
கடந்த பல வருடங்களாக நாம் ஸ்ரீ மஹாபெரியவா மற்றும் பல குருமார்களின் அனுகிரகத்தை, அவர்களின் அனுபவத்தை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இனி வரும் காலங்களில் இன்னும் பல அனுபவங்களை பல கோவில்களின் வரலாற்றை, அங்கு வாழ்ந்த மஹான்களை பற்றியும் பார்ப்போம்.
நடமாடும் தெய்வம் - பாகம் - 23
நாடக உலகில் மகளிரை மட்டும் வைத்து கடந்த 30 வருடங்களாக நாடகம் இயற்றி, இயக்கி , நடித்து வரும் பாம்பே ஞானம் அவர்கள், ஸ்ரீ மகா பெரியவாளின் வாழ்க்கை வரலாற்றை இணைய வழியில் நீண்ட தொடரை உருவாக்கியுள்ளார். அதனை நாம் வரும் வாரங்களில் பார்ப்போம்.
இந்த வாரம் இருபத்தி மூன்றாம் பாகம். சென்ற வாரத்தின் தொடர்ச்சி .
மூன்று விதமான பக்தர்கள் மூலம் மூன்றுவிதமான அனுகிரஹங்களை அளிகிறார் ஸ்ரீ மகா பெரியவா. தனக்கு சிரத்தையாக பொறி செய்து எடுத்துவரும் பாட்டி. தன் கடைமையை, வேலையை பக்தியோடு செய்யும் வெட்டியான், தன் தாயை இந்தியாவில் விட்டுவிட்டு அமெரிக்காவில் வசிக்கும் மகன் தன மகனை இந்தியாவில் வேதத்திற்கு அறிப்பணிக்கும் சூழல் என இந்தவாரம் மிக சுவாரஸ்யமான ஸ்ரீ பெரியவா அனுகிரஹங்கள்.

Leave a comment
Upload