தொடர்கள்
சினிமா
ஷோலேக்கு வயது 50 - பால்கி

20250722220529101.jpg


சல்மான் கானின் தந்தை சலீம் கானும் ஜாவேத் அக்தரும் இணைந்து எழுதிய ஷோலே ஸ்கிரிப்டின் வசனங்கள் ஸ்டாண்ட்-அப் நகைச்சுவைகளில் இன்றும் கூட பயன்படுத்தப்படுகின்றன .

1975 ஆண்டில் இந்த படம் ரூ. 3 கோடி வசூல் செய்தது .

2025072222040014.jpg

ஷோலே பற்றி இப்போது எனக்கு ஒரு கூர்மையான நினைவு இல்லை எனினும், 50 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஒரு படம் இன்னும் பலரின் நினைவில் இருப்பதும், பலர் அதைக் கொண்டாடுவதும் உண்மையில் ஒரு நல்ல உணர்வு. அது விதிவிலக்கானது”. என்று அக்தர் பெருமிதம் கொள்கிறார்.

20250722220441204.jpg

தர்மேந்திரா, அமிதாப் பச்சன், ஜெயா பச்சன் ஆகியோருடன் இணைந்து நடித்த ஹேமா மாலினி 'இன்னோரு ஷோலே பண்றது கஷ்டம் தான்' என்று கூறுகிறார்கள்.

ரமேஷ் சிப்பி இயக்கிய ஷோலே திரைப்படம் ஆகஸ்ட் 15, 1975 அன்று வெளியிடப்பட்டது.

20250722220604216.jpg

ஆரம்பத்தில் மெதுவாகவே பிரபலமடைந்த இந்தப் படத்தின் புகழ் வாய்மொழியாக உயர்ந்து, ஒரு கலாச்சார நிகழ்வாகவே மாறியது.

படத்தின் மறக்க முடியாத கதாபாத்திரங்கள் மற்றும் உரையாடல்கள் இன்றும் எதிரொலிக்கின்றன என்பதைக் பெருமையோடு குறிப்பிடுகிறார் ஹேமமாலினி.

ஒரு படம் வெளியாகி ஐந்து தசாப்தங்கள் ஆன பிறகும் தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் இடம்பிடிப்பது அரிது.

ஷோலே வில் பசந்தியாக நடித்த ஹேமா மாலினி, ஆரம்பத்தில் இந்த படம் இவ்வளவு ஹிட் ஆகும் என்று நினைக்கவே இல்லை.

50 ஆண்டுகளுக்குப் பிறகு, நீங்கள் பாராளுமன்றத்தில் அதைப் பற்றி என்னிடம் ஒரு கேள்வி கேட்பது மகிழ்ச்சி ” என்று ஹேமா ANI இடம் கூறியிருக்கிறார்.

ஷோலே ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து மும்பை மினெர்வா தியேட்டரில் ஓடியது.

திரை இருட்டு… ஆனாலும் காட்சி நடந்தது

படத்தின் தயாரிப்பாளர் சிப்பி,”ஓரு நாள் தியேட்டரில் திரை இருட்டாக இருந்தது, ஆனால் ஆடியோ மட்டுமே இயங்கிக் கொண்டிருந்தது என்று கூறினார்.

ஆச்சரியப்படும் விதமாக, பார்வையாளர்கள் அமர்ந்து உரையாடல்களைக் கேட்டார்கள். ப்ரொஜெக்டரில் உள்ள கார்பன் சரியான நேரத்தில் மாற்றப்படவில்லை, இதன் விளைவாக மின்தடை ஏற்பட்டது என்பது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.

தடையற்ற திரையிடல்களை உறுதி செய்வதற்காக புதிய கார்பனை வழங்குவதற்காக ஒவ்வொரு நாளும் தியேட்டருக்கு நேரில் சென்றார்.

ஷோலே திரைப்படம் அவசரநிலை காலத்தில் வெளியிடப்பட்டது,

இரவு காட்சிகள் நள்ளிரவில் முடிவடைய வேண்டியிருந்தது, நான்கு காட்சிகள் கொண்ட அட்டவணையில் முதல் திரையிடல் காலை 9 மணிக்கு தொடங்க வேண்டியிருந்தது.

படத்தின் நீளம் வசூலைப் பாதித்தது என்றும் ரமேஷ் சிப்பி கூறினார், "படத்திலிருந்து 20 நிமிடங்களை குறைக்கச் சொன்னோம், படத்திலிருந்து எதைக் குறைக்கலாம் என்று எங்களுக்கு குழப்பமாக இருந்தது.

