தொடர்கள்
பொது
"உங்க மொபைலில் மத்திய அரசின் பயனுள்ள 20 மொபைல் ஆப் இருக்கா?!" - ஆர்.ராஜேஷ் கன்னா

மத்திய அரசாங்கம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அவ்வப்போது புத்தம் புது மொபைல் ஆப் எனும் கேட்ஜட்ஸ்(Gadgets) களை அறிமுகப்படுத்தி வருகிறது. லேட்டஸ்ட் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் 20 மொபைல் ஆப்களை மத்திய அரசாங்கம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வெளியிட்டுள்ளது. இதனை ஒவ்வொரு இந்தியரும் டவுன்லோடு செய்து பயன்படுத்த வேண்டும் என்பதே டிஜிட்டல் இந்தியாவின் நோக்கம் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அந்தப் பயனுள்ள மொபைல் ஆப்கள் கீழே வரிசையாக தொகுக்கப்பட்டுள்ளது.

20180613183414888.png

இதற்குமுன் வெளிநாட்டிற்கு செல்லவேண்டும் எனில் பாஸ்போர்ட் அப்ளிக்கேஷன் வாங்கி அதனை பூர்த்தி செய்து பாஸ்போர்ட் அலுவலகத்தில் நேரடியாக தாக்கல் செய்து அங்கிருந்து விசாரணை செய்து பலநாட்கள் காத்திருந்து அதன் பின்பு போலீஸ் வெரிபிகேஷன் முடிந்து பாஸ்போர்ட் வருவதற்கு தாமதமாகி வந்த நிலையில் தற்போது பாஸ்போர்ட் டிஜிட்டல் முறையில் எளிதாக எங்கிருந்தாலும் பெறுவதற்கு mpassport seva ஆப் அறிமுகப்படுத்தப்பட்டு இயங்கி வருகிறது. இதனால் நேர விரயம் தடுக்கப்படுவதோடு உடனே பாஸ்போர்ட் கிடைத்துவிடும்.

20180611194641521.jpg

தேர்தல் ஆணையம் தேர்தல் முறைகேடுகளை தவிர்க்கும் பொருட்டு cVIGIL எனும் மொபைல் ஆப் அறிமுகமாகி உள்ளது. தேர்தல் நேரத்தில் எங்கு முறைகேடுகள் நடந்தாலும் அதனை வீடியோவாக அல்லது புகைப்படங்களாக தேர்தல் ஆனையத்திற்கு இந்த ஆப்பின் மூலம் அனுப்பினால் உடன் நடவடிக்கை எடுக்கப்படும். இதில் இன்னொரு சுவாரசியம், தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்த பின் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அல்லது அந்தக் கட்சி பிரமுகர்கள் பேசும் அவதூறான பேச்சுகளை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பினால் உரிய நடவடிக்கை எடுக்க இந்த மொபைல் ஆப் வடிவமைக்கப்பட்டுள்ளது.

20180611194719676.jpg

நாம் அவசரமாக பயணம் செய்யும் போது, நெடுஞ்சாலையில் விபத்து அல்லது அருகிலே இருக்கும் சிலரால் தொந்தரவு ஏற்படும்போது நமக்கு காவல்துறையின் உதவி தேவைப்படும். நாம் இருக்கும் இடத்தில் இருந்து அருகிலிருக்கும் காவல் நிலையம் அல்லது அந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலத்துடன் அல்லது மாவட்ட கண்ட்ரோல் நேரடியாக தொடர்பு கொண்டு உதவி பெற தொலைப்பேசி எண்களுடன் எந்நேரமும் Indian Police on call ஆப் செயல்படுகிறது. இதில் காவல்துறை சம்மந்தப்பட்ட அனைத்து தகவல்களும், அருகில் இருக்கும் காவல்நிலையத்தின் தூரமும் ,செல்லும் வழிப்பாதையை காட்டும் விதமாக இயங்குகிறது. இது அவசர காலப்பயன்பாட்டிற்கு அருகிலுள்ள காவல் நிலையம் எங்கிருக்கிறது என காட்டும் விதமாக வடிவமைக்கப் பட்டுள்ளதால் ஒவ்வொருவரும் தங்கள் மொபைல் ஆப்பில் இதனை டவுன் செய்து பயன்பெறலாம்.

