“ஏன்மா இப்படி விசனத்தோடு இருக்கீங்க”
என்னைத் தேடி வந்த சுப்ரியா கரிசனத்தோடு கேட்டாள்.
“ ஒரு பிரபல வார பத்திரிக்கை . ஐயாவும் அதுல சிறுகதை, நாவல்னு விடாம எழுதிகிட்டு இருப்பார்.
அவுங்க ஒரு நேர்காணல் வேணும்னு என்னை கேட்டாங்க சுப்ரஜா.
வெள்ளந்தியா சொன்னேனா. வெளிப்படையா சொன்னேனா.
எனக்கே தெரியல.அவுங்க கேட்ட கேள்விக்கு என் மனசுல பட்டதை எல்லாம் பட் பட்னு பதில் சொல்லிட்டேன்,
நான் அப்படி யெல்லாம் செல்லப்படாதாம். அவர் ரசிகர் கூட்டம் ஆளாளுக்கொரு கடிதம் எழுத ஆரம்பிச்சுட்டாங்க.
“நான் அவரைப்பற்றி அப்படி என்ன தப்பு சொன்னேன். எனக்கே தெரியல.’’
“நான் சொன்ன பதில் அவர் புகழுக்கு குந்தகம் தருமாம் .
முக நூல்ல, அவர் ரசிகர் பட்டாளம் பக்கம் பக்கமா
எழுதறாங்களாம்”.
எனக்கு வந்த இந்த சோதனைய என்னன்னு சொல்லுவேன்?
என் பேரை தான் அவருக்கு புனைப் பெயரா வச்சுகிட்டு எழுதினார். அது ஒன்னுதான் மா வெளி உலகத்துக்கு என்னை யாருன்னு சொல்லிச்சு.
அன்னிக்கு என் ஃபோட்டோவ கூட எந்த பத்திரிக்கையும் கேட்டு வாங்கிப் போடல..
எனக்கும் அதுல அதிகம் இண்டரெஸ்ட் இல்லை.
அவர் மறைஞ்சு பத்து வருஷ மாச்சு. இத்தனை நாளா மறந்துட்டு, இன்னிக்கி திடீர்னு ஒரு இன்டரவ்யூ கேட்டாங்க.
என்ன கேள்வி கேட்கப் போறீங்கன்னு எதுவும் கேட்கல, அவுங்க கேட்ட கேள்விக்கெல்லாம், எதையும் மறைக்காம, உள்ளதை உள்ளபடி சொன்னதுதான் என் தப்பா போச்சு.
நான் ஏதோ உளறிக்கொட்டின மாதிரி ஆளாளுக்கு தப்பு சொல்றாங்க.
“அப்படி என்னதான் மா சொல்லீட்டிங்க”
“அவரைப்பற்றி உங்க மதிப்பீடு என்னன்னு கேட்டாங்க”.
‘ஊருக்குன்னு வரும்போது அவர் நம்பர் ஒன் நல்லவர்.
நல்ல கணவரான்னு கேட்டா நாலாவது இடம் தான் தருவேன்னு” சொன்னேன்.
“இதில் ஒன்னும் தப்பு இல்லையே மா. உள்ளதை உள்ளபடி சொன்னீங்க. சார் வேலைக்கு போவார் வருவார்.
மீதி நேரம் பூரா சும்மா குந்திக்கினு எதையோ எழுதிகிட்டிருப்பாரு.
வீட்டுல என்ன நடக்குதுன்னு அவருக்கு ஒன்னுமே தெரியாது.விருது, விழா,மீட்டிங்னு போய்க்கிட்டிருப்பார். உங்க கிட்ட கல கலப்பா பேசி நான் பார்த்ததே இல்லையே.”
“எல்லா வேலையும் நீங்க தான் மா இழுத்து போட்டுட்டு செய்வீங்க. நீங்க தப்பா எதையுமே சொல்லலீங்களே”.
“இந்த உலகமே ஒரு வினோத மா இருக்கு சுப்ரியா.ஒன்னுமே புரியல.
அவங்களுக்கு பிடிச்ச நடிகர்னா, அவங்களைப் பற்றி ஆஹா ஓஹோன்னு புகழணும். இல்லைனா ரசிகர்களுக்கு கோபம் வந்துடும்.
அதைப் போலத்தான் வாசகர்களும். அவுங்க கட்டி வச்ச பிம்பம் கொஞ்சமும் சிதையக் கூடாதுன்னு நினைக்கிறாங்க..
ஆமாம் மா.அவங்க எழுத்தறமாதிரி தான் வாழ்க்கையிலயும் இருப்பாங்கன்னு அவுங்க நிஜமா நம்புறாங்க.
எழுத்து வேற. அவுங்க வாழற வாழ்க்கை வேற.
“ஞானபீடத்துல ஏத்தி வச்சாலும், இவங்களுக்கு இரண்டு முகம் எப்போதும் இருக்குங்கிற விஷயத்தை, வாசகர்கள் இன்னமும் தெரிஞ்சுக்கல சுப்ரியா.”
.
Leave a comment
Upload