தொடர்கள்
பொது
கேரக்டர் - 2 வேங்கடகிருஷ்ணன்

20260824213440416.jpg

செவிலியர் எல்லோருமே உயிர் காக்கும் தேவதைகள் தான். அப்படி ஒரு தேவதை தான் "சகாய மேஷா " - மூர்த்தி சிறிது , கீர்த்தி பெரிது " என்கிற வார்த்தைக்கு உதாரணம். நோயாளிகளிடத்தில் பரிவு, வேலையில் ஒழுங்கு, எப்போதும் முகத்தில் புன்முறுவல் , உடனே உதவி செய்யும் மன நிலையில் இருப்பவர் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். போட்டோவுக்கு போஸ் கொடுக்க மறுத்தவர்.. நான் மிகவும் வற்புறுத்திய பின்னரே சம்மதித்தார். விழுப்புரத்திலிருந்து சென்னைக்கு வந்து தன் முயற்சியில் , சொந்தக்காலில் நிற்கும் இந்த சிங்கப்பெண்ணுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தேன் , விகடகவியின் சார்பாக.

(பின் குறிப்பு: ஒரு முறை பார்த்து இதை நான் எழுதவில்லை, இரண்டு வருடமாய் தொடர்ந்து பார்த்த பின்பே இதை எழுதுகிறேன் )

பதிவுகள் தொடரும் ...