20180611201141180.jpg

தற்போது இந்தியா முழவதும் நீட் தேர்வும், JEE தேர்வில் மாணவர்கள் அதிகமாக போட்டி போட்டுக்கொண்டு பங்கெடுத்து வருகின்றனர். அத்துடன் சிபிஎஸ்ஈ மாணவர்கள் NCERT புத்தகத்தை வாங்க நாட்கணக்கில் காத்திருக்க வேண்டும். இந்தியாவிலுள்ள எந்த மாணவரும், ஆசிரியரும் எந்த நேரத்திலும் NCERT புத்தகத்தை தங்கள் மொபைலில், டேப்லட் அல்லது கம்பியூட்டரில் படிக்க ePathshala ஆப் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் ஆப்பின் சிறப்பம்சம் நாம் விரும்பும் NCERT புத்தகத்தை டிஜிட்டல் வடிவில் படிப்பதுடன் குறிப்பிட்ட பாடத்தினை நமது மொபைலில் சேமிக்கமுடியும். அத்துடன் நமக்கு எந்த பாடம் தேவையோ அதை செலக்ட் அல்லது முன்னிலைபடுத்த (highlight) செய்யவும், அதனை நமது மொபைலில் தொட்டவுடன் அந்த பாடத்தினை தேர்வு செய்யும் (pinch) செய்யலாம். அத்துடன் இந்த பாடங்களை ஆடியோவாக கேட்கும் டிஜிட்டல் முறையில் செயல் படுவதால் மாணவர்களும், ஆசிரியர்களும் தங்கள் மொபைலில் இந்த ஆப் டவுன்லோடு செய்வது பயன் தரும்.

20180611194920430.jpg

உங்கள் டிரைவிங் லைசென்ஸ், இரு சக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனம் பதிவு சான்றினை டிஜிட்டல் முறையில் சரிபார்த்துக்கொள்ளலாம். அத்துடன் இரண்டாவது கைமாறும் காரின் பதிவு சரி பார்த்துக் கொள்ளலாம். அத்துடன் இரண்டாவது கைமாறும் காரின் வயது மற்றும் அதன் பதிவு விவரங்களை ஆர்.டி.ஒ அலுவலகம் சென்று நீண்ட நேரம் காத்திருக்காமல் உங்கள் மொபைலில் mParivahan ஆப் டவுன்லோடு செய்து கொண்டால், உங்கள் கைகளிலே அந்த வாகனங்களின் அத்தனை விவரங்களும் தெரிந்துவிடும்.

20180613184321458.png

இந்தியாவின் வளரும் தொழில் முனைவரின் கனவினை நினைவாக்கும் திட்டத்தினை எப்படி செயல்படுத்துவது என வடிவமைக்கப்பட்டது தான் இந்த startup India ஆப். இதில் தொழில் தொடங்க தேவையான அனைத்து தகவலகளும் சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தொழில் முனைவோருக்கு மத்திய அரசு திட்டங்கள், சலுகைகள் அரசின் புதிய தொழில் கொள்கை ஆகியவற்றை வழி காட்டும் சிறந்த ஆப்பாக இது செயல்படுகிறது. வளரும் தொழில் முனைவோர் ஒவ்வொருவரும் இந்த டிஜிட்டல் ஆப் தரவிறக்கம் செய்தால் அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

20180613184633702.png

தன்னார்வ தொண்டர்கள் சேவை இந்திய நாட்டின் வளர்ச்சிக்கு தேவை என்பதால் அரசாங்கத்துடன் சேர்ந்து தொண்டாற்ற விருப்பமுள்ளவர்கள் தங்களின் திறமைகளை மத்திய அரசின் பல்வேறு துறைகளுடன் சேர்ந்து தொண்டாற்றிடவும் Digisevak ஆப் செயல்படுகிறது. இதில் ஒவ்வொரு இந்தியரும் தங்கள் பெயரினை பதிவு செய்து அரசாங்க துறைகளில் தொண்டாற்றிட முடியும் என்பதே இந்த மொபைல் ஆப்பின் நோக்கம் ஆகும்.

