் சிட்டு அரிசியில் தான் .

தமிழ்நாட்டிலும் இதே அரிசியில் தான் பிரியாணி .

சுற்றுலா தளமான ஊட்டியில் மட்டன் , சிக்கன் , மீட் பிரியாணி பறக்கும் சிட்டு அரிசியில் தயாரித்து அமோக சேல்ஸ் .

மத்திய மற்றும் மாநில உணவு துறை இதை ஆராய்ந்து அதிரடி விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை உணரவேண்டும்" என்கிறார் .

நீலகிரி மொத்த அரிசி வியாபாரி ஜெயராமனிடம் பேசினோம் ,

20250721162441762.jpg

மேற்கு வங்க வயல்வெளிகளில் விளையும் ஒரு அற்புத அரிசி வகை தான் பறக்கும் சிட்டு .

இதன் அபார விலையேற்றம் எங்களை அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது .

ஒரு கிலோ அரிசி 99 ஆக இருந்த பறக்கும் சிட்டு அரிசியின் விலை தற்போது கிலோவுக்கு 230 என்னும்பொழுது ஜீரணிக்க முடியவில்லை .

நம் மாவட்டத்திற்கு என்று நாங்கள் 20 டன் பறக்கும் சிட்டு அரிசி வாங்கிவந்தோம் .

இதன் விலை உயர்வு பறக்கும் சிட்டு அரிசி பறந்து விட்டது என்று தான் நினைக்க தோன்றுகிறது .

இந்தியா மற்றும் தமிழகத்தில் அதிகமாக அனைவரும் விரும்பி சுவைக்கும் நறுமணம் கமழும் அரிசி வகை மறைந்து விடுமோ என்று அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது .

இதற்கு காரணம் மேற்கு வங்கத்தில் அதிகமாக கொட்டி தீர்த்த பருவமழை நெற்கதிர்களை சாய்த்து அழித்து விட்டது .

20250721162704688.jpg

மழைக்கு பின் மீண்டும் விளைச்சல் ஏற்பட்டு பறக்கும் சிட்டு அரிசி அறுவடையானால் தான் இந்த விலையேற்றம் குறையும் .

பறக்கும் சிட்டின் நறுமணம் கமழும் பிரியாணி தொடருமா அல்லது பறந்து போகுமா என்று காத்திருந்து பாப்போம் " என்று வருத்தப்பட்டு கூறினார் .

வழக்கமாக காரிஃப் பருவமான ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரை தான் வடமாநிலங்கள் மற்றும் மேற்கு வங்கத்தில் நெல் விளையும் .

இந்த வருடம் தொடர்ந்து தென்மேற்கு பருவமழை அதிகமாக கொட்டி தீர்த்தத்தால் நெல் விளைச்சல் மிக பெரிய பாதிப்புக்குள்ளானது .

இனி மீண்டும் விளைச்சல் ஏற்படுமா என்பது சொல்லமுடியதா ஒன்று என்கின்றனர் மேற்கு வங்க விவசாயிகள் .

20250721162821616.jpg

பறக்கும் சிட்டு அரிசி என்பது சீரக சம்பா அரிசி!