மிருணாள் தாக்கூர்
ஒல்லியான இளைஞர்கள் தான் எனக்கு பிடிக்கும் என்று மிருணாள் தாக்கூர் பேசிய ஒரு பழைய பேட்டியை இப்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆக்கி தனுஷ்டன் காதல் என்று முடிச்சு போடுகிறார்கள்.
ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா ஜோடி சென்ற வாரம் நியூயார்க் நகரில் நடந்த உலகின் மிகப்பெரிய இந்திய தின அணிவகுப்பில் கலந்து கொண்டார்கள். அணிவகுப்பில் விஜய தேவர்கொண்டா ராஷ்மிகா தோளில் கை போட்டுக்கொண்டு நெருக்கமாக காட்சியளித்தார்.
கமல்-ரஜினி
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ,ரஜினி இணைந்து நடிக்கும் ஒரு படம் விரைவில் என்ற செய்தியை இயக்குனரே பரப்பி வருகிறார். இது இரண்டு கேங்ஸ்டர்கள் பற்றிய கதை என்றும் சொல்கிறார் .
சம்யுக்தா மேனன்
எனக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. தினம் அருந்த மாட்டேன். மனக்குழப்பம் அல்லது பதற்றம் அதிகரிக்கும் போது கொஞ்சம் குடிப்பேன்" என்கிறார் நடிகை சம்யுக்தா மேனன்.
ருக்மணி வசந்த்
நடிகர் யாஷ் நடிப்பில் கீது மோகன் தாஸ் இயக்கி வரும் பிரம்மாண்டமான படம் டாக்ஸிக் . இதில் கியாரா அத்வானி, நயன்தாரா ஆகியோர் நடிக்கிறார்கள். இப்போது இந்த படத்தில் ருக்மணி வசந்த் இணைந்து இருக்கிறார்.
Leave a comment
Upload