20180611195508185.jpg

தற்போது நாடு முழவதும் செயல்படும் ஜிஎஸ்டி வரி விகிதம் மற்றும் ஒவ்வொரு பொருளுக்கும் எவ்வளவு ஜிஎஸ்டி என்ற விவரம் சாதாரண இந்திய குடிமகன் கூட அறிந்து கொள்ளும் விதத்தில் எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது GST Rate Finder ஆப்.

20180611200006925.jpg

மத்திய அரசின் மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சரவை மற்றும் தேசிய e Governance பிரிவுடன் மத்திய அரசின் அனைத்து துறைகளையும் ஒருங்கே இணைத்து ஒரே தளத்தில் இயங்கும் எளிமையான விரைவான சேவை வழங்கும் விதத்தில் இந்த UMANG (Unified Mobile application for new –age Governance) ஆப் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் டிஜிட்டல் இந்தியா சர்வீஸ் ஆதார், டிஜி லாக்கர் மற்றும் payGov துறைகள் இணைக்கப்பட்டுள்ளது.

20180611200250651.jpg

இந்தியர்கள் உள்நாட்டில் அல்லது வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்லும் போது அந்த பகுதி அல்லதுநாட்டின் அனைத்து விவரங்களும் அடங்கிய தகவல் களஞ்சியமாகவும், போக்குவரத்து, பயண முகவர், பிராந்திய நிலை குறிப்புகள் மற்றும் சிறப்பான ஒட்டல்களின் விவரங்கள் மற்றும் சிறந்த சுற்றுலா தளங்களை பற்றிய குறிப்புகளுடன் வழிகாட்டியாக Incredible India ஆப் தளம் செயல்படுகிறது.

20180611200327979.jpg

ஆதார் கார்டின் அனைத்து விவரங்களும் ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வரும் நிலையில் ஆண்ட்ராய்டு போன் வைத்திருப்பவர்களுக்காக இந்த mAadhaar ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் ஆப்பின் முலம் தனிநபர் தன் தகவல்களை QR code முலம் பெற முடியும். UIDAI திட்டம் முலம் தனிநபர் தன்னுடைய பயோமெட்ரிக் டேட்டாவை எந்த நேரத்திலும் பாதுகாப்பு கருதி ப்ளாக் செய்ய முடியும் என்பதே இதன் சிறப்பு ஆகும்.

20180611200400415.jpeg

இந்தியர்கள் அனைவரும் ரயிலில் பயணம் மேற்கொள்ளும் வகையில் IRCTC ஆப் அறிமுகமாகியுள்ளது. இதில் ரயில் டிக்கெட் முன்பதிவு, தட்கல் டிக்கெட் பதிவு, ரயில்களின் புறப்பாடு, வரும் நேரங்களின் விவரங்கள், எந்த ஊருக்கு எந்த ரயில் செல்கிறது என்ற தெளிவான அட்டவனைகள், முன்பதிவு செய்து நமது டிக்கெட் வெயிட்டிங் லிஸ்ட் கன்பார்ம் ஆகுமா என்ற விவரங்கள் முதலானவை உள்ளது. ரயிலில் பயணம் செய்யும்போது ஏற்படும் தொந்தரவுகள் யாரேனும் செய்தால் அவர்களிடம் இருந்து நாம் எப்படி இரயில்வே காவல்துறைக்கு தகவல் அளிப்பது போன்ற அனைத்து தகவல்களும் இதில் அடங்கியுள்ள அற்புதமான செயலியாக இது உள்ளது.

