மக்களவையில் மூன்று முக்கிய மசோதாக்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிமுகம் செய்துள்ளார். அரசியல் அமைப்பு சட்டத்தின் 130-வது சட்ட திருத்த மசோதா 2025 ஆகும். இந்த மசோதா நிறைவேற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதல் தந்தால் பிரதமர், மாநில முதலமைச்சர் அமைச்சர்கள் குற்ற வழக்கில் சிக்கி 30 நாட்கள் சிறையில் இருந்தால் 31-வது நாள் அவர்களை பதவியில் இருந்து நீக்கலாம் என்பதே சட்ட மசோதாவின் சாராம்சம். இந்த மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பதற்கு காரணம் பிரதமரை நீக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கும், முதலமைச்சரை நீக்கும் அதிகாரம் ஆளுநருக்கும், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் முதலமைச்சருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு முக்கிய காரணம் என்று உள்துறை அமைச்சர் குறிப்பிடுவது பதவியில் இருந்து கொண்டு சிறைவாசத்தையும் அனுபவிப்பது என்பது ஜனநாயக முரண் என்று குறிப்பிடுகிறார். பொதுவாக சர்ச்சையில் சிக்கிக் கொள்ளும் அமைச்சர்கள் தார்மீக பொறுப்பேற்று அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வார்கள். இப்போது அப்படியெல்லாம் இல்லை. இந்த மசோதா பாராளுமன்ற உறுப்பினர்களின் நிலை குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அரசியல் தலைவர்கள் பொது மேடையில் நாங்கள் ஊழலற்ற ஆட்சி அமைப்போம் என்று சொல்லி ஆட்சிக்கு வருகிறார்கள். அதன் பிறகு இது ஊழலற்ற ஆட்சி என்று பெருமை பேசுகிறார்கள். மடியில் கனமில்லை என்றால் எல்லாவற்றையும் எதிர் கொள்ளலாமே என்ற கேள்வியும் எழுகிறது.
Leave a comment
Upload