அஸ்ரானி மற்றும் ஜக்தீப்பின் நகைச்சுவைப் பாடல்களை நீக்கச் சொன்னதால், படத்தின் நீளத்தை 20 நிமிடங்கள் குறைத்தோம்".

திருத்தங்களுடன், ரன்னிங் டைம் 180 நிமிடங்களாகக் குறைந்தது. பார்வையாளர்கள் மாற்றங்களால் அதிருப்தி அடைந்தனர். என்று ரமேஷ் கூறினார். ".

ஷோலேயில் அமிதாப் பச்சன், தர்மேந்திரா, ஹேமா மாலினி, ஜெயா பச்சன், சஞ்சீவ் குமார் மற்றும் அம்ஜத் கான் ஆகியோர் கப்பர் சிங்காக நடித்தனர்.

20250722220649922.jpg

தர்மேந்திரா தனது வீரு வேடத்திற்காக ரூ.1,50,000/- பெற்றார்,ஜெய் வேடத்திற்காக அமிதாப் பச்சன் ரூ.1,00,000/- பெற்றார்.

ஜெய்லராக தாக்கூர் பல்தேவ் சிங்காக வந்த சஞ்சீவ் குமாருக்கு ரூ.1,25,000/-.

கொள்ளைக்காரன் கப்பர் சிங்காக நடித்த அம்ஜத் கானுக்கு ரூ.50,000/-.

ஹேமா மாலினியின் பசந்தி வேடத்திற்காக ரூ.75,000 சம்பளம் பெற்றார்.

அமிதாப் பச்சனின் ஜெய் மற்றும் தர்மேந்திராவின் வீரு இடையேயான நட்பு, தாக்கூராக சஞ்சீவ் குமாரின் பழிவாங்கும் திருப்பம் அல்லது இந்தி திரைப்பட வில்லனை மறுவரையறை செய்த பயங்கரமான கொள்ளையன் கப்பர் சிங்கின் அம்ஜத் கானின் சித்தரிப்பு படத்தின் பலங்களாக இருந்தன. அதுதான் 50 ஆண்டுக்கு பின்பும் பேசப்படுகிறது.

சலீம்-ஜாவேத் வடிவமைத்த இந்தக் கதை, ஜெய் மற்றும் வீரு (அமிதாப் பச்சன் மற்றும் தர்மேந்திரா) என்ற இரண்டு பிரபல குற்றவாளிகளைச் சுற்றி வருகிறது.

முன்னாள் ஜெயிலர் தாக்கூர் பல்தேவ் சிங் (சஞ்சீவ் குமார்) அவர்களை வேலைக்கு அமர்த்துகிறார். அவர் கொடூரமான கொள்ளைக்காரன் கப்பர் சிங்கை (அம்ஜத் கான்) வீழ்த்த பழிவாங்க முயற்சிக்கிறார்.

ஆகஸ்ட் 15, 1975 அன்று ஷோலே படம் வெளியிடப்பட்டு 50 ஆண்டுகள் ஆனதைக் குறிக்கும் வகையில் மகாராஷ்டிரா அஞ்சல் வட்டம் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட இரண்டு பட அஞ்சல் அட்டைகளையும், பிரத்யேக தங்க ரத்துச் சீட்டைக் கொண்ட ஒரு விளக்கக்காட்சிப் பொதியையும் வெளியிட்டது.

கப்பர் சிங் (அம்ஜத் கான்) ஓடும் ரயிலைக் கொள்ளையடிக்க முயற்சிப்பது, குதிரையில் துரத்துவது, துப்பாக்கிச் சூடு நடத்துவது மற்றும் ஜெய் மற்றும் வீருவுடன் சண்டையிடுவது போன்ற செம காட்சி, முழுக்க முழுக்க 'பாம்பவி பாடா' அருகே உள்ள பன்வேல்-உரான் ரயில் பாதையில் படமாக்கப்பட்டது.

பம்பாவி கிராமத்தில் வசிக்கும் 82 வயதான ஜனார்தன் நாமா பாட்டீல்,”குதிரைகள் ரயிலைத் துரத்துவது, வீரு கொள்ளையர்களுடன் சண்டையிடுவது, எரியும் நிலக்கரியை ஒரு வேகன் மீது வீசுவது, தீயை மூட்டுவது போன்ற காட்சிகளின் படப்பிடிப்பை இன்றும் நினைவு கூர்கிறார்.

ஷோலே திரைப்படத்தின் பாடல்கள் அந்த கால ட்ரான்சிஸ்டர் ரேடியோக்களில் நாடு முழுவதும் ஒலித்துக் கொண்டிருந்தது.