20180611200430512.jpg

இந்திய தபால் துறையின் அற்புத சேவையை நம் விரல் நுனியில் பெறும் பொருட்டு போஸ்டல் துறைக்கு நவீன டெக்னாலாஜியுடன் இணைந்து post info ஆப் வந்துள்ளது. இதில் நாம், நாடு முழதும் அனுப்பும் பார்சல்கள், பதிவு தபால்கள், மணியார்டர்கள், ஸ்பீடு போஸ்ட் போன்றவை அனுப்பிய நபருக்கு சென்றுவிட்டதா அல்லது சென்று கொண்டிருக்கிறதா என்பதை இந்த செயலி மூலம் தெரிந்து கொள்ளலாம். அத்துடன் நாம் அனுப்பும் பொருட்களுக்கு தபால் துறைக்கு எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டிய விவரங்கள் தபால் கால்குலேட்டர் என்ற பெயரில் இயங்குகிறது. தபால் துறையில் செயல்படுத்தப்படும் இன்சூரன்ஸ் பற்றியும் அதற்கு எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் அல்லது இன்சூரன்ஸ் மூலம் வாங்கிய கடனுக்கு எவ்வளவு வட்டி செலுத்த என்ற விவரங்களும் ப்ரிமீயம் கால்குலேட்டர் என்ற பெயரில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தபால் துறையில் ஆயுள் காப்பீட்டு நகர மற்றும் கிராம புறத்தில் இருப்பவர்களின் வசதிக்காக எவ்வளவு பிரிமீயம் செலுத்த வேண்டும் அல்லது பாலிசி முதிர்வு பெற்றதா போன்ற விவரங்கள் அனைத்தும் இந்த செயலி மூலம் எளிதாக அறிந்துக்கொள்ளலாம்.

20180611200508145.jpg

மத்திய அரசாங்கம் எப்படி செயல் படுகிறது என்பதையும் அதற்கு இந்திய குடிமகன்கள் தங்கள் ஆலோசனைகளையும் அல்லது புகார்களையும் MyGov என்ற ஆப் முலம் தெரிவிக்கலாம். இதனை மத்திய அரசிலுள்ள உரிய அமைச்சகத்துக்கு அனுப்பியும் அடுத்து என்ன மாற்றங்கள் அல்லது புதிய திட்டங்களை இந்திய குடிமக்களுக்கு பயனுள்ள வகையில் சேர்க்கலாம் என்ற நோக்கத்தில் இந்த செயலி செயல்படுகிறது.

20180613185718672.png

இண்டர்நெட் எவ்வளவு வேகத்தில் நமது மொபைல் அல்லது கம்பியூட்டரில் செயல்படுகிறது என்பதனை அறிய MySpeed(TRAI) என்ற ஆப் வந்துள்ளது. இதில் TRAI எனப்படும் தொலைதொடர்பு ஆணையத்துக்கு இண்டர்நெட் நமக்கு சொன்ன வேகத்தை விட குறைவாக அனுப்பும் நிறுவனங்கள் மீது குறைகளை சுட்டிகாட்டலாம். அத்துடன் இண்டர்நெட் நுகர்வோர் தங்கள் புகார்களை தங்கள் இண்டர்நெட் பெறும் சர்வீஸ் ப்ரொவைடரிடம் தெரிவிக்கலாம். இந்த செயலி மூலம் டேட்டா ஸ்பீடு , லோகேஷன் ஆகியவை தெரிந்துக் கொள்ளலாம். நமது தனிப்பட்ட தகவல்களை இந்த செயலி யாருக்கும் பகிராது என்பதே இதன் தனிச்சிறப்பு.

20180611200625439.jpg

ஆண்ட்ராய்டு செல்போன்களில் வரும் தேவையற்ற போன் அழைப்புகளை தவிர்க்கவும், தேவையற்ற குறுஞ்செய்தியை தடை செய்யவும், மொபைல் போனில் நமக்கு வரும் மிரட்டல்களை தடுக்கவும், மொபைல் போனிற்கு வரும் வைரஸ் தாக்குதல்களை தவிர்க்கவும் mKavach (Mobile Security Solutions) என்ற ஆப் செயல்படுகிறது.

