முதல்வர் எடப்பாடி தன் அமைச்சரவை சகாக்கள் சிலருடன் பிரிட்டன், அமெரிக்கா மற்றும் துபாய் போன்ற நாடுகளின் தொழில் அதிபர்களை சந்தித்து, தமிழகத்தில் புதிய தொழில் முதலீடுகள் மூலம் புதிய தொழிற்சாலை துவங்க வேண்டும் என 13 நாள் வெளிநாட்டு பயணத்தினை யாரும் எதிர்பாராத நிலையில் அறிவித்து புறப்பட்டுச் சென்று விட்டார்.
ஜீலை 28-ம் தேதி லண்டன் சென்ற முதல்வர் எடப்பாடி உலகப் புகழ்பெற்ற கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை தமிழகத்தில் துவங்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை முடித்து கையெழுத்திட்டார்.. விழா முடிவில் தமிழக முதல்வருக்கு நம் ஊர் இட்லி பரிமாறப்பட்ட போது 'லண்டனில் கூட இட்லி கிடைக்குமாப்பா?' என்று கேட்டு சிரித்து விட்டு சாப்பிட்டார்.
ஆகஸ்ட் 1 தேதி லண்டலிருந்து அமெரிக்கா சென்ற முதல்வர் எடப்பாடி உலகத்தரம் வாய்ந்த பப்பலோ மாட்டு பண்ணைக்கு சென்று, தன் அமைச்சரவை சகாக்களுடன் பார்வையிட்டார். பப்பல்லோ மாட்டு பண்ணையில் மாடுகள் எப்படி ஆரோக்கியமாக வளர்க்கப்படுகிறது, நாளொன்றுக்கு எவ்வளவு லிட்டர் பால் கறக்க முடியும், தமிழகத்தில் பப்ப்லோ மாட்டு பண்ணையை வைக்க முடியுமா அதற்கான சாத்திய கூறுகள் இருக்கிறதா என்று அங்குள்ள கால்நடை மருத்துவர்களிடம் விலாவரியாக கேட்டு தெரிந்து கொண்டவர், தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் பப்பலோ பண்ணை போன்றே மிகபெரிய மாட்டு பண்ணை அமைக்கும் திட்டத்தினை துவங்க முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது.
ஆகஸ்ட் 3 தேதி நியூயார்க் நகரில் இருக்கும் 200 மேற்பட்ட தொழில் முதலீட்டாளர்களை முதல்வர் எடப்பாடி சந்தித்து பேசினார். முதல்வர் எடப்பாடி சென்னை ஃபோர்டு நிறுவனம் மற்றும் கேட்டர்பில்லர் போன்ற ஜாம்பவன் நிறுவனங்கள் தமிழகத்தில் எப்படி தங்கு தடையின்றி செயல்படுகிறது என்று அந்நிறுவன அதிகாரிகளை வைத்தே தொழில் முனைவோர்கள் முன்னிலையில் பேச வைத்து, தமிழகத்தில் நிலவும் அமைதியான சூழ்நிலையில் புதிய தொழிற்சாலைகள் மற்றும் தொழில் மூதலீடுகள் செய்ய அமெரிக்க தொழிலதிபர்களை வாயார அழைத்தார்...
முதல்வர் எடப்பாடியாரிந் உறுதிமொழி பேச்சுக்குப் பிறகு அமெரிக்காவின் 200 தொழில் அதிபர்கள் முன்னிலையில் தமிழகத்தில் 16 தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் தமிழகத்தில் வெளிநாட்டு நிறுவனம் ரு 2780 கோடி முதலீடு செய்வதென கையெழுத்தானது. தமிழகத்தில் அமெரிக்க நிறுவனங்கள் தொழில் தொடங்கினால், 20000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று கூட்டத்தில் முதல்வர் எடப்பாடியார் பெருமையாக தன் சக அமைச்சர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.
"வெளிநாடு செல்லும் முதல்வருக்கு வாழ்த்துக்கள்... முதல்வர் மூதலீட்டுடன் வந்தால் வாழ்த்துகிறேன், முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் தமிழக மக்களுக்கானதா அல்லது அவருக்கானதா என்பதனை வெள்ளை அறிக்கை சமர்பிக்க வேண்டும்" என்று தமிழக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆரம்பத்தில் முதல்வர் வெளிநாடு புறப்படும் போது சொல்லியிருந்தார். இப்போது ஸ்டாலின் என்ன செய்யப் போகிறார் என்று தெரியவில்லை!
முன்னதாக தமிழக முதல்வர் கோட், சூட் அணிந்து கம்பீரமாக நடந்து சென்று அந்நிய தொழில் முதலீட்டாளர்களின் கூட்டத்தில் பங்கு கொள்வது என்பது பாட்ஷா படத்தில் ரஜினி நடந்து வரும் காட்சியோடு ஒப்பீடாகி, பாட்ஷா பேக் கிரவுண்ட் மியூசிக் ஷுக்களின் சத்தத்துடன் ஹேஷ்டாகுகள் மற்றும் மீம்கள் சமூக வலைதளங்களில் சென்ற வாரம் படு வைரலாகியது. பல லட்சம் பேர் முதல்வரின் கோட் சூட் மேக்கப்பை எடப்பாடி 2.0 என்று சமூக வலைதளத்தில் ஜாலியாக பார்த்து ரசித்துச் சிரித்தனர். இவைகள் வெறும் நகைச்சுவை ஜோக்குகளாக இருக்காமல் போக வேண்டுமெனில் முதல்வர் கையெழுத்திட்ட அயல்நாட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நிஜமான தொழிற்சாலைகளாகவே தமிழகத்தில் உருவாகி நிலை பெற வேண்டும். நடக்குமா?! அப்படி நடந்தால்தான் நகைத்தவர்கள் ஜோக்காவார்கள்!
Leave a comment
Upload