இலங்கையின் யாழ்ப்பாணம் அருகே நாகர்கோவில் வடக்கு முருகையா தேவஸ்தானத்தில் 7-ம் நாள் திருவிழாவின்போது முருகன் கோயிலில் மாம்பழத் திருவிழா, உலகப் பிரசித்தி பெற்ற முருகன்-விநாயகர் இடையிலான மாம்பழப் போட்டி நடந்தது. இதில், ‘உலகை முதலில் சுற்றி வந்து மாம்பழத்தைப் பெறுவது யார்?’ என்ற சரிந்திர போட்டியை பிரதிபலிக்கும் நாடகம் நடத்தப்பட்டது.இதன்பின் மயிலேறி முருகன் உலகைச் சுற்றிவர, சிவனையும், பார்வதியையும் விநாயகரோ வலம் வந்து மாம்பழத்தைப் பெற்றுக் கொண்டார். முருகன் கோயிலில் இச்சடங்குகள் முடிவடைந்ததும், அந்த மாம்பழத்தை கோயில் நிர்வாகிகள் ஏலம் விட்டனர். இதன் அடிப்படை தொகையாக ₹10 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டது.இத்தொகை அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில், மாம்பழ ஏலத்தின் தொலை ₹6 லட்சத்துக்கு சென்று நின்றது. பின்னர் சில நிமிடங்களில், அந்த மாம்பழம் அதிகபட்சமாக ₹10 லட்சத்துக்கு ஏலம் கேட்கப்பட்டது. முடிவில், அந்த மாம்பழத்தை ₹10 லட்சத்துக்கு மேல் ஏலம் கேட்க யாரும் முன்வரவில்லை! இதனால், அந்த மாம்பழம் ₹10 லட்சத்திற்கு ஏலம் கேட்ட நபரிடம் வழங்கப்பட்டது. அண்மையில் யாழ்ப்பாணம் ஸ்ரீ சிவசுப்பிரமணியர் கோயிலில் நடைபெற்ற மாம்பழத் திருவிழாவில், ஒரு மாம்பழத்தை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஒரு பக்தர் ₹4.60 லட்சத்துக்கு ஏலம் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a comment
Upload