20180613185951819.png

தூய்மை இந்தியா, பிரதமர் மோடியின் கனவு திட்டம்! இதனை செயல்படுத்தும் விதமாக இந்தியாவில் உள்ள அனைத்து முனிசிபல் மற்றும் கிராம பஞ்சாய்த்துக்களுடன் Swachh Bharat Abhiyaan என்ற ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் நாம் எந்த இடத்தில் இருந்தாலும் அங்கு குப்பைகள் கொட்டப்பட்டு அலங்கோலமாக இருந்தாலும் அல்லது சாக்கடை நீர் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் தேங்கியிருந்தாலும் அல்லது சாலை ஒரங்களில் மிருகங்கள் இறந்து துர்நாற்றம் அடித்தாலும் உடன் இதனை போட்டோ அல்லது வீடியோ எடுத்து அனுப்பினால் சம்பந்தப்பட்ட முனிசிபல் அல்லது பஞ்சாயத்துக்கு சென்றுவிடும். இதனை இந்த துறையினர் சீர் செய்யவில்லை என்றால் உடனே நமது புகாரின் மீது நடவடிக்கையில்லை என்பதனை மீண்டும் நாம் தெரிவிக்கும் விதமாக இந்த செயலி வடிவமைத்து செயல்படுகிறது. நாம் அனுப்பும் புகார்களில் எந்த இடம் என்று மட்டும் குறிப்பிட்டால் போதும் இந்த செயலி Geo-Location மூலம் உரிய துறைக்கு துல்லியமாக சென்று சேரும் .

20180611200755503.jpg

இந்தியா முழவதும் உள்ள வங்கிகள் அனைத்தும் டிஜிட்டல் முறையில் இணைக்கப்பட்டு ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (Unified Payment Interface-UPI) முலம் வங்கி கணக்கு வைத்திருப்பவர் பணம் அனுப்பவும் அல்லது பெறவும் BHIM என்ற ஆப் செயல்படுகிறது. இதில் பண பரிமாற்றம் UPI மூலம் தொலைபேசி எண், விலாசம் அல்லது QR Code முலம் மொபைலிருந்து அனுப்பலாம்.

20180611200840720.jpeg

ஆன் லைனில் வருமான வரிசெலுத்தவும், பான்கார்டு அப்ளை செய்யவும்,வருமான வரி துறையின் பலவித சேவைகளை டிஜிட்டலில் பெறலாம். அதுவும் வருமான வரிசெலுத்துவது ஆடிட்டரின்றி இதிலுள்ள வருமானவரி கால்குலேட்டர் உதவியுடன் கணக்கிட்டு நேரடியாக ஆன்லைன் மூலம் வருமான வரி செலுத்தலாம். இதில் TDS எனும் வருமான வரி பிடித்தம் முதல், அட்வான்ஸ் வருமான வரி எப்படி செலுத்துவது வரை எளிமையாக இந்த Aayakar Sethu ஆப் முலம் டிஜிட்டலில் வருமான வரிச்செலுத்தும் வசதியுள்ளது.

20180611200925599.jpg

இந்திய விவசாயிகள் வானிலை நிலவரம் உடனுக்குடன் அறிந்து பயிரிடவும் பயிர் பாதுகாப்பு செய்யவும், தங்களின் விவசாய பொருட்களுக்கு தற்போதைய மார்கெட் விலை நிலவரம் , விவசாயம் செய்வதற்கான லேட்டஸ்ட் டிப்ஸ், பயிர் மற்றும் செடி பாதுகாப்பு பற்றி அறிந்து, செழுமையான விவசாயம் செய்ய Kisan Suvidha ஆப் செயல்படுகிறது. இதனால் விவசாயிகள் தங்கள் விரல் நுனியில் வானிலை முதல் மார்கெட் நிலவரம் வரை இந்த டிஜிட்டல் ஆப் முலம் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.