தொடர்கள்
நொறுக்ஸ்
இஸ்ரோ சாதனை...

20180612182949236.jpg

உலகளவில் இந்தியா, ரஷ்யா, ஜப்பான், சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் விண்வெளியில் பல்வேறு ஆராய்ச்சிகள் தொடர்பாக நவீன ரக விண்கலங்களை தயாரித்து, அதில் தங்கள் நாட்டு வீரர்களை சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு அனுப்பி வருகிறது.


அவ்வாறு விண்வெளிக்கு ராக்கெட்டுகள் செல்லும் வழியில் விபத்து ஏற்பட்டாலோ, தனது பயணத்தை முடித்துவிட்டு பூமிக்கு இறங்கும்போது கடலில் விழுந்து நாசமானலோ அல்லது விண்வெளியில் சுற்றும்போது வெடித்து சிதறினாலோ, அதில் பயணம் செய்யும் வீரர்கள் பரிதாபமாக பலியாவது வழக்கம்.


இதைத் தடுக்கும் பொருட்டு, விண்வெளியில் இருந்து மனிதர்களை பத்திரமாக பூமிக்கு கொண்டுவர உதவும் கேப்ஸ்யூல் ரக பாதுகாப்பு சாதனத்தை இந்தியாவின் இஸ்ரோ விண்வெளி ஆய்வு நிறுவனம் சமீபத்தில் தயாரித்து, வெற்றிகரமாக சோதனை நடத்தி, சிறப்பான வெற்றி கண்டது.

20180612183049519.jpg

இந்த வருடம் பலகோடி மதிப்பில் இந்தியாவின் மிகப்பெரிய ராக்கெட் திட்டம் எதுவென்றால், அது சந்திராயனின் தொடர் விண்கலங்கள்தான். ஏற்கெனவே சந்திராயன் 1 ராக்கெட் வெற்றி அடைந்ததை தொடர்ந்து, தற்போது சந்திராயன் 2 ராக்கெட் தயாரிக்கும் திட்டப் பணிகள் வெகுவேகமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், சந்திராயன் 2 திட்டத்துக்கு முன், ஸீரோ எனும் முதல் கட்ட சோதனையாக கேப்ஸ்யூல் சாதனத்தை பரிசோதித்து இஸ்ரோ வெற்றி கண்டுள்ளது. இதன்மூலம் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் ஆரம்ப கட்ட சோதனையில் வெற்றி பெற்றுள்ளது.


இஸ்ரோ பல்வேறு அல்டிமேட் ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருந்தாலும், இதுவரை ஒருமுறை கூட மனிதர்களை விண்வெளி ஆராய்ச்சிக்கு அனுப்பியதில்லை. தற்போது முதல்கட்டமாக நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் பரிசோதனை திட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

20180612183124817.jpg

இதேபோல் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டங்களில், விண்வெளியில் மற்றும் தரையிறங்கும்போது ஏற்படும் பல்வேறு ஆபத்துகளில் இருந்தும் காலநிலை மாற்றங்களில் இருந்தும் மனிதர்களை பத்திரமாக தரையிறக்க உதவும் கேப்ஸ்யூல் எனும் பாதுகாப்பு சாதனத்தை சமீபத்தில் இஸ்ரோ உருவாக்கியுள்ளது.


பெயர் சூட்டப்படாத இந்த கேப்ஸ்யூல் கடந்த வாரம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ஆய்வு மையத்தில் இருந்து முதல் கட்ட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. பூமியில் இருந்து ராக்கெட் மூலம் சுமார் 2.5 கிமீ உயரத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் 2 பேரை ஏற்றி வந்த கேப்ஸ்யூல் பாதுகாப்பு சாதனம் பாராசூட் மூலம் பத்திரமாக தரையிறக்கப்பட்டு, அரபிக் கடலில் எவ்வித சேதாரமுமின்றி மிதந்து வெற்றியடைய வைத்துள்ளது என இஸ்ரோ வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

- ஸ